November 1, 2007

இலவச டிவி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்

இலவச டிவி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்:

திருநெல்வேலி: நெல்லையில் ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் இதுவரை அரசின் இலவச கலர் டிவி கிடைக்காத பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, மேலப்பாளையம் சேவை பாரதி அமைப்பாளர் ஆர்.கணேசன் தலைமையில் ஏராளமான பெண்கள் ஆட்சியாளர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்,

தமிழக அரசு ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கி வருகிறது. நெல்லை மாநகராட்சி 30வது வார்டில் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தாமல் இஷ்டப்படி கலர் டிவி வழங்கியுள்ளனர்.

இதில் வசதி படைத்தவர்கள் பலருக்கு கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை.போலியான முகவரியில் வசிப்பவர்களுக்கு எல்லாம் இந்த பயனை பெற்ற நிலையில் நேர்மையான முகவரியில் குடியிருப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச கலர் டிவி வழங்கப்படாத ஏழைகளுக்கு உடனடியாக டிவி வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments: