September 21, 2007

ஆபாச சிடிக்களுடன் எமிரேட்ஸில் இந்தியர் கைது

ஆபாச சிடிக்களுடன் எமிரேட்ஸில் இந்தியர் கைது
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007



துபாய்:

ஆயிரக்கணக்கான ஆபாச சிடிக்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆபாச சிடிக்கள், டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அஜ்மான் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஆபாச சிடிக்களுடன் ஒருவர் தங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த குறிப்பிட்ட வீட்டுக்குப் போலீஸார் விரைந்தனர். ஆனால் அப்போது அங்கு யாரும் இல்லை. இதையடுத்து போலீஸார் பதுங்கியிருந்தனர். சிறிது நேரம் கழித்து ஒருவர் அங்கு காரில் வந்தார்.

அவரை அப்படியே மடக்கிப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரது காரிலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆபாச சிடிக்கள், டிவிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.

சிடிக்களுடன் சிக்கிய நபரின் பெயர் முகம்மது அலி (32). சட்டவிரோதமாக அலி எமிரேட்ஸில் தங்கியுள்ளார். இங்கு ஆபாச சிடிக்கள், டிவிடிக்களை விற்பதை தொழில் போல செய்து வந்துள்ளார்.

துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு டிவிடி 22 ரூபாய்
(2 திர்ஹாம்) என்ற விலையில் வாங்கி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சிடிக்கள், டிவிடிக்களை, 5 திர்ஹாம் வரை விலை வைத்து ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் விற்று வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments: