November 3, 2007

ரூ. 120 கோடியில் தென் தமிழகத்தில் சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனை

சேலம்: மதுரை அல்லது திருச்சி அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை அல்லது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் மேம்படுத்தி, சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக மாற்ற மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.சேலம் அரசு மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். 12 அல்லது 14 மாதங்களில் இது முடிவடையும்.

இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை புறநகரில் 700 படுக்கைகளைக் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்படும். ரூ. 300 கோடியில் இது அமையவுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் பிரான்ஸ் புற்றுநோய் ஆய்வு கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.

0 comments: