September 21, 2007

வருகிறது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்

வருகிறது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007



துபாய்:

மிகப் பிரபலமான துபாய் விற்பனைத் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் மிகப் பிரமாண்டமான துபாய் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 24ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மேற்கண்ட தகவலை ஷேக் அஹமது பின் சயீது அறிவித்தார். துபாய் விற்பனைத் திருவிழா 13 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழா 32 நாட்கள் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொழுது போக்கு அம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாய் அமைந்து வருவதில் துபாய் விற்பனைத் திருவிழா ஒரு தனியிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2006-07 விற்பனைத் திருவிழாவின் போது 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.

இத் திருவிழாவையட்டி குளோபல் கிராமம் ( Global Village ) ஏற்படுத்தப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை உலக மக்கள் கண்டு களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

0 comments: