தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தானையும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கின்றன.
லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும், சூப்பர் 8 லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வியடைந்த நியூசிலாந்து , ரன் விகித அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்ததால், தென் ஆப்பிரிக்கா வெளியேற வேண்டியதாயிற்று.அரையிறுதியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சையில் களமிறங்கும் அந்த அணி, எப்படியாவது இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அடைய எத்தனிக்கும்.உலகக்கோப்பை போட்டிகளில் சூப்பர் 8 பிரிவுக்குக் கூட முன்னேற முடியாமல் போய் அடிபட்ட பாம்பாக பாகிஸ்தான், 20 ஓவர்கள் அடிப்படையிலான இந்தப் போட்டியிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தியா-ஆஸி. போட்டிஇந்தியாவைப் பொறுத்தவரை கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.ஆஸ்திரேலியாவோ உலகச் சாம்பியன் என்பதால், டுவென்டி 20 உலகக் கோப்பையையும் கைப்பற்றி, தொடர்ந்து தங்களின் பலத்தை உலகுக்கு நிரூபிக்கத் துடிக்கும் என்பதால் இன்றைய இந்தியா - ஆஸி போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.இன்றைய போட்டிகள் முடிவில் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை என்பது தெரிந்து விடும்.வரும் திங்கட்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில், சனிக்கிழமை அன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.டர்பன் நகரில் சனிக்கிழமை இரவு 9. 30 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. லீக் போட்டி மற்றும் சூப்பர் 8 தொடரில் சிறப்பாக செயல்பட்டு, புது உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை, அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா வீழ்த்தியுள்ளது.பேட்டிங்கில் ஷேவாக், காம்பீர், தோனி, ரோகித் சர்மா என்று அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். காயமடைந்துள்ள யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்பினால், அது இந்தியாவுக்கு மேலும் பலத்தை அளிக்கும். பவுலிங்கும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.எனினும், உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எளிதாகக் கருத முடியாது. தொடரின் துவக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா, தற்போது வீறுகொண்டு எழுந்துள்ளது. அதிரடியாய விளையாடும் இலங்கை அணியை மிகச் சுலபமான வீழ்த்தி, அரையிறுதிக்கு அது தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.சூப்பர் 8 சுற்றில் 'இ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.இதேபோல், 'எப்' பிரிவில் இலங்கையை வென்று ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கேப்டவுனில் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தானும் நியூசிலாந்தும் பலப்பரிட்சை நடத்துகின்றன.
0 comments:
Post a Comment