ஆந்திர கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொண்டு மாணவர்களை சேர்க்க, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.எனினும் முஸ்லீம் இட ஒதுக்கீட்டின் கீழ் இதுவரை நடந்துள்ள மாணவர் சேர்க்கையை இது எவ்விதத்திலும் பாதிக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பான உத்தரவை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்தது. மேலும், இவ்வழக்கில் விளக்கம் அளிக்க ஆந்திர அரசு அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கை அக்டோபர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.ஆந்திராவில் உள்ள தொழில்நுட்ப மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் செப்டம்பர் 30ம் தேதி நிறைவடைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆந்திராவில் தொழில்நுட்ப மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர அரசு உத்தரவிட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment