கோவில்களில் குண்டுகள் கண்டுபிடிப்பு; கோவையில் பதட்டம் - கண்காணிப்பு தீவிரம்!
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007
கோவை:
கோவையில் உள்ள புகழ் பெற்ற வரசித்தி விநாயகர் கோவிலில் சக்தி வாய்ந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல நகரின் வேறு சில கோவில்களிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கோவில்களில் பிரசித்தமானது வரசித்தி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுள் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு கோவில் வாசலில் ஒரு பை கிடந்தது. அதைப் பார்த்த கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும், போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டு சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் சக்தி வாய்ந்த சில கையெறி குண்டுகள் இருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கையெறி குண்டுகளை யார் கொண்டு வந்து போட்டது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில், ராஜவீதியில் உள்ள 2 கோவில்களிலும் இதேபோல குண்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கோவை கோவில்களில் வெடிகுண்டுகள் சிக்கியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். முக்கியக் கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
September 21, 2007
கோவில்களில் குண்டுகள் கண்டுபிடிப்பு; கோவையில் பதட்டம் - கண்காணிப்பு தீவிரம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment