September 28, 2007

பஞ். தலைவர் பதவியை காத்த பெரியசாமி!

பஞ். தலைவர் பதவியை காத்த பெரியசாமி!
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவில்பட்டி:கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மல்லிகாவுக்கு எதிராக கூட்டணிக் கட்சியான திமுகவினரே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி தலையிட்டு மல்லிகாவின் பதவியைக் காப்பாற்றினார்.கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருப்பவர் மல்லிகா. இவர் மீது நம்பிக்கை இல்லா கொண்டு வர திமுக, அதிமுக, மதிமுக என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள் முடிவு செய்தனர். மல்லிகாவின் கட்சியும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக திருநெல்வேலி நகராட்சி மண்டல இணை இயக்குனரிடம் 26 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.20ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் இணை ஆணையர் மோகன் விடுப்பில் போய் விட்டார்.இதனால் கவுன்சிலர்கள் குழப்பமடைந்தனர். கடைசியில்தான் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் தலையீடு இதில் இருந்தது தெரிய வந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகராட்சித் தலைவர் பதவியை காக்கும்படி மேலிடத்திலிருந்து பெரியசாமிக்கு உத்தரவு வந்ததாம்.இதையடுத்து அவர் இணை இயக்குநரை விடுமுறையில் போகுமாறு அறிவுறுத்தினாராம். இதன் மூலம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவியின் பதவியைக் காப்பாற்றி கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளாராம்.

0 comments: