September 29, 2007

திமுக பந்த்துக்கு தடை இல்லை; அரசுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு!

திமுக பந்த்துக்கு தடை இல்லை; அரசுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு!
சென்னைதிமுக கூட்டணி சார்பில் அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் நடத்தப்படவுள்ளது முழு அடைப்பு அல்ல, பந்த் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம், இதற்கு தடை விதிக்க அது மறுத்து விட்டது. மாறாக, மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவிதத்தலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு அது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அக்டோபர் 1ம் தேதி திமுக கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல ஜனதாக் கட்சி மற்றும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆகியாரும் வழக்குத் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் அனைத்தும் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆதியார் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, இது பந்த் அல்ல, முழு அடைரப்புப் போராட்டம்தான். போராட்டத்தின்போது எந்தவித வன்முறையும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, இது சட்டவிரோதமானது. பந்த் நடத்துவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே திமுக போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாதுகாப்பு தொடர்பாக அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்றைக்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.இதைப் பரிசீலித்த நீதிபதிகள், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருப்பது ஸ்டிரைக் அல்லது ஹர்த்தால் அல்ல, பந்த் என்று தெளிவாகத் தெரிய வருகிறது.இதை எதிர்த்து அதிமுக, ஜனதாக் கட்சி, டிராபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்துள்ள மனுக்களை விசாரணைக்கு ஏற்கிறோம். இவர்களது மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட பந்த்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.அதேசமயம், இந்த முழு அடைப்பை நடத்த தடை விதிக்க விரும்பவில்லை. அதேசமயம், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்துப் பொது போக்குவரத்தும் சுமூகமாக, இயல்பாக, வழக்கம் போல நடைபெற வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பத்திரிக்கைகளில் அரசு விரிவாக விளம்பரம் செய்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.போக்குவரத்தைத் தடை செய்ய முயல்வோர், பொதுமக்களின் இயல்பான நடவடிக்கைகளுக்குத் தடை செய்ய முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments: