September 22, 2007

ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75லிருந்து 100 இடங்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களை அதிகரிக்கும் முடிவை புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான வசதிகள், கட்டடங்கள், கருவிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர் என்று அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



நன்றி - தினமலர்

0 comments: