September 28, 2007

வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு

வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவை:முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பாஜக எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ராமர் குறித்து அவதூறாகப் பேசும் கருணாநிதியின் நாக்கையும், தலையையும் கொண்டு வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும் என அறிவித்தார் வேதாந்தி.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். சில நீதிமன்றங்களில் வேதாந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையிடமும் புகார் கொடுக்கப்பட்டது.சென்னை போலீஸாரிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல கோவையில் குமார் என்ற வழக்கறிஞர் வேதாந்தி மீது நடவடிக்ைக எடுக்கக் கோரி மாநர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.அதன் பேரில் தற்போது வேதாந்தி மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 comments: