சாமி கும்பிட வந்த 4 பெண்கள் கற்பழித்துக் கொலை-4 பேர் கைது
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007
சாத்தூர்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நான்கு பெண்களைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொன்ற நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தென் மாவட்ட மக்களிடையே மிகவும் பிரபலமானதாகும். திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் போல இதுவும் வெகு பிரசித்தி பெற்ற அம்மன் தலமாகும்.இங்கு பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனுக்குப் பொங்கல் வைத்து, மொட்டைப் போட்டு, நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். கடந்த 15ம் தேதி இருக்கன்குடி அம்மன் கோவில் அமைந்துள்ள வைப்பாறு பகுதியில் பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அந்தப் பெண் கற்பழித்துப் பின்னர் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.அவரது பெயர் ஜெயலட்சுமி என்பதும், கோவில்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன் என்பவரின் மனைவி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அவர் கற்பழித்துக் கொலை செசய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், சுப்புராஜ் என்பவரின் தலைமையில் ஒரு கும்பலே இதுபோல பெண் பக்தர்களை கற்பழித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வருவது தெரிய வந்தது.இதையடுத்து சுப்புராஜை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடன் இருந்த வளையல் கடைக்காரர் பாலமுருகன், பாத்திரக் கடைக்காரர் மாரிமுத்து, இன்னொரு வளையல் கடைக்காரர் ராஜ்குமார் ஆகியோரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.ஜெயலட்சுமி உள்பட நான்கு பெண் பக்தர்களை இதுபோல கற்பழித்துக் கொலை செய்ததாக கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். மேலும் தங்களது கும்பலில் மேலும் 3 பேர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களைப் போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.புகழ் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்களை கற்பழித்துக் கொன்ற செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 28, 2007
சாமி கும்பிட வந்த 4 பெண்கள் கற்பழித்துக் கொலை-4 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment