ஜப்பான்-கலிபோர்னியாவில் நிலநடுக்கம்:
டோக்கியோ & ஆக்லாண்ட்: கலிபோர்னியா மாநிலத்தின் சான்ஜோஸ் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்ஜோஸ் நகருக்கு 15 கிலோமீட்டர் வட கிழக்கில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. இதன் அளவு 5.6 ரிக்டராக இருந்தது.
இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கலிபோர்னியா மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் சான்ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கலிபோர்னியா மாநிலம் காட்டுத் தீயால் பெரும் பொருட் சேதத்தை சந்தித்து திணறி வருகிறது. இந்த நிலையில் பூகம்பம் வேறு தாக்கியதால் அம்மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்:அதே போல ஜப்பானிலும் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக ஆடியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
ஜப்பானில் உள்ள மரியானா தீவுப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடின. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. தீவுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் ஜப்பான் நாட்டு அரசு விடுக்கவில்லை.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனே தெரியவில்லை.
0 comments:
Post a Comment