November 5, 2007

பாக். - பரபரப்பு நிகழ்வுகள் ..

பாகிஸ்தானில் மீண்டும் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிப் போடும் முஷாரப்பின் முயற்சியாக இது கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் குழப்பமான நிலைதான் நிலவுகிறது. அதன் முத்தாய்ப்பாக நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் பாகிஸ்தானில் நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ..2007, மார்ச் 9 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை முஷாரப் சஸ்பெண்ட் செய்தார். முஷாரப்புக்கு எதிராக வக்கீல்கள் கொந்தளித்தனர்.

முஷாரப்பின் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது.ஜூலை 10 - இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதியில் தீவிரவாதிகள் புகுந்து கொண்னர். ஒரு வாரமாக நடந்த முற்றுகைக்குப் பின்னர் ராணுவம் உள்ளே புகுந்து கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தனஜூலை 20 - இப்திகார் செளத்ரியை சஸ்பெண்ட் செய்தது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை அப்பொறுப்பில் நியமித்தது. முஷாரப்புக்கு இது பலத்த அடியாக அமைந்தது.

ஜூலை 27 - அபுதாபியில் பெனாசிர் பூட்டோவை சந்தித்தார் முஷாரப். ராணுவத் தளபதி பதவியிலிருந்து முஷாரப் விலக வேண்டும் என நிபந்தனை விதித்தார் பூட்டோ. அதை முஷாரப் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

செப்டம்பர் 10 - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட அவர் மீண்டும் சவூதி அரேபியாவுக்கே நாடு கடத்தப்பட்டார்.

அக்டோபர் 2 - பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது.அக்டோபர் 6 - பாகிஸ்தான் அதிபர் தேர்தல் நடந்தது. முஷாரப் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதாக தகவல் வெளியானது.அக்டோபர் 18 - பெனாசிர் பூட்டோ நாடு திரும்பினார்.

அவரது கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. 139 பேர் கொல்லப்பட்டனர்.அக்டோபர் 31 - முஷாரப் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டார் பெனாசிர். அடுத்த நாளே துபாய் புறப்பட்டுச் சென்றார்.

நவம்பர் 1 - அவசர நிலை பிரகடனம் என்ற மிரட்டலால் தங்களை பணிய வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.நவம்பர் 3 - அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

0 comments: