துபாய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர்வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007
துபாய்:துபாயில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் எனப்படும் தமிழ் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த, தமிழ் பாரம்பரியத்துடன் கூடிய நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் பங்கேற்றார்.ஈமான் அமைப்பின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் (குவைத் பள்ளி) உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதன் சிறப்பம்சம் என்னவெனில் தமிழத்திலிருந்து சமையல் கலைஞர்களை அமீரகத்திற்கு கொண்டு சென்று அமீரகத்தில் தமிழகப் பாரம்பர்யத்துடன் நோன்புக் கஞ்சியை நோன்பாளிகளுக்கு வழங்கி வருவது தான்.தற்பொழுது தினந்தோறும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழக நோன்புக் கஞ்சியுடன் வடை, சமோசா, பழச்சாறு, ஆரஞ்சு, பேரித்தம்பழம், மினரல் வாட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநருமான சையது எம் ஸலாஹ¤தீன் தலைமையிலும், கல்விக் குழுத் தலைவரும், ஈடிஏ அஸ்கான் இணை மேலாண்மை இயக்குநருமான பி.எஸ்.எம். ஹபிபுல்லா வழிகாட்டுதலின் பேரிலும் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது அரபியர், ஆப்பிரிக்கர், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தமிழக நோன்புக் கஞ்சியின் அருஞ்சுவையை அருந்தி மகிழக்கூடிய கேந்திரமாக இருந்து வருகிறது.கடந்த வாரம் இந்திய துணைத் தூதர் பி.எஸ். முபாரக் பங்கேற்று ஈமான் அமைப்பின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியைப் பாராட்டினார்.இத்தகைய நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் வேலுராஜாமணி அவர்கள் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக பொதுச்செயலாளர் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.இதற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அஹமது முஹைதீன், அப்துல் கத்தீம், அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ.முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லா, விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியத்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின்,படேஷா பஷீர் முஹம்மது, முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு ஏ. முஹம்மது தாஹா 050 4674399 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
September 28, 2007
துபாய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment