September 28, 2007

கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல்

கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல்
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

திருநெல்வேலி:சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென்காசி அருகே சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக ஆண்டபெருமாள், கேஷியராக மாடசாமி, முதுநிலை எழுத்தாளராக முகமது கனி, நகை மதிப்பிட்டாளராக அருணாசலம் ஆகியோர் உள்ளனர்.இந்த வங்கியை தென்காசி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் ஆய்வு செய்தார்.அப்போது வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. குறிப்பாக நகை கடன் வாங்கியதாக போலி கணக்கு எழுதி ரூ.32.74 லட்சம் கையாடல் நடந்தது தெரிய வந்தது. அரசின் தள்ளுபடி திட்டத்தில் விவசாய நகைக் கடனில் போலியாக கையெழுத்திட்டு ரூ.8.58 லட்சமும் சுருட்டப்பட்டது தெரியவந்தது.பல்வேறு முறைகேடுகளால் ரூ.77 லட்ம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து துணைப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் அருணாசலம் நெல்லை 2வது நீதிதுறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார்.இவரை அக். 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) ஹேமா உத்தரவிட்டார்.

0 comments: