September 22, 2007

விஜயகாந்த் - முதல்வருக்கு கேளிவி


சென்னை: ""எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர் கருணாநிதி, மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த மூன்றாயிரம் பேர் நேற்று தே.மு.தி.க.,வில் இணைந்தனர்.





சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:"ஊழல்வாதிகளை சேர்த்துக் கொண்டு விஜயகாந்த் எப்படி ஊழலை ஒழிப்பார்' என்று கிண்டல் அடிக்கின்றனர். அழுக்கு ஆடைகள் சலவைத் தொழிலாளியிடம் போய் சேர்ந்தால் வெளுக்கும்; தே.மு.தி.க., சலவைத் தொழிலாளி போல் செயல்பட்டு, கண்டிப்பாக ஊழலை ஒழிக்கும்;என் கட்சி தொண்டர்களை தேவையில்லாமல் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபடும்படி கூற மாட்டேன். எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுத்து அரசியல் செய்ய மாட்டேன்.சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி, இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். "பாலம் கட்டிய ராமர் என்ன இன்ஜினியரா? அவர் எந்த கல்லுõரியில் படித்தவர்' என்று கேட்கிறார். "திருக்குறள் எழுதிய திருவள்ளூவர் எந்த கல்லுõரியில் படித்தவர்' என்று கேட்டால், முதல்வர் பதில் கூறுவாரா? இப்படி வெளிப்படையாக உண்மையைப் பேசினால், என்னை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவார்கள்; சிறையில் அடைத்தால் அங்கேயும் "ஜாலி'யாக இருப்பேன்.எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர், மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது. இதையெல்லாம் பேசினால், விஜயகாந்த் அறிவில்லாதவன் என்று கூறுகின்றனர். அவர்களைப் போன்று அறிவுப்பூர்வமாக கொள்ளையடிக்கவும், லஞ்சம் வாங்கவும் எனக்குத் தெரியாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

0 comments: