This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

September 30, 2007

லியாகத்துடன் தொடர்பா? - நமீதா மறுப்பு!

லியாகத்துடன் தொடர்பா? - நமீதா மறுப்பு!


நூற்றுக்கணக்கான பெண்களை கல்யாணம் செய்து கொள்வதாக மோசடி செய்த லியாகத் அலிகானுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பற்றி லியாகத் அலிகான் வேண்டும் என்றே அவதூறாகக் கூறியுள்ளார் என நடிகை நமீதா கூறியுள்ளார்.
இணையதளம் மூலம் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டு, அவர்களிடம் உல்லாசமாகவும் இருந்த லியாகத் அலிகான் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார்.போலீஸாரிடம் லியாகத் கொடுத்த வாக்குமூலத்தில் பலமுறை நடிகைககள்
Click here for more images பலருடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் லியாகத் அலிகான். புன்னகை இளவரசி நடிகைக்கு பல லட்சம் கொடுத்து உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.மேலும், நமீதா, நக்மா ஆகியோருடனும் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு எழுந்தது.இந்த நிலையில் லியாகத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நமீதா மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படிப்பட்ட குற்றவாளிகள் என்னையும், நக்மாவையும் மட்டுமல்ல, எல்லா நடிகைககளையும் தெரியும் என்று சொல்வார்கள். அதற்காக போலீசார் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்த முடியுமா.என்னையும், நக்மாவையும் நண்பர்கள் என்று சொல்லியுள்ள அந்த குற்றவாளிக்கும், எங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று உறுதி படுத்த வேண்டியது போலீசாரின் கடமையாகும். இப்படிப்பட்ட செய்திகளால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகளாகிய நாங்கள் தான். இந்த செய்தி வந்ததிலிருந்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதுகுறித்து விசாரித்து போன்கள் வருகின்றன. லியாகத் அலி யாரென்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் அவருக்கும் எனக்கும் எப்படி தொடர்பு இருக்கும். என்னை பற்றி தவறாக செய்தி வரவேண்டும் என்பதற்காக சிலர் செய்த சதியாக கூட இருக்கலாம். லியாகத் அலிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதை நான் எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க நான் தயார் என்று கூறியுள்ளார் நமீதா.நக்மா பதில் என்னவோ?

அம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா


அம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா
குழந்தை பிறந்த பிறகு சூர்யாவின் மனைவி ஜோதிகா முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குப் போகிறார். மும்பையில் அம்மா வீட்டில் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கப் போகிறாராம்.

சூர்யாவை, காதலித்து கல்யாணமும் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு சமீபத்தில் அழகான Click here for more images பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தியா என்று பெயரிட்டுள்ளனர்.இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குச் செல்லவுள்ளார் ஜோதிகா. அங்கு ஒரு மாதம் தங்கி தாய் வீட்டில் சீராடவுள்ளாராம்.சூர்யா, வாரணம் ஆயிரம் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு ஒரு மாதம் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இந்த கேப்பில்தான் தனது தாய் வீட்டுக்குப் போய் வர விரும்பினார் ஜோதிகா. சூர்யா குடும்பத்தினரும் ஓ.கே. சொல்லி விட்டார்களாம். இதனால் தாய் வீட்டுக்குப் போகும் ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார் ஜோதிகா.சூர்யா அமெரிக்கா கிளம்பியதும், ஜோதிகா மும்பைக்குப் பறக்கிறாராம். ஜோதிகா தனது குழந்தையுடன் வருவதால் ரொம்பவும் மகிழ்ந்துபோயுள்ளனவர் அவரது அக்காவும் நடிகையுமான நக்மாதானாம்.ஜோதிகாவையும், அவரது குழந்தையையும் பார்த்துக் கொள்வதற்காக தனது படப்பிடிப்புகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டாராம் நக்மா. போஜ்புரியில் தற்போது நக்மா பிசியான நடிகை என்பது தெரியும்தானே.தியா பிறந்தபோது சென்னைக்கு வந்து பார்த்து மகிழ்ந்தார் நக்மா. அப்படியே ஜோதிகாவையும், சூர்யாவையும் உரித்து வைத்தது போல இருக்கிறதே குழந்தை என்று சந்தோஷப்பட்டாராம்.நக்மா உள்ளிட்ட ஜோதிகா குடும்பத்தினர் எழுதிக் கொடுத்த பெயர்களில் ஒன்றுதான் தியா. அதையே, சூர்யா குடும்பத்தினர் குழந்தைக்கு வைத்ததால் நக்மா உள்ளிட்டோருக்கு ரொம்ப சந்தோஷமாம்.தங்கையையும், அவரது குழந்தையையும் ஒரு மாதத்திற்கு நன்றாக கவனித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் நக்மா.நல்ல பெரியம்மா!

September 29, 2007

திமுக பந்த்துக்கு தடை இல்லை; அரசுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு!

திமுக பந்த்துக்கு தடை இல்லை; அரசுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு!
சென்னைதிமுக கூட்டணி சார்பில் அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் நடத்தப்படவுள்ளது முழு அடைப்பு அல்ல, பந்த் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம், இதற்கு தடை விதிக்க அது மறுத்து விட்டது. மாறாக, மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவிதத்தலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு அது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அக்டோபர் 1ம் தேதி திமுக கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல ஜனதாக் கட்சி மற்றும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆகியாரும் வழக்குத் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் அனைத்தும் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆதியார் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, இது பந்த் அல்ல, முழு அடைரப்புப் போராட்டம்தான். போராட்டத்தின்போது எந்தவித வன்முறையும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இது சட்டவிரோதமானது. பந்த் நடத்துவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே திமுக போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாதுகாப்பு தொடர்பாக அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்றைக்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.இதைப் பரிசீலித்த நீதிபதிகள், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருப்பது ஸ்டிரைக் அல்லது ஹர்த்தால் அல்ல, பந்த் என்று தெளிவாகத் தெரிய வருகிறது.இதை எதிர்த்து அதிமுக, ஜனதாக் கட்சி, டிராபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்துள்ள மனுக்களை விசாரணைக்கு ஏற்கிறோம். இவர்களது மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட பந்த்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.அதேசமயம், இந்த முழு அடைப்பை நடத்த தடை விதிக்க விரும்பவில்லை. அதேசமயம், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்துப் பொது போக்குவரத்தும் சுமூகமாக, இயல்பாக, வழக்கம் போல நடைபெற வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பத்திரிக்கைகளில் அரசு விரிவாக விளம்பரம் செய்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.போக்குவரத்தைத் தடை செய்ய முயல்வோர், பொதுமக்களின் இயல்பான நடவடிக்கைகளுக்குத் தடை செய்ய முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு: 41 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை; மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை!

கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்படுவதாக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.அப்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் விடுதலையாக நீதிமன்றம் அனுமதித்தது.இவர்கள் தவிர அல் உம்மா பாஷா, அன்சாரி உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.முதலில் மதானி உள்ளிட்ட 8 பேரும் நிரபராதிகள் என கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்திராபதி அறிவித்தார்.இதையடுத்து சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான 80 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட ஆரம்பித்தார். முதற்கட்டமாக இன்று 41 பேருக்கு தலா 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.இதில் 25 பேருக்கு தலா 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், 10 பேருக்கு தலா 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.இவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி அறிவித்தார். எனவே தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே சிறையில் 9 வருடங்களுக்கு மேலே இருந்திருப்பதால் 41 பேரும் விடுதலை ஆனார்கள்.விடுவிக்கப்படுகிறவர்கள் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேசக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தொடர்ந்து தண்டனை விவரத்தை நீதிபதி உத்திராபதி நாளை அறிவிப்பார் என்று தெரிகிறது.தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனை மற்றும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெஞ்சு வலி என வந்த பெண்ணிடம் சில்மிஷம் - டாக்டர் கைது

சென்னை:நெஞ்சு வலிப்பதாக கூறி சிகிச்சை பெற வந்த பெண்ணின் மார்பில் கை வைத்து சில்மிஷம் செய்த டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை திரு.வி.க.நகர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் பாலாஜி. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஷர்ளினி மோசிஸ் (27) என்ற பெண் நெஞ்சு வலிப்பதாக கூறி சிகிச்சைக்காக வந்தார்.அப்போது பாலாஜி, சோதித்துப் பார்ப்பதாக கூறி ஷர்ளினியின் மார்பில் கை வைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அலறி அடித்து வெளியே ஓடி வந்த ஷர்ளினி இதுகுறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் டாக்டர் பாலாஜியைக் கைது செய்தனர்

ஷெரீப் நாடு கடத்தல்: பாக். பிரதமருக்கு சம்மன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சவுகத் அஜீஸ் உட்பட 11 பேர் விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து நாடு திரும்பினார். ஆனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேறவிடாமல், வேறொரு விமானத்தில் ஏற்றி சவூதிக்கு மீண்டும் நாடு கடத்தியது முஷாரப் அரசு. இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அதைப் புறக்கணித்து விட்டு ஏன் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினீர்கள் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி பிரதமர் அஜீஸ், பஞ்சாப் முதல்வர் செளத்ரி பர்வேஸ் இலாஹி உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற தலைமை நீதிபதி, வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பாண்டிங் பளார் பேச்சு: பதிலடி தருமா இந்தியா? நாளை முதல் ஒரு நாள் போட்டி

பெங்களூர்: 20-20 உலகக் கோப்பையை வென்றதை பெரிதாக நினைக்கும் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியா நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பியது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.பெங்களூரில் முதல் போட்டி நடக்கிறது. கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை அதே உத்வேகத்துடன் சந்திக்கத் தயாராக உள்ளனர்.மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், ஜாகீர்கான், சச்சின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு மேலும் பலத்தை அளித்துள்ளது.ஆனால் நேற்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகக் கோப்பையை வென்றது நடந்து முடிந்து போன விஷயம். இந்திய வீரர்களின் பலவீனம் எங்களுக்கு தெரியும். குறிப்பாக கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோரை அவுட்டாக்குவது எளிது.இந்திய வீரர்களுக்குத்தான் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. எனவே இந்தியாவுடனான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார். இதற்கு ராபின் உத்தப்பா சரியான பதில் அளித்திருந்தார். ஆஸ்திரேலியாவை வெல்வோம் என்று அவர் கூறியிருந்தார்.இந்தப் பின்னணியில், நாளை பெங்களூரில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.டோணி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் ஒரு நாள் போட்டித் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தம் 7 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.இந்திய அணி வீரர்கள்: டோணி (கேப்டன்), டிராவிட், சச்சின், கங்குலி, காம்பிர், யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, ஜாகீர்கான், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங், ரோகித் சர்மா, ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், ரமேஷ் பவார்.

முஷாரப் போட்டியிட தடை நீங்கியது; எதிர்க்கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி!

முஷாரப் போட்டியிட தடை நீங்கியது; எதிர்க்கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி!

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன் மூலம் முஷாரப் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது. இதில் முஷாரப் போட்டியிடுகிறார். ராணுவத் தளபதி பதவியில் இருந்தபடி முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த பெஞ்சுக்கு நீதிபதி ரானா பகவான்தாஸ் தலைமை தாங்கினார் (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இப்திகார் செளத்ரியை நீக்கி விட்டு, இவரைத்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக முஷாரப் நியமித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்)இன்று நீதிபதி பகவான்தாஸ் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதன்படி, முஷாரப் போட்டியிடுவதை எதிர்ப்பதற்காக கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.9 நீதிபதிகளில் 6 பேர் முஷாரப்புக்கு எதிரான வாதங்களை நிராகரித்ததால், மெஜாரிட்டி அடிப்படையில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி ராணா பகவான்தாஸ் அறிவித்தார்.

வெள்ள அபாயம்: அணைகளில் தண்ணீர் திறப்பு

நாகர்கோவில்:பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருப்பதால், இரு அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து. அணைகளின் நீர் பிடிபபு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தண்ணீர் பாயும் திருவட்டார், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதிகள், பரளியாறு கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வருவாய் துறையினரால் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பேச்சிபாறை அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 276 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறத்துவிடப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணைக்கு 668 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 720 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

September 28, 2007

ஏரி, கால்வாய் சீரமைப்புக்கு ரூ.2500 கோடி

நாகர்கோவில்:தமிழகத்தில் ஏரி, கால்வாய் போன்றவற்றை சீரமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணி துறை செயலளர் ஆதிசேஷய்யா தெரிவித்துள்ளார்.தமிழக பொதுப் பணி துறை செயலாளர் ஆதி சேஷய்யா குமரி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென புத்தன்துறையில் ரூ.3.50 கோடி செலவிலும், இணையம்கிழக்கில் ரூ.3 கோடி செலவிலும், துண்டில் வளைவுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.வள்ளவிளையில் ரூ.80 லட்சம் செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பெரிய காட்டில் ரூ.4.75 லட்சம் செலவில் தூண்டில் வளைவு விரிவாக்க பணியும் நடைபெற்று வருகிறது.ராமன்துறையில் ரூ.33 லட்சம் செலவிலும், ராஜக்கமங்கலம் துறையில் ரூ.1.41 கோடி செலவிலும், வாணிக்குடியில் ரூ.33 லட்சம் செலவிலும், கோடிமுனையில் ரூ.22 லட்சம் செலவிலும் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் கால்வாய் மற்றும் ஏரிக் குளங்களை சீரமைக்க ரூ.2500 கோடியை உலக வங்கி வழங்கியுள்ளது. காவிரி கால்வாய் பகுதிகள் இதுவரையிலும் சீரமைக்கப்படவில்லை. இதனை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றார் அவர்.

லஞ்சம் வாங்குகிறார்கள் - ஊழல் நடக்கிறது' 'பப்ளி'க்காக ஒப்புக் கொண்ட திமுக எம்.எல்.ஏ!!

'லஞ்சம் வாங்குகிறார்கள் - ஊழல் நடக்கிறது' 'பப்ளி'க்காக ஒப்புக் கொண்ட திமுக எம்.எல்.ஏ!!

சென்னை:அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் நடக்கிறது என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரங்கநாதன் பட்டவர்த்தனமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புறநகரான அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிணறுகளிலிருந்து தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான லாரிகள், சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதாகவும், அம்பத்தூர் ஏரியே வறண்டு போய் விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இதைத் தடுத்து நிறுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் சாலை மறியல் போராட்டத்தை நேற்று நடத்தின. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயப்பாக்கம் செல்லும் சாலையில் இவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பின்னர் அம்பத்தூர் தாலுகா அலுவலகம் நோக்கி அனைவரும் ஊர்வலமாக சென்றனர். ஆனால் போலீஸார் தலையிட்டு அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.போராட்டம் குறித்து அறிந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் ஆகியோர் அங்கு வந்து மக்களிடம் அவர்களின் பிரச்சினை குறித்துக் கேட்டனர். பின்னர் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ புரசைவாக்கம் ரங்கநாதன் அங்கு வந்தார். அவருடன் அம்பத்தூர் நகராட்சித் தலைவர் சேகர் மற்றும் அதிகாரிகளும் வந்தனர்.கூட்டத்தினரை ரங்கநாதன் சமாதானப்படுத்தினர். எம்.எல்.ஏவைப் பார்த்ததும், அப்பகுதியில் மோசமான நிலையில் இருக்கும் சாலையின் அவலத்தைக் குறித்து பொதுமக்கள் புகார் கூறினர்.அதற்கு எம்.எல்.ஏ சமீபத்தில்தான் இப்பகுதியில் புத்தம் புதிய சாலை போடப்பட்டதாக கூறினார். இதைக் கேட்டதும் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொய் சொல்லாதீர்கள். இங்கு சாலை போட்டு பல வருடங்களாகிறது என்று ஆவேசமாக குரல் கொடுத்தனர்.இதைக் கேட்டதும் ரங்கநாதன் நெளிந்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், சரி சாலை போடவில்லை. அதிகாரிகள் தங்களது பணிகளைச் சரிவர செய்வதில்லை. லஞ்சம் வாங்குகிறார்கள், ஊழல் நடக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். அரசியல்வாதிகளும்தான் லஞ்சம் வாங்குகிறார்கள்.அதை நான் மறுக்க முடியாது, நீங்களும் மறுக்க முடியாது, தா. பாண்டியனும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் நீங்கள் தட்டி கேட்க வேண்டாமா என்று பேசினார்.அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தனது பேச்சின் போக்கை உணர்ந்த ரங்கநாதன் சட்டென சுதாரித்துக் கொண்டு, தனியார் வாட்டர் டேங்கர் லாரிகள் அம்பத்தூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.இதையடுத்து எம்.எல்.ஏ.வின் உறுதிமொழியை ஏற்று கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நடத்தி வந்த சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஈரான்: 12 பெண்களைக் கற்பழித்த 3 பேருக்கு பொது இடத்தில் தூக்கு!

ஈரான்: 12 பெண்களைக் கற்பழித்த 3 பேருக்கு பொது இடத்தில் தூக்கு!

டெஹ்ரான்:ஈரானில் 12 இளம் பெண்களை கடத்திக், கற்பழித்து, கொள்ளை அடித்த 3 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஹாதி ஜபர்தபார், மிர்ஹாதி மிர்தாகி, செய்யத் ஷோஜா மெளஸாசாதே ஆகிய அந்த மூன்று பேரும், 3 ஆண்டுகளுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.முதலில் பெண்களிடம் நைச்சியமாக பேசிக் கடத்திச் செல்வர். பின்னர் கற்பழித்து விட்டு அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.இவர்களிடம் சிக்கிய ஒரு பெண், கற்பழிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பெரும் பணத்தைக் கொடுத்து மீண்டார். அவர் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் தீவிர வேட்டை நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களது இன்னொரு கூட்டாளியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதில் மேற்கண்ட 3 பேரின் அப்பீலும் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து வடக்கில் உள்ள பபூல் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.நான்காவது நபரின் அப்பீல் மனு மீது இன்னும் விசாரணை முடிவடையவில்லை. அவரது மனு நிராகரிக்கப்பட்டால் அவரும் இதுபோலவே பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார் என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலான தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில்தான் நிறைவேற்றப்படும். கடந்த ஜூலை மாதம் முதல் மரண தண்டைன நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 60 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில் செப்டம்பர் 5ம் தேதி மட்டும் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை 210 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லீம் இடஒதுக்கீடு: ஆந்திராவுக்கு உச்சநீதிமன்றம் தடை


ஆந்திர கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொண்டு மாணவர்களை சேர்க்க, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.எனினும் முஸ்லீம் இட ஒதுக்கீட்டின் கீழ் இதுவரை நடந்துள்ள மாணவர் சேர்க்கையை இது எவ்விதத்திலும் பாதிக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பான உத்தரவை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்தது. மேலும், இவ்வழக்கில் விளக்கம் அளிக்க ஆந்திர அரசு அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கை அக்டோபர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.ஆந்திராவில் உள்ள தொழில்நுட்ப மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் செப்டம்பர் 30ம் தேதி நிறைவடைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆந்திராவில் தொழில்நுட்ப மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர அரசு உத்தரவிட்டிருந்தது.

துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்

துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

துபாய்:திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு நாளை (28ம் தேதி) துபாயில் நடைபெறவுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது,முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மொபைல் போன்களில் 'ஒன்இந்தியா' செய்திகள்

மொபைல் போன்களில் 'ஒன்இந்தியா' செய்திகள்
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

பெங்களூர்:'ஒன்இந்தியா' இணையதளத்தின் செய்திகளை இனி WAP தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்களில், அவரவர் தாய்மொழியில் அறிந்து கொள்ளலாம்.உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் வழங்கி வரும் நமது ஒன்இந்தியா.இன், மொபைல் போன்களிலும் இனிமேல் செய்திகளை அறிந்து கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் செய்திகள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், தியேட்டர் ஷோக்கள் ஆகியவற்றை WAP வசதியுடன் கூடிய மொபைல் போன்களில் அறிந்து கொள்ளலாம்.இதுகுறித்து கிரேணியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் போன்கள் பெரும் புரட்சியைப் படைத்து வருகின்றன. அதனால்தான் இந்த வாப் வசதி கொண்ட செய்தித் தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.இந்தியாவில் ஐந்தில் ஒருவர், இன்டர்நெட்டுடன் கூடிய மொபைல் போனைப் பயன்படுத்துவதாக டிராய் தகவல் கூறுகிறது. கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மொபைல் போனாக இருந்தாலும் சரி, மக்களுக்கு செய்திகளை உடனக்குடன் தருவதில் நாங்கள் அக்கறையுடன்

வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு

வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவை:முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பாஜக எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ராமர் குறித்து அவதூறாகப் பேசும் கருணாநிதியின் நாக்கையும், தலையையும் கொண்டு வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும் என அறிவித்தார் வேதாந்தி.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். சில நீதிமன்றங்களில் வேதாந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையிடமும் புகார் கொடுக்கப்பட்டது.சென்னை போலீஸாரிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல கோவையில் குமார் என்ற வழக்கறிஞர் வேதாந்தி மீது நடவடிக்ைக எடுக்கக் கோரி மாநர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.அதன் பேரில் தற்போது வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காய்ச்சல் எதிரொலி: ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை!

காய்ச்சல் எதிரொலி: ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை!
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

சென்னை:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பரவி வருவதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திலும், விடுதிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 15 மாணவர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கரீஷ்மா என்ற மாணவியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து மாணவ, மாணவியர் 15 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இவர்களில் உபி. மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கரீஷ்மாவின் உடல் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமான நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தவிர மேலும் இரு மாணவர்களும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால் மாணவ, மாணவியரிடையே மட்டுமல்லாது ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரும் பீதியடைந்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரீஷ்மா பிரதான் என்ற மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. அவருக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படும் என்பதால் அவராகவே மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த 21ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைக் காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருக்கிறார். இதேபோல துர்கேஷ், ஆஷிஷ் பானர்ஜி ஆகிய இருவரும் கூட அப்பல்லோவில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் ஆஷிஷ் பானர்ஜி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். துர்கேஷும் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். அவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலேயே அப்பல்லோவில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.மற்ற மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். விடுதி சுகாதாரமாக இல்லை என்று வந்த புகாரைத் தொடர்ந்து நானே நேரில் சென்று பார்த்தேன்.மாணவர்களுக்கிடையே காய்ச்சல் பரவுவதால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 100 கோடியை ஒதுக்கியுள்ளார். அதில் விடுதி மேம்பாட்டுக்கு மட்டும் ரூ. 25 கோடியை ஒதுக்கியுள்ளோம்.மாணவர் விடுதிகள் நான்கிலும் சுகாதார நடவடிக்கைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கையை கவனமுடன் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.

சாமி கும்பிட வந்த 4 பெண்கள் கற்பழித்துக் கொலை-4 பேர் கைது

சாமி கும்பிட வந்த 4 பெண்கள் கற்பழித்துக் கொலை-4 பேர் கைது
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

சாத்தூர்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நான்கு பெண்களைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொன்ற நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தென் மாவட்ட மக்களிடையே மிகவும் பிரபலமானதாகும். திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் போல இதுவும் வெகு பிரசித்தி பெற்ற அம்மன் தலமாகும்.இங்கு பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனுக்குப் பொங்கல் வைத்து, மொட்டைப் போட்டு, நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். கடந்த 15ம் தேதி இருக்கன்குடி அம்மன் கோவில் அமைந்துள்ள வைப்பாறு பகுதியில் பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அந்தப் பெண் கற்பழித்துப் பின்னர் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.அவரது பெயர் ஜெயலட்சுமி என்பதும், கோவில்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன் என்பவரின் மனைவி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அவர் கற்பழித்துக் கொலை செசய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், சுப்புராஜ் என்பவரின் தலைமையில் ஒரு கும்பலே இதுபோல பெண் பக்தர்களை கற்பழித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வருவது தெரிய வந்தது.இதையடுத்து சுப்புராஜை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடன் இருந்த வளையல் கடைக்காரர் பாலமுருகன், பாத்திரக் கடைக்காரர் மாரிமுத்து, இன்னொரு வளையல் கடைக்காரர் ராஜ்குமார் ஆகியோரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.ஜெயலட்சுமி உள்பட நான்கு பெண் பக்தர்களை இதுபோல கற்பழித்துக் கொலை செய்ததாக கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். மேலும் தங்களது கும்பலில் மேலும் 3 பேர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களைப் போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.புகழ் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்களை கற்பழித்துக் கொன்ற செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தமிழ் பாதிரியார் சுட்டுக் கொலை

இலங்கையில் தமிழ் பாதிரியார் சுட்டுக் கொலை
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

மன்னார்:இலங்கையின் மன்னார் மாவட்டம் வெள்ளங்குளம் பகுதியில், தமிழ் பாதிரியார் ரஞ்சித்தை இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொகான்றனர். அவருடைய உதவியாளர் படுகாயமடைந்தார்.புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவ இடத்திலேயே பாதிரியார் ரஞ்சித் பலியானார். குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், அவருடைய உதவியாளர் ஜூலின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அரசு வசம் உள்ள மன்னார் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் வசம் உள்ள மன்னாருக்கு ரஞ்சித்தும், அவருடைய உதவியாளரும் வந்தனர். ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக அவர்கள் வந்தபோது வெள்ளங்குளம் பகுதியில் ராணுவம் பாதிரியாரை சுட்டுக் கொன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பஞ். தலைவர் பதவியை காத்த பெரியசாமி!

பஞ். தலைவர் பதவியை காத்த பெரியசாமி!
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவில்பட்டி:கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மல்லிகாவுக்கு எதிராக கூட்டணிக் கட்சியான திமுகவினரே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி தலையிட்டு மல்லிகாவின் பதவியைக் காப்பாற்றினார்.கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருப்பவர் மல்லிகா. இவர் மீது நம்பிக்கை இல்லா கொண்டு வர திமுக, அதிமுக, மதிமுக என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள் முடிவு செய்தனர். மல்லிகாவின் கட்சியும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக திருநெல்வேலி நகராட்சி மண்டல இணை இயக்குனரிடம் 26 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.20ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் இணை ஆணையர் மோகன் விடுப்பில் போய் விட்டார்.இதனால் கவுன்சிலர்கள் குழப்பமடைந்தனர். கடைசியில்தான் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் தலையீடு இதில் இருந்தது தெரிய வந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகராட்சித் தலைவர் பதவியை காக்கும்படி மேலிடத்திலிருந்து பெரியசாமிக்கு உத்தரவு வந்ததாம்.இதையடுத்து அவர் இணை இயக்குநரை விடுமுறையில் போகுமாறு அறிவுறுத்தினாராம். இதன் மூலம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவியின் பதவியைக் காப்பாற்றி கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளாராம்.

கருணாநிதி, ராவணன் கொடும்பாவிகளை எரிக்க காங். தலைவர் கோரிக்கை!

கருணாநிதி, ராவணன் கொடும்பாவிகளை எரிக்க காங். தலைவர் கோரிக்கை!
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

ஜலந்தர்:வருகிற தசரா பண்டிகையின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணன் ஆகியோரின் கொடும்பாவிகளை நாட்டு மக்கள் எரிக்கு வேண்டும் என அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணித் தலைவரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான மணீந்தர் சிங் பிட்டா கோரிக்கை விடுத்துள்ளஆர்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிட்டா, பலமுறை தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து உயிர் தப்பியவர். இந்தத் தாக்குதலில் அவரது கால் பறி போய் விட்டது. இதையடுத்தே அவர் பயங்கரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்தார்.இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்க வேண்டும் என 'பயங்கரமான' ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற தசரா பண்டிகையின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணனனின் கொடும்பாவிகளை சேர்த்து எரிக்க வேண்டும்.ராமர் குறித்து அவதூறாகப் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.அரசியல்வாதிகள் மக்களின் இறை நம்பிக்கையோடு விளையாடக் கூடாது. அது மத தீவிரவாதத்தில் கொண்டு போய் விட்டு விடும்.ராமர் பாலத்தை உடைக்காமல் தடுக்க மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதில் அரசியல் பார்க்கக் கூடாது.ராமர் பாலத்தை இடிக்காமல் தடுக்க நடக்கும் போராட்டத்தில் எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். முதல் ஆளாக எனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.அரசியல்வாதிகள் மதத்தின் பெயரால் பிரச்சினைகளை ஏற்படுத்துவதைத் தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.மேலும், நாட்டில் உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களையும் சந்தித்து ராமர் பாலத்தை உடைப்பதைத் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன்.டெல்லி, சென்னை, சண்டிகர், மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் ராமர் பாலத்தைக் காக்க வலியுறுத்தி மக்கள் ஆதரவைத் திரட்ட மாநாடுகளையும் நடத்தவுள்ளேன் என்றார் பிட்டா

கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல்

கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல்
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

திருநெல்வேலி:சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென்காசி அருகே சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக ஆண்டபெருமாள், கேஷியராக மாடசாமி, முதுநிலை எழுத்தாளராக முகமது கனி, நகை மதிப்பிட்டாளராக அருணாசலம் ஆகியோர் உள்ளனர்.இந்த வங்கியை தென்காசி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் ஆய்வு செய்தார்.அப்போது வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. குறிப்பாக நகை கடன் வாங்கியதாக போலி கணக்கு எழுதி ரூ.32.74 லட்சம் கையாடல் நடந்தது தெரிய வந்தது. அரசின் தள்ளுபடி திட்டத்தில் விவசாய நகைக் கடனில் போலியாக கையெழுத்திட்டு ரூ.8.58 லட்சமும் சுருட்டப்பட்டது தெரியவந்தது.பல்வேறு முறைகேடுகளால் ரூ.77 லட்ம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து துணைப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் அருணாசலம் நெல்லை 2வது நீதிதுறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார்.இவரை அக். 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) ஹேமா உத்தரவிட்டார்.

நெல்லையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை

நெல்லையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

வள்ளியூர்:ராதாபுரம் அருகே முன்விரோதத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வட்டவிளையை சேர்ந்தவர் பெருமாள் நாடார். உதயத்தூர் பஞ்சாயத்து 4வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெட்டும்பெருமாள். உதயத்தூர் அருகே உள்ள காற்றாலையில் வாட்சுமேனாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் வெட்டும்பெருமாளை காற்றாலை நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை விட்டு நீக்கியது.தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு பெருமாள் நாடார் தான் காரணம் என நினைத்த வெட்டும்பெருமாள் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.இந் நிலையில் வெட்டும்பெருமாள் மற்றும் அவரது மகன் முத்துகுமார் ஆகியோர் அங்கு சென்றனர் நேற்று முன்தினம் இரவு பெருமாள் நாடாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.பல இடங்களில் வெட்டப்பட்ட பெருமாள் நாடார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

3வது அணியில் அதிமுக நீடிக்கிறது; ஜெ.வுடன் கருத்து வேறுபாடு உள்ளது- நாயுடு

3வது அணியில் அதிமுக நீடிக்கிறது; ஜெ.வுடன் கருத்து வேறுபாடு உள்ளது- நாயுடு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

டெல்லி:3வது அணியில்தான் அதிமுக நீடிக்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அவர்களுடன் (ஜெயலலிதா) சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதை பேரி சரி செய்து விடுவோம் என்று தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.டெல்லியில் நேற்று 3வது அணியான ஐக்கிய தேசிய முற்ேபாக்குக் கூட்டணியின் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஜெயலலிதா வராத நிலையில் முதலில் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.இந்த நிலையில் நேற்று டெல்லியில், சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் யாதவை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், 3வது அணியின் கூட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறும்.அதிமுக 3வது அணியில்தான் நீடிக்கிறது. அதில் எந்த சந்ேதகமும் வேண்டாம். ஆனால் வெளியில் கூறப்படுவதைப் போல சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதை தலைவர்கள் கூடிப் பேசி சரி செய்து விடுவோம்.இந்த அணி உருவாக முக்கியப் பங்கு வகித்தவர் ஜெயலலிதா. எனவே அவருடன் பேசி பிரச்சினைகளை சரி செய்து கூட்டணியை வலுவானதாக மாற்றுவோம்.சேது சமுத்திரத் திட்டம் முக்கியமானது. அதேசமயம், மக்களின் மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு- நாளை முதல் தண்டனை விவரம் அறிவிப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கு- நாளை முதல் தண்டனை விவரம் அறிவிப்பு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாளை முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.இதுதொடர்பான வழக்கு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பளித்தார். அதன்படி அல் உம்மா பாஷா உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களிடம் நீதிபதி தனித் தனியாக அழைத்துக் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கட்த 18ம் தேதியுடன் இது முடிந்தது.இதையடுத்து நாளை முதல் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதையடுத்து கோவை முழுவதும் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ5 லட்சம்- வீரர்களுக்கு சஹாரா ரூ. 25 லட்சம் மதிப்பு வீடுகள்

திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ5 லட்சம்- வீரர்களுக்கு சஹாரா ரூ. 25 லட்சம் மதிப்பு வீடுகள்

வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

சென்னை20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த திணேஷ் கார்த்திக்குக்கு ரூ. 5 லட்சம் பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணியில் திணேஷும் இடம் பெற்றிருந்தார். திணேஷுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது.திணேஷுக்கு ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திணேஷின் திறமையையும் அவர் பாராட்டியுள்ளார்.இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சஹாரா நிறுவனம் இந்திய வீரர்கள் 15 பேருக்கும், தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 217 நகரங்களில் உள்ள சஹாரா நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலிருந்து இவற்றை வீரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என சஹாரா அறிவித்துள்ளது.

துபாய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர்

துபாய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர்வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

துபாய்:துபாயில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் எனப்படும் தமிழ் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த, தமிழ் பாரம்பரியத்துடன் கூடிய நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் பங்கேற்றார்.ஈமான் அமைப்பின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் (குவைத் பள்ளி) உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதன் சிறப்பம்சம் என்னவெனில் தமிழத்திலிருந்து சமையல் கலைஞர்களை அமீரகத்திற்கு கொண்டு சென்று அமீரகத்தில் தமிழகப் பாரம்பர்யத்துடன் நோன்புக் கஞ்சியை நோன்பாளிகளுக்கு வழங்கி வருவது தான்.தற்பொழுது தினந்தோறும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழக நோன்புக் கஞ்சியுடன் வடை, சமோசா, பழச்சாறு, ஆரஞ்சு, பேரித்தம்பழம், மினரல் வாட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநருமான சையது எம் ஸலாஹ¤தீன் தலைமையிலும், கல்விக் குழுத் தலைவரும், ஈடிஏ அஸ்கான் இணை மேலாண்மை இயக்குநருமான பி.எஸ்.எம். ஹபிபுல்லா வழிகாட்டுதலின் பேரிலும் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது அரபியர், ஆப்பிரிக்கர், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தமிழக நோன்புக் கஞ்சியின் அருஞ்சுவையை அருந்தி மகிழக்கூடிய கேந்திரமாக இருந்து வருகிறது.கடந்த வாரம் இந்திய துணைத் தூதர் பி.எஸ். முபாரக் பங்கேற்று ஈமான் அமைப்பின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியைப் பாராட்டினார்.இத்தகைய நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் வேலுராஜாமணி அவர்கள் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக பொதுச்செயலாளர் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.இதற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அஹமது முஹைதீன், அப்துல் கத்தீம், அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ.முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லா, விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியத்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின்,படேஷா பஷீர் முஹம்மது, முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு ஏ. முஹம்மது தாஹா 050 4674399 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

September 27, 2007

ஹாக்கி வீரர்கள் அதிரடி: பணிந்தது கர்நாடக அரசு-பரிசுகளை அறிவித்தது

ஹாக்கி வீரர்கள் அதிரடி: பணிந்தது கர்நாடக அரசு-பரிசுகளை அறிவித்தது
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

பெங்களூர்:ஹாக்கி வீரர்களை கர்நாடக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளியா அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடக அரசு அவசரம் அவசரமாக, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடக வீரர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.20-20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கார் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வீரர் சார்ந்த மாநில அரசுகளும், பரிசுகளை வழங்கியுள்ளன.இது இந்திய ஹாக்கி வீரர்களை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கு ஹாக்கியை மதிப்பதில்லை என்று இந்தியப் பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வல்ஹோ வேதனை தெரிவித்திருந்தார்.மேலும் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த கர்நாடகத்தைச் ேசர்ந்த வீரர்களுக்கு இதுவரை கர்நாடக அரசு ஒரு பரிசையும் வழங்கவில்லை, வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று குமுறல் வெளியிட்டிருந்தார்.இதை எதிர்த்து கர்நாடக முதல்வரின் வீடு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த வீர்ரகளான சுனில், விக்ரம் காந்த், ரகுநாத், இக்னேஸ் திர்க்கி ஆகியோரும், பயிற்சியாளர் ரமேஷ் பரமேஸ்வரனும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தார்.இது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவசரம் அவசரமாக பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள நான்கு கர்நாடக வீரர்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இப்படிப் பரிசையும், பாராட்டையும் கேட்டு வாங்கும் அளவுக்கு நமது ஹாக்கி இருப்பது ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுணிய வேண்டிய விஷயமாகும்.

September 26, 2007

விஜயகாந்தின் இப்தார் விருந்தின் பின்னணி

தேமுதிக மாநில தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தற்போது தனது அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடாவில் இருக்கிறார். அவர் கனடா செல்ல விமான நிலையத்துக்கு போவதற்குள், இப்தார் விருந்தை முடித்துவிட்டு சென்றார். திடீர் இப்தார் விருந்தை அவர் ஏற்பாடு செய்தது பலருக்கு ஆச்சரியம். ராமரைப் பற்றி முதல்வர் கருணாநிதி பேசிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த், இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கும் கருணாநிதி மற்ற மதங்களையும் விமர்சிப்பாரா என்று காட்டமாக கேட்டார். இதனால், அவரது கட்சியில் இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமுதாயத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக அந்த சமுகத்தை சமாதானப்படுத்த அவசர அவசரமாக இப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்களாம். கொசுறு: கனடாவில் 12ம் தேதி வரையில் தங்கியிருக்கும் விஜயகாந்தை சந்திக்க மாறன் சகோதரர்கள் விருப்பம் தெரிவித்து தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார்களாம். தமிழகத்தில் எங்கு சந்தித்தாலும், உளவுத்துறை மோப்பம் பிடித்துவிடும் என்பதால் அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ சந்திக்க விரும்புவதாக தெரிகிறது.

நயனதாரா தாயார் கொலையானதாக புரளி.

நடிகை நயன்தாராவின் தாயார் கொலையாகிவிட்டதாக இன்று காலை ஹைதராபாத்தில் செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ஹைதராபாத்திலிருந்து (சென்னையிலிருந்தும் இது வெளியாகிறது) வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழில் இச் செய்தி இன்று வெளியானது.
அதிஸ், பிரபல நடிகை நயனதாராவின் தாயார் கமலா தேவி (வயது 45), ஹைதராபாத் நகரின், மதுரா நகர் பகுதியில் நக்சலைட்டுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். கொலையாளிகள், 50 தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் என்று கூறப்பட்டிருந்தது. நயனதாரா படமும் இடம் பெற்றிருந்தது.
இந்த சமயத்தில் நயனதாரா சென்னையில் இருந்தார். செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கேரளாவில் உள்ள தனது தாயார் ஓமனா குரியனுக்குப் போன் செய்தார்.
இந்த கொலை செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளார் நயனதாரா. அதைக் கேட்டதும், நயனதாராவை ஆறுதல்படுத்திய ஓமனா குரியன், கவலைப்படாதே, எனக்கு ஒன்றும் இல்லை, நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
உண்மையில் நடந்தது என்ன?:
நயனதாரா என்ற பெயரில் தெலுங்கில் ஒரு ஜூனியர் நடிகை இருக்கிறார். அவரது தாயார்தான் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த செய்தியைத்தான் நயனதாராவின் படத்துடன் வெளியிட்டுவிட்டனர்.
துணை நடிகையின் தாயார் கொலை செய்யப்பட்ட அன்று நயனதாரா ஹைதராபாத்தில் இல்லை. சத்யம் பட ஷூட்டிங்குக்காக சென்னையில் இருந்தார்.
இந்த செய்தியை அறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் நயனாராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எஸ்.எம்.எஸ். மூலமும் துக்கம் விசாரித்துள்ளனர். அதன் பிறகுதான் நயனதாராவுக்கு மேட்டர் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ள நயனதாரா கூறுகையில், பலமுறை பத்திரிக்கைகள் பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடுவதாக நான் கூறியுள்ளேன். என்னைப் பற்றிய பல தவறான செய்திகள் வந்துள்ளன. இப்போது இப்படி ஒரு அபாண்டமான அபத்தமான செய்தியை அந்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த நாளிதழ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து நான் வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.

September 25, 2007

அக். 1ம் தேதி பந்த் - திமுக கூட்டணி முடிவு வேதாந்தியைக் கைது செய்ய கோரிக்கை.

அக். 1ம் தேதி பந்த் - திமுக கூட்டணி முடிவு வேதாந்தியைக் கைது செய்ய கோரிக்கை.

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

சென்னை:சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்த முயலும் பாஜகவைக் கண்டித்தும், விரைவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்த திமுக கூட்டணி தீர்மானித்துள்ளது. வேதாந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவை வருமாறு:- முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொய்து வருவோருக்குப் பரிசு என்று கூறிய மத வெறிப் பேச்சால், முதல்வரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். அத்தகைய அக்கிரமமான, மத வெறியைத் தூண்டும் வகையில் பேசியவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.- சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படும் பொருளாதார பலன்களைத் தடுத்து நிறுத்த முயலும் பாஜக, வி.எச்.பி. போன்ற மதவாத சக்திகளின் உள்நோக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையிலும், இந்தத் திட்டத்தை திட்டமிட்டபடி , எந்தவித தடையும் இன்றி நிறைவேற்றக் கோரியும் அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். அதற்கு முதல் நாள் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், திமுக சார்பில் அன்பழகன், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஎம் செயலாளர் வரதராஜன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் ஹக்கீம் சையத் சத்தார், புரட்சி பாரத தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்

அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007 திருச்சி:வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர். ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.

September 24, 2007

20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா வெற்றி

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007

ஜோஹன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று நடந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகமே இன்றைய இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்தது. காரணம், 20-20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான பின்னர் நடந்த முதலாவது உலகக் கோப்பைப் போட்டி என்பதால் முதலாவது கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. வழக்கம் போல பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கேப்டன் டோணி. இந்திய அணியில் வீரேந்திர ஷேவாக் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் யூசுப் பதான் சேர்க்கப்பட்டார்.தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார் யூசுப். அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல உத்தப்பாவும், யுவராஜ் சிங்கும் தலா 8 மற்றும் 14 ரன்களில் வீழ்ந்தனர். டோணியும் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதனால் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. ஆனால் கவுதம் காம்பிரும், ரோஹித் சர்மாவும் சரிவை தடுத்து நிறுத்தி அசத்தலாக ஆடினர். காம்பிர் அதிரடியாக ஆடி 75 ரன்களைச் சேர்த்தார். ரோஹித் 30 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.வெற்றிக்கு 158 ரன்கள் தேவை என்ற இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் 1 ரன்னில் ஆர்.பி.சிங்கின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.அடுத்த களமிறங்கிய கம்ரான் அக்மல் சிறிது நேரத்தில் ஆர்.பி.சிங்கின் 2வது ஓவரில் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த இம்ரான் நசீர் 33 ரன்களில் ரன்அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சோயப்மாலிக், அப்ரிடி என வரிசையாக ஆட்டமிழந்து சென்ற நிலையில் மிஸ்பக் மட்டும் கடைசி வரை நின்று மிரட்டி வந்தார்.கடைசியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இர்பான் பதான் 3 விக்கெட்டுகளும், ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளும், ஜோகிந்தர் சர்மா 2 விக்கெட்களும், ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டும் எடுத்தனர்.16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதான் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ஆட்டதொடர் நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் அப்ரிதிக்கு கிடைத்தது.ஐசிசி நடத்திய முதலாவது 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.இந்திய வீரர்கள் வெற்றிக்குப் பின்னர் கட்டிப் பிடித்துக் கொண்டும், தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்தும் ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடினர்.உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிககர்கள் பட்டாசுகளை வெடித்தும், ஆர்ப்பரிப்பான ஆரவாரத்துடனும் இந்தியா சாம்பியன் ஆகியதைக் கொண்டாடி வருகின்றனர்.இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வெற்றி களிப்பு கரைபுரண்டோடுகிறது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட அனைத்துப் பெருநகரங்களிலும் கொண்டாட்டங்கள் உச்சிக்குச் சென்றுள்ளன.

டோணிக்குப் புதுப் பெருமை:

20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதன் மூலம் இந்திய கேப்டன் டோணி புதிய பெருமை ஒன்றையும் அடைந்துள்ளார்.உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரியவராக கபில்தேவ் மட்டுமே இருந்து வந்தார். 1983ம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பின்னர் நமக்கு அது கனவாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில் 20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று கபிலின் சாதனையை சமன் செய்துள்ளார் டோணி.டெண்டுல்கர், டிராவிட், கங்குலி என ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், இளையவர்களை வைத்துக் கொண்டு அசத்திய டோணி சாம்பியன் பட்டத்தையும் வென்று இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை நாம், பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை இன்றும் நிரூபித்து சரித்திர சாதனை படைத்து விட்டது இந்தியா.பிரதமர் வாழ்த்து:20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்தியர்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ளது.இந்த வெற்றி தொடரட்டும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இந்த ஆட்டத்தில் மட்டுமல்லாது, தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடியது என்று கூறியுள்ளார்.இன்றைய இறுதிப் போட்டியை மன்மோகன் சிங் தொடக்கம் முதல் ரசித்துப் பார்த்ததாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கங்கிராட்ஸ் இந்தியா!


பாகிஸ்தான்: ஆபாசம் என்று சர்க்கஸ் மீது தாக்குதல்

ரம்ஜான் காலத்தில் இறுக்கமாக உடைஅணிந்திருந்த காரணத்தாலோ என்னவோ சர்க்கஸ் நடத்திய்தற்காக சர்க்கஸ் மீது நூற்றுக்கணக்கானவர்கள் தாக்குதல் நடத்தினர்.சர்க்கஸ் முதலாளியும் தொழிலாளர்களும் தப்பிவிட்டனர்.சாதரண நாட்களிலேயே ஆபாசத்தை அனுமதிக்கம்மாட்டோம், ரம்ஜான் காலத்தில் எப்படி அதனை அனுமதிக்கமுடியும் என்று இமாம்கள் தெரிவித்தனர்.

என்னை எவனும் அழிக்க முடியாது - கருணாநிதி!!!


நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் மூச்சில் இருப்பேன், உங்கள் ரத்தத்தில் கலந்திருப்பேன், உங்களது நெஞ்சத் துடிப்பில் கலந்திருப்பேன். எனவே எவனும், என்னை இல்லாதவானாக்கி விட முடியாது, அழித்து விட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில், வி.எச்.பி.யின் சாமியார் பிரிவைச் சேர்ந்த வேதாந்தி விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.அவர் பேசுகையில், நான் பொறுப்பில் இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகின்ற நன்றிதான் இந்த மாநாட்டின் மூலம் அமைந்திருக்கிறது. உங்களில் பலர் என்னை, இந்த அரசை அறிந்தவர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி உங்கள் உள்ளங்களை மகிழ வைத்திருக்கிறேன்.அந்த ஈரம் காயாத காரணத்தால் தான் இங்கு வந்து அமர்ந்து கரவொலி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலே காணும் அந்த ஒளி என்னுடைய கவலைகளையெல்லாம் மறக்கச் செய்கிறது. என்னுடைய துன்பங்களை பறக்க வைக்கிறது. என்னுடைய சோகங்களுக்கு முடிவு எழுதிக் கொண்டிருக்கிறது. உங்களை காணும்போது உற்சாகம் பெறுகிறேன். உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா இல்லை தலை இல்லாமல் வருவாரா என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் கிடையாது. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது.இலக்கியத்தில், கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம் பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்றும் நம்ப வேண்டாம்.தமிழ்நாட்டில் இந்த கருணாநிதி ஆற்றியிருக்கிற தொண்டுகளை, நல்கியிருக்கிற தியாகங்களை, எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும்.ஆகவே தலையை கொய்து வா... என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை நான் பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசளிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தலையும், நாக்கும் எவ்வளவு விலை மதிக்கத்தக்கது பாருங்கள்.இது சாதாரண நாக்கா? அண்ணாவின் தமிழை பேசிய நாக்கு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை உச்சரித்த நாக்கு. சிலப்பதிகாரத்தை, திருக்குறளை படித்த நாக்கு. எனவேதான், இந்த நாக்குக்கும், தலைக்கும் இவ்வளவு விலை.அதற்கு தங்கமாகத்தான் கொட்டிக் கொடுப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒருவர் வடக்கிலே பேசியிருக்கிறார் என்றால் அவரை நான் வாழ்த்துகிறேன். அவர் தரித்திர நாராயணராக இருக்க முடியாது. சீமானாகத்தான் இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன். முன்கூட்டியே நன்றியினை தெரிவிக்கின்றேன்.லட்சியத்திற்காக எத்தனை பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். லட்சியத்திற்காக எத்தனை பேர் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே சாய்ந்த மாவீரர்களுடைய, கணக்கு நமக்கு தெரியாதா. அவர்களுடைய வரலாறு தெரியாதா.அந்த வரலாற்றையெல்லாம் படித்துத்தான் ஒரு வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை. அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ரத்தத்திலே தான் கலந்து இருப்பேன். உங்கள் நெஞ்ச துடிப்பிலே தான் கலந்திருப்பேன். உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்து விடமுடியாது என்றார் கருணாநிதி.


தற்ஸ் தமிழில் இருந்து..........

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் யசோ ஃபக்குடா


ஜப்பானின் மூத்த அரசியல்வாதியான யசோ ஃபக்குடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளூம் லிபரல் டெமாகரெடிக் கட்சியின் வழி நடத்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யசோ ஃபக்குடாவை செவ்வாயன்று நாடாளுமன்றம் பிரதமராக உறுதி செய்யும்.
பிரதமர் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான டாரோ அசோவை இவர் வென்றார். இதற்கிடையே, உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு யசோ ஃபக்குடாவை பிரதான எதிர்க்கட்சி கோரியுள்ளது.


நன்றி: தமிழ் பிபிசி

எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம்!

இயற்கையான மணல்திட்டுக்களோ, இறைவன் உருவாக்கிய பாலமோ.. இன்று எல்லாப்பக்கமும் நாறத்தான் செய்கிறது.

சேது சமுத்திரத்திட்டம், எல்லா அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு இணையாகவே கொள்கைகளும் கொள்கை மாற்றங்களும் கொண்ட வலைப்பதிவாளர்களுக்கும் பத்துநாளுக்கு மட்டும் சாஸ்வதம் கொண்ட நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

ராமர் இருந்தாரா, பாலம் கட்டினாரா, பொறியியல் படித்தாரா, பொறியல் தின்றாரா எனக் கேள்வி கேட்க, திமுக தலைவருக்குத் தகுதி இல்லைதான். டாவின்ஸி கோட் என்ற உப்புப் பெறாத திரைப்படத்தை "மத நம்பிக்கைகள் புண்படக்கூடாது" என்பதற்காகத் தடை செய்த கட்சித் தலைமை, வெளிப்படையாக, தன்னிச்சையாக மத நம்பிக்கைகள் புண்படுமாறு பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால், அதே நேரத்தில், புழங்குவதில்லை, தொழுகை நடைபெறுவதில்லை, பல நூற்றாண்டுக்கு முன் கோயிலாக இருந்தது என்று காரணம் காட்டி பாபர் மசூதியை இடித்த மதவாதிகளுக்கும், இப்போது யாரும் புழங்காத, பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும். எந்த பூஜையும் நடைபெறாத ராமர் பாலத்தைக் காக்கும் ஆர்வம் திடீரென வருவதென்ன நியாயம்?

ஒரு ப்ளான்கூட போடப்படாமலா வரைவுத்திட்டம் வாஜ்பாய் அரசால் முன்மொழியப்பட்டது? அப்போது தெரியாதா இது ராமர் பாலம் என்று?

காங்கிரஸுக்கோ புலிவால் பிடிக்க பயம். திமுக போன்ற தைரியம் அதற்கு இல்லை. எதை எதையோ சொல்லி, பிரச்சனை தங்கள் தலைமேல் விழாமல், ராமர்பாலம் இடித்த தோஷம் தங்கள் மேல் வராமல் இருந்தாலே போதும் என்று அம்பிகா சோனியை காவுகொடுக்கவும் தயாராகிவிட்டது. சும்மாவா? திமுக போல இந்துத்துவ எதிர்ப்பால் பாதிப்பு வராது என்ற நிலைமையா இருக்கிறது? கொஞ்சம் கேப் விட்டால் பாஜக புகுந்து புறப்பட்டு விடுமே..

நம் லோக்கல் அரசியல்வாதிகள் நிலைமை தமாஷாக இருக்கிறது.

சேது சமுத்திரத்திட்டத்தால் வோட்டு வரும்போல இருக்கிறதே.. ஆதரிப்போம்..
அட.. அது திமுகவுக்கு சாதகமாக ஆகும் போலிருக்கிறதே.. மீனவர்கள் நலம் நாசம் என கொடி பிடிப்போம்..
நாசா படம் வெளியிட்டிருக்கிறதே.. ஆமாம் ராமர்தான் கட்டினார் அதை.. மத உணர்ச்சிக்குத் தூபம் போடுவோம்..

இதுதான் அதிமுக நிலைமை! நேரில் மடக்கி.. இப்ப என்னதாங்க சொல்றீங்க, "சேது சமுத்திரம் வேணுமா வேணாமா" என்று கேட்டால் பதில் வராது!

ஆதரவு எதிர்ப்பு இரண்டும் இல்லாமல் ஒரு வழவழா கொழகொழா நிலையும் இருக்கிறது, அது புதுக்கட்சிக்காரர்களுக்கு.

மாற்றுப்பாதையில் ராமர்பாலத்தை இடிக்காமல் போடட்டுமே! அடப்பாவிகளா.. மாற்றுப்பாதை சுற்றுவழியாக இருக்கிறது என்பதால்தானே இந்த வழியே போடுகிறார்கள்!

ராமர் பாலத்தை மறுக்கும், அதே நேரத்தில் சேது சமுத்திரத்தையும் எதிர்க்கும் ஒரு கோஷ்டியும் நடுவில் உலாவுகிரது. இந்தக் குழு பரவாயில்லை, அடிக்கடி கொள்கையை மாற்றிக்கொள்வதில்லை, கொஞ்சம் நம்பலாம். சுற்றுச்சூழல், கனிமவளம் போன்ற காரணங்களால் எதிர்க்கிறது.

திமுக இப்போது தனித்துவிடப் பட்டிருக்கிறது. டெல்லி காங்கிரஸ் கைகழுவிவிட்டது.

ஆனால், இந்த அரசியல் நிலைப்பாடுகள் எல்லா விஷயத்துக்கும் பொது, எதுவும் புதிதில்லை, இந்த நாற்றம் மூக்குக்குப் பழகிவிட்டது!

பெரும் நாற்றம் அறிக்கைப்போரினால்!

வெளிப்படையாக ஒரு மத நம்பிக்கையைக் குறைபேசும் முதல்வர் பிரச்சனையை ஆரம்பித்துவைக்க,

அவர் தலைக்கு ஒரு விலை வைக்கும் மதவாதம்! எவ்வளவு கேவலம்! உங்கள் வீடியோவைப்பார்த்து எத்தனையோ பேர் உங்கள் தலைக்கு விலை வைக்கலாமே! நீங்கள் இடிக்காத மதநம்பிக்கைகளா?

ராமரின் சர்ட்டிபிகேட் கேட்கும் திமுக, திருவள்ளுவரின் சர்ட்டிபிகேட்டை பார்த்திருக்கிறார்களா என்று நியாயமான கேள்வி கேட்ட விஜயகாந்தின் பூர்வீகம் அவசர அவசரமாக ஆராயப்படுகிறது! அவர் தலைக்கு விலைவைக்கும் ஆவல் தெரிகிறது!

மொத்தத்தில், ஒரு சாதாரண பொருளாதார முன்னேற்ற திட்டம், படிப்படியாக உணர்ச்சிகளின் கூடாரமாக்கப்படுகிறது! இதற்குள் இதற்கு 300 கோடி ரூபாய் செலவும் ஆகிவிட்டிருக்கிறதாம். (ஜூவி செய்தி)!

என் கருத்தா? சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!

பெரிய ஆசைகள் -- இன்றைய நாற்றமெடுத்த சூழலில்!

ராமர் பாலத்தை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டம்!

போபால்:ராமர் பாலப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீர்மானித்துள்ளது. குறிப்பாக ராமர் பாலத்தை தனது முக்கிய அஸ்திரமாக பாஜக தீர்மானித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், நடந்து வந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை பாஜக எடுத்துள்ளது. அதில் முக்கியமானது எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் பாலப் பிரச்சினைய முக்கியப் பிரச்சினையாக வைத்து, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீர்மானித்துள்ளது.தற்போது பாஜக வசம் உள்ள எம்.பி தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வது போக, காங்கிரஸ் கூட்டணி வசம் உள்ள எம்.பி. தொகுதிகளில் கணிசமானவற்றை கைப்பற்றவும் பாஜக தீர்மானித்துள்ளது.ராமர் பாலத்தை தங்ளது தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பிரச்சினையாக வைக்க பாஜக தீர்மானித்துள்ளது. இதுதவிர அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்சினைகளையும் முக்கியமாக கையில் எடுக்கத் தீர்மானித்துள்ளது பாஜக.அதற்கு முன்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள குஜராத் சட்டசபைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து வரவுள்ள ஹிமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் வெற்றியைக் குவிக்கவும் பாஜக முடிவெடுத்துள்ளது.ராமர் பாலத்தைப் பொறுத்தவரை, ராமேஸ்வரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராமர் பால பாதுகாப்பு இயக்கத்திற்கு முழு ஆதரவு தந்து அந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. நேரடியாக ஈடுபடாமல் இந்த இயக்கத்திற்கு பாஜக ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.ராமர் பாலத்தைக் காக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் பாஜக இறங்கும். அதேசமயம், நேரடியாக எந்தப் போராட்டத்திலும் அது ஈடுபடாது.கூட்டத்தின் நிறைவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சியால் (திமுக) நாடு பெரும் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் பேசி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.கருத்துக்களைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதேசமயம், அடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் அதிகாரம் இல்ைல என்று பாட்டீலிடம், அத்வானி கூறியுள்ளார்.ஆங்கிலேய ஆட்சியின்போது கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையை இணைக்க தீர்மானித்னர். ஆனால் அப்போது கூட ராமர் பாலத்தை தொட அவர்கள் முடிவு செய்யவில்லை. அந்தத் தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மட்டும் மனதில் கொண்டு ராமர் பாலத்தை இடிக்க முயலுகின்றனர்.பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீவிரவாதம், தீவிரவாதிகளின் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கதேசத்திலிருந்து அதிக அளவிலான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவி வருவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதத் தடுப்புக்கென தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

'சன்'னுடன் கை குலுக்கும் தாணு!


நீண்ட காலமாக சன் டிவியுடன் ஊடலில் இருந்த கலைப்புலி தாணு, தற்போது அந்த டிவியுடன் கை குலுக்கியுள்ளார். கோலிவுட்டில் பெரிய நியூஸே தற்போது இதுதான்.ஒரு காலத்தில் சன் டிவியின் கலாநிதி மாறனுடன் நல்ல நட்பைக் கொண்டிருந்தார் கலைப்புலி தாணு. ஆளவந்தான் வரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் இடையே இருந்த நட்பு கசந்தது.அதை விட முக்கியமாக வைகோவின் தளபதியாகவும், மதிமுகவின் முக்கியப் பிரமுகராகவும் கலைப்புலி தாணு மாறிப் போனதால், சன் டிவிக்கும், தாணுவுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டது.இதையடுத்து தாணு தனது படங்களை சன் டிவிக்கு விற்கவில்லை, சன் டிவியும் தாணுவைப் புறக்கணித்தது.கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெளியான சச்சின், சென்னை காதல், திருமகன் ஆகிய படங்களிலிருந்து ஒரு காட்சியைக் கூட சன் டிவி காட்டாமல் முற்றிலும் புறக்கணித்தது. இந்தப் படங்களை ஜெயா டிவி வாங்கியதே இதற்கு முக்கியக் காரணம்.இந்த நிலையில் சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு கசந்தது. கலைஞர் டிவி புதிதாக பிறந்துள்ளது. இதையடுதத்து சன் டிவிக்கும், தாணுவுக்கும் இடையிலான நட்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள கந்தசாமி படத்தின் தொடக்க விழாவை நேரடியாக இன்று ஒளிபரப்புகிறது சன் டிவி. இன்று மாலை 6.30 மணிக்கு தேவி பாரடைஸ் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.அரசியலில் மட்டுமல்ல, திரையுலகிலும் கூட நிரந்தர எதிரிகளும் கிடையாது, நிரந்தர நண்பர்களும் கிடையாது என்பதை சன், தாணு கூட்டணி நிரூபித்துள்ளதாக திரையுலகைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.அர்த்தமுள்ள வார்த்தைதான்!

சந்திரிகா-மன்மோகன் ஆலோசனை

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.சந்திரிகாவின் இந்தியப் பயணம் குறித்து சண்டே ரைம்ஸ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இந்தியா சென்றார். முதலில் சென்னையில் சந்திரிகா தங்கினார். சந்திரிகாவின் நெருங்கிய நண்பரும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக சந்திரிகாவினால் சிறிலங்காவின் தேசிய கௌரவத்தை பெற்றவருமான "இந்து" ஏட்டின் ஆசிரியர் என்.ராமின் விருந்திரான சென்னையில் தங்கினார் சந்திரிகா. அதன் பின்னர் புதுடில்லி செல்ல சந்திரிகா திட்டமிட்டார். சென்னையில் சந்திரிகா இருந்தபோது அவருக்கு ஆச்சரியமடையும் வகையில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. புதுடில்லிக்கு சந்திரிகா சென்றடையும்போது பிரதமர் மன்மோகன்சிங்குடன் பிற்பகல் உணவு விருந்தில் சந்திரிகா பங்கேற்க இயலுமா என்று கேட்கப்பட்டதுதான் அந்த ஆச்சரியம். சந்திரிகாவும் உடனே ஒப்புக் கொண்டார்.அந்த பகல் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் அணிவகுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காமையினால் அவரது மகன் ராகுல் காந்தி, வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இரண்டு கபினட் அமைச்சர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிந்த அரசாங்கம் தாமதிப்பது, வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பிலான இந்தியாவின் அதிருப்தி, மனித உரிமைகள் சீர்குலைவுகள் தொடர்பிலான உறுதிமொழிகளுக்கு மாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அப்போது இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசியுள்ளார். அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது தொடர்பாக சந்திரிகாவும் மன்மோகன்சிங்கும் ஆலோசனை நடத்தினார்களா என்பதை கண்டறிவதற்காக மணிசங்கர் ஐயரை மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டுள்ளார். கொழும்பில் "இந்து" ஏட்டின் ஆசிரியர் ராம் இருந்தபோது அவரை இரவு விருந்துக்காக மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார். மகிந்தவும் ராமும் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சுக்களின் போதும் சந்திரிகாவின் இந்தியப் பயணம் தொடர்பில் பலமுறை மகிந்த கேட்டுள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தை

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் இன்று ஐலண்ட பத்திரிகைக்கு தெரிவித்த செவ்வியில் விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு திரும்பும் பட்சத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கையினை மேற்கொள்ளமாட்டார்கள் எனத்தெரிவித்துள்ளார்.இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ சிலதினங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்ற செயல் எனவும் இராணுவத்தீர்வின் மூலமே தீர்வு எய்தப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.எனினும் தற்போது நியூயோர்க் நகரில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடரில் சிறீலங்கா ஜனாதிபதி பேசவிருக்கும் இத்தருணத்தில் கோத்தபாய இவ்வாறு குத்துக்கரணமடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகவும்.

September 23, 2007

20-20 கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா-பாக்கிஸ்தான்.

தென் ஆஃப்ரிக்காவில் நடைபெறும் புதியமுறை கிரிக்கெட் 20-20 உலகக்கோப்பையில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் விரைவு கிரிக்கெட் வாகையரான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 15 ஓட்டங்கள் முன்னணியில் வென்றுள்ளது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் இந்தியா சகபோட்டியாளரான பாக்கிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
முன்னதாக பாக்கிஸ்தான் மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்தினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகரான யுவராஜ் சிங் 30 பந்துகளில் எடுத்த 70 ஓட்டங்கள் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியது.
மேலும் விபரங்கள்/எண்ணிக்கை அறிய….

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

புதுடில்லி:

டில்லியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர், 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார்.டில்லியில், பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண், மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில், பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இன்டர்நெட்டில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, சிறிது சிறிதாக, காதலாக மாறியது. காதல் மயக்கத் தில் இவர்களுக்கு வயது ஒரு பொருட் டாக தெரியவில்லை. அடிக்கடி நேரிலும் சந்திக்க ஆரம்பித்தனர். சென்ற மாதம் இவர்கள் இருவரும் ஒன்றாக ரெஸ்ட்டாரன்டில் அமர்ந்து உணவருந்துவதைப் பார்த்த மாணவருடைய தந்தையின் நண்பர், இந்த காதல் விவகாரத்தை, தந்தையிடம் கூறினார். மாணவரின் தந்தை, மாணவரை அழைத்து விசாரித்தார். "அவரும், நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்' என்றார்.கடந்த ஆக., 27ம் தேதி மாணவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து சி.ஆர்.பார்க் போலீசில் மாணவரின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், பள்ளியில் தன் மகனுக்கு பெண் தோழிகளே கிடையாது என்றும் தெரிவித்தார். போலீசாரும் பல இடங்களில் தேடி, இறுதியாக, நடன ஆசிரியையின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது 70 வயதான தாயார் தான் இருந்தார். ஆசிரியை மாயமாகியிருந்தார்.அந்த மாணவர் தன்னுடைய மொபைல் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் அந்த நடன ஆசிரியை போனை கண் காணித்தபோது, அவர் அந்த மாணவருடன் அரியானாவில் இருப்பது தெரிய வந்தது.இவர்களைத் தேடி போலீசார் அரியானா விரைந்துள்ளனர்.

September 22, 2007

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சென்னை:முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.இத்தகைய செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

சிறுமியிடம் சில்மிஷம்-52 வயது நபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம்-52 வயது நபர் கைது
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சிதம்பரம்:கிணற்று மேட்டில் குளித்துக்கொண்டிருந்து சிறுமியிடம் சில்மிஷம் செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பு ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(52). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அமுதா(வயது 12), ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.அமுதா தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்று மேட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அண்ணாத்துரைக்கு அமுதாவிடம் சில்மிஷம் செய்தார்.அண்ணாத்துரை செயலை கண்டு மிரண்டு போன அமுதா கூச்சல் போடவே அவர் ஓடிவிட்டார். இது குறித்து அமுதா தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: http://thatstamil.oneindia.in/

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

அயோத்தி:முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2007/09/22/vhp-leader-fathwa-against-karunanidhi.html

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

அயோத்தி:முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் தேர்தலுக்காகவே ராமர் பால பிரச்சனை

குஜராத் தேர்தலுக்காகவே ராமர் பால பிரச்சனை-பாலு, சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சென்னை:குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் பாஜக இப்போது ராமர் பால பிரச்சனையை கிளப்பி சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவதுசேதுசமுத்திர திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. ராமர் பாலம் என்ற ஒன்று இந்திய வரைபடத்திலேயே இல்லை. சேது கால்வாய் தோண்டப்படும் இடத்தில் ஆதம் பாலம் தான் உள்ளது.பாரதீய ஜனதா ஆட்சியில் உமா பாரதி மத்திய மந்திரியாக இருந்தபோது ஆதம் பாலம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஆதம் பாலம் என்ற மணல் திட்டு பகுதி 5 லட்சம் முதல் 7 லட்சம் ஆண்டுகளுக்குள் உருவானதாக தெரியவந்து ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது.ஆனால் இப்போது பாரதீய ஜனதாவும் மதவாதிகளும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பாலம் இருப்பதாக கூறி வருகிறார்கள்.சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற 6 வழித் தடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்போது நிறைவேற்றப்படும் 6-வது பாதையை மத்திய சுற்றுச் சூழல்துறை மற்றும் ஏராளமான வல்லுனர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த போது ஏற்றுக்கொண்டது தான்.கடல் வழிப்போக்குவரத்துறை அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, திருநாவுக்கரசர், சத்ருகன் சின்கா, கோயல் ஆகியோர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு துறை வாரியாக ஒப்புதல் அளித்துள்ளனர்.பாஜக ஆட்சியில் வடிவமைத்த திட்டத்தைதான் நாங்கள் செயல்படுத்துகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ இதில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கோ எந்த மதத்தினரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி எல்லா மதத்தினரையும் சமமாகவே நடத்தி வருகிறார்.8 ஆண்டுகளாக மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை பரிசீலித்தபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது குஜராத்தில் வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த திட்டத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது பாஜக, அது பலிக்காது.ஆதம் பாலம் மணல் திட்டுகளில் தொடர்ச்சிதான் என்று நாசா ஆய்வு மையம் தெளிவாக சொல்லிவிட்டது. இதே போல் உலகில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் திட்டுகள் காணப்படுகின்றன.இதுவரை சேதுசமுத்திர திட்டப் பணிகளுக்காக ரூ. 600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மதவாதிகள் பிரச்சினையை கிளப்பும் ஆதம் பாலம் 30,000 மீட்டம் நீளம் உடையது. இதில் 300 மீட்டர் அகலத்துக்குதான் கால்வாய் தோண்ட வேண்டி உள்ளது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்ட மனுவில் சிறு தவறு ஏற்பட்டதை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் வாதிட்டு இந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழர்களின் 147 ஆண்டுகால கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.தேவையில்லாமல் மத பிரச்சினைகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த பாஜகவும் அதன் அமைப்புகளும் முயற்சிக்கின்றன. வால்மீகி ராமாயாணத்தில் எழுதப்பட்டு இருப்பதைத் தான் முதல்வர் கருணாநிதி சொன்னார். அது தவறா? என்றார் பாலு.

ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75லிருந்து 100 இடங்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களை அதிகரிக்கும் முடிவை புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான வசதிகள், கட்டடங்கள், கருவிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர் என்று அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



நன்றி - தினமலர்

சேதுசமுத்திரமும் இராமனின் அரியர்ஸ்களும்...

சேதுசமுத்திரமும் இராமனின் அரியர்ஸ்களும்...
சேதுசமுத்திர திட்டம்தான் இப்பொது ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் அடிபடுகிறது.திட்டதைப் பற்றி எழுந்த சர்ச்சைகளில் இராமன் எந்த கல்லூரியில் படித்தார்,வைத்திருந்த அரியர்ஸ்’ஐ நிறைவு செய்தாரா இல்லையா என்பது வரை மெத்தப் படித்த வல்லுனர்கள் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விவகாரத்தில் பெருமளவு வெளிப்படுவது(ஊடகங்களில்) அரசியல்தான் என்று தோன்றுகிறது.காய்தல்,உவத்தல் இலாத நோக்கில் இதை எவரும் அணுகி இருக்கிறார்களா?எனக்குத் தோன்றும் வரை இப் பிரச்சனையை பின்வரும் கோணங்களில் அணுகலாம்.1.பொருளாதாரக் காரணங்கள்.2.பாதுகாப்புக் காரணங்கள்.3.சுற்றுச்சூழல் மற்றும் அரசியல்4.கலாச்சாரம் மற்றும் உணர்வு பூர்வமானவை.பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரை-பலன்கள்(Merits)-கிழக்கில் இருந்து மேற்கிற்கும்,எதிர்நோக்கிலும்(vice versa) சுமாராக 340 கடல் மைல்கள் தொலைவு குறைகிறது.-தூத்துக்குடி துறைமுகம் கடல் போக்குவரத்துப் பொருளாதாரத்தில் வளர வாய்ப்புகள் உள்ளன.-மற்ற சிறிய தென்னக துறைமுகங்கள் வளரலாம்,தூத்துக்குடி வளர்ச்சி அடைந்து சமாளிக்க முடியாமல் போகும்போது!(Full capacity utilization)அபலன்கள்(Demerits)- இது எல்லாக் கலங்களும் உபயோகப் படுத்த ஏதுவான வழி அல்ல,ஏனெனில் ஓரளவிற்கு மேற்பட்ட பெரிய கலங்கள் இந்த வழியை உபயோகப் படுத்த முடியாது.பாதுகாப்புக் காரணங்கள்-உண்மையில் இத்திட்டம் 1999 ல் மறுபடியும் செயலாக்க நோக்கில்(feasibility) பார்க்கப்பட்டது பாதுகாப்புத் துறையின் மூலம்தான்.பல எதிரியல் அண்டை நாடுகளின் கருத்தைக் கவரக் கூடாது என்பதால் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப் பட்டதாக கருத்து நிலவுகிறது.ஆயினும் சீர்தூக்கிப் பார்த்தபின் பாதுகாப்புத் துறை அனுகூலங்கள் மெச்சத்தகுந்த அளவில் இல்லாததால்தான் கிடப்பில் போடப்பட்டது எனபதும் இன்னொரு கருத்து.பலன்கள்-இந்திய நீர்மூழ்கிக் கலங்கள் யுத்த காலங்களில் மறைந்து,புறப்பட்டுத் தாக்க சரியான இடம்.-இந்திய போர்க்கலங்கள்(மிகப் பெரிதான விமானந்தாங்கிகளாக இல்லாதபட்சத்தில்) எளிதாக தீபகற்பத்தின் முனைகளுக்குப் பயணப்படலாம்.அபலன்கள்மேற்சொன்ன காரணங்களாலேயே ஏவுகணை மற்றும் அழிவுக் கணைகளில் தாக்குதலுக்கு குமரியும் தமிழ்நாடும் இலக்காகலாம்,அதுவும் எதிரி நாடு இலக்கு தேடித் தாக்கும் ஆயுதங்கள்(Target Guided Missiles) வைத்திருக்காத போது இலக்கை மீறும் தாக்குதல்களால் ஆபத்து அதிகம்.சுற்றுச்சூழல்பலன்கள்-ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.அபலன்கள்-சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்,ஏனெனில் இப்பகுதியின் கால்வாய்ப் பகுதி சுமார் 20 மீட்டர் அளவுக்கு மேல் ஆழப்படுத்தப் படும்.-மீனவர்களில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்அரசியல்பலன்கள்(அ.வாதிகளுக்கு)-தென்னிந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய திட்டங்களில் இது ஒன்று.நல்ல காசு பார்க்கலாம்.அபலன்கள்-ஏதும் இருப்பதாக தெரியவில்லை.கலாசாரம்/உணர்வு சார்ந்தவை.பலன்கள்-ஏதும் இல்லைஅபலன்கள்-17 லட்சம் ஆயுள் கொண்ட ஒரு சின்னம் அழிக்கப்படும்.-ஒரு பெரும்பான்மை மக்களின் மத உணர்வு சீண்டப்படும் அல்லது கிடப்பில் போடப்படும்.ஆயினும் தமிழக முதல்வரோ,அவர் சார்ந்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரோ பொருளாதாரக் காரணங்களைக் கூட பட்டியலிடவில்லை.வாலாசகமான வேறுவகை விவாதங்களும் சீண்டல்களுமே அவர்களால் முன்வைக்கப் பட்டன.முதல் கருத்தாக இராமனை இழுப்பதற்குப் பதிலாக ஏன் அரசு பொருளாதார,இதர பலன்களை/அபலன்களை நீதிமன்றங்களில் பட்டியலிடக் கூடாது?கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.தொடர் நிகழ்வு 1 :உடுப்பி மடாதிபதி தமிழக முதல்வருக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுத்திருக்கிறார்; மு.க அவர்கள் எப்போதும் போல வீசிய கயிற்றின் மறுமுணை இம்முறை பிடிக்கப்பட்டிருக்கிறது...என்ன நடக்கிறது பார்க்கலாம்.சுவாரசியமான காட்சிகள் காத்திருக்கின்றன !தொடர் நிகழ்வு 2 :லாலூ,கௌடா'வுடன்,விஜயகாந்தும் கோதாவில் குதித்து இது பற்றிப் பேசியிருக்கிறார்.

அரையிறுதி: ஆஸி.யை வெல்லுமா இந்தியா?


தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தானையும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கின்றன.

லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும், சூப்பர் 8 லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வியடைந்த நியூசிலாந்து , ரன் விகித அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்ததால், தென் ஆப்பிரிக்கா வெளியேற வேண்டியதாயிற்று.அரையிறுதியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சையில் களமிறங்கும் அந்த அணி, எப்படியாவது இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அடைய எத்தனிக்கும்.உலகக்கோப்பை போட்டிகளில் சூப்பர் 8 பிரிவுக்குக் கூட முன்னேற முடியாமல் போய் அடிபட்ட பாம்பாக பாகிஸ்தான், 20 ஓவர்கள் அடிப்படையிலான இந்தப் போட்டியிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தியா-ஆஸி. போட்டிஇந்தியாவைப் பொறுத்தவரை கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.ஆஸ்திரேலியாவோ உலகச் சாம்பியன் என்பதால், டுவென்டி 20 உலகக் கோப்பையையும் கைப்பற்றி, தொடர்ந்து தங்களின் பலத்தை உலகுக்கு நிரூபிக்கத் துடிக்கும் என்பதால் இன்றைய இந்தியா - ஆஸி போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.இன்றைய போட்டிகள் முடிவில் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை என்பது தெரிந்து விடும்.வரும் திங்கட்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.




தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில், சனிக்கிழமை அன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.டர்பன் நகரில் சனிக்கிழமை இரவு 9. 30 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. லீக் போட்டி மற்றும் சூப்பர் 8 தொடரில் சிறப்பாக செயல்பட்டு, புது உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை, அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா வீழ்த்தியுள்ளது.பேட்டிங்கில் ஷேவாக், காம்பீர், தோனி, ரோகித் சர்மா என்று அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். காயமடைந்துள்ள யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்பினால், அது இந்தியாவுக்கு மேலும் பலத்தை அளிக்கும். பவுலிங்கும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.எனினும், உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எளிதாகக் கருத முடியாது. தொடரின் துவக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா, தற்போது வீறுகொண்டு எழுந்துள்ளது. அதிரடியாய விளையாடும் இலங்கை அணியை மிகச் சுலபமான வீழ்த்தி, அரையிறுதிக்கு அது தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.சூப்பர் 8 சுற்றில் 'இ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.இதேபோல், 'எப்' பிரிவில் இலங்கையை வென்று ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கேப்டவுனில் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தானும் நியூசிலாந்தும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

விஜயகாந்த் - முதல்வருக்கு கேளிவி


சென்னை: ""எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர் கருணாநிதி, மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த மூன்றாயிரம் பேர் நேற்று தே.மு.தி.க.,வில் இணைந்தனர்.





சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:"ஊழல்வாதிகளை சேர்த்துக் கொண்டு விஜயகாந்த் எப்படி ஊழலை ஒழிப்பார்' என்று கிண்டல் அடிக்கின்றனர். அழுக்கு ஆடைகள் சலவைத் தொழிலாளியிடம் போய் சேர்ந்தால் வெளுக்கும்; தே.மு.தி.க., சலவைத் தொழிலாளி போல் செயல்பட்டு, கண்டிப்பாக ஊழலை ஒழிக்கும்;என் கட்சி தொண்டர்களை தேவையில்லாமல் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபடும்படி கூற மாட்டேன். எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுத்து அரசியல் செய்ய மாட்டேன்.சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி, இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். "பாலம் கட்டிய ராமர் என்ன இன்ஜினியரா? அவர் எந்த கல்லுõரியில் படித்தவர்' என்று கேட்கிறார். "திருக்குறள் எழுதிய திருவள்ளூவர் எந்த கல்லுõரியில் படித்தவர்' என்று கேட்டால், முதல்வர் பதில் கூறுவாரா? இப்படி வெளிப்படையாக உண்மையைப் பேசினால், என்னை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவார்கள்; சிறையில் அடைத்தால் அங்கேயும் "ஜாலி'யாக இருப்பேன்.எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர், மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது. இதையெல்லாம் பேசினால், விஜயகாந்த் அறிவில்லாதவன் என்று கூறுகின்றனர். அவர்களைப் போன்று அறிவுப்பூர்வமாக கொள்ளையடிக்கவும், லஞ்சம் வாங்கவும் எனக்குத் தெரியாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

நடிகர் விஜயன் மரணம்.


கிழக்கே போகும் ரயில் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஜயன். அடுத்து வந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.


வில்லனாகவும், ஹீரோவாகவும் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தவர் விஜயன். தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, பசி, பாலைவன ரோஜாக்கள் உள்பட பல படங்களில் நடித்தார்.
சிறிது காலம் நடிப்பில் தொய்வு ஏற்ப்பட்டு வறுமையில் வாடினார்.
அவருக்கு ரன் படம் மூலம் மறுவாழ்வு கிடைத்தது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் வெளிவந்த வரலாறு படத்திலும் அஜித்துடன் நடித்தார்.
ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனது சொந்த ஊரான கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று விட்டார். விஜயனும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவரது மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.
இந் நிலையில் சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தில் நடிக்க கடந்த வாரம் சென்னை வந்தார்.
நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு. வாந்தி எடுத்தார். இதையடுத்து வடபழனியில் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.