நடிகை நயன்தாராவின் தாயார் கொலையாகிவிட்டதாக இன்று காலை ஹைதராபாத்தில் செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்திலிருந்து (சென்னையிலிருந்தும் இது வெளியாகிறது) வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழில் இச் செய்தி இன்று வெளியானது.
அதிஸ், பிரபல நடிகை நயனதாராவின் தாயார் கமலா தேவி (வயது 45), ஹைதராபாத் நகரின், மதுரா நகர் பகுதியில் நக்சலைட்டுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். கொலையாளிகள், 50 தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் என்று கூறப்பட்டிருந்தது. நயனதாரா படமும் இடம் பெற்றிருந்தது.
இந்த சமயத்தில் நயனதாரா சென்னையில் இருந்தார். செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கேரளாவில் உள்ள தனது தாயார் ஓமனா குரியனுக்குப் போன் செய்தார்.
இந்த கொலை செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளார் நயனதாரா. அதைக் கேட்டதும், நயனதாராவை ஆறுதல்படுத்திய ஓமனா குரியன், கவலைப்படாதே, எனக்கு ஒன்றும் இல்லை, நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
உண்மையில் நடந்தது என்ன?:
நயனதாரா என்ற பெயரில் தெலுங்கில் ஒரு ஜூனியர் நடிகை இருக்கிறார். அவரது தாயார்தான் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த செய்தியைத்தான் நயனதாராவின் படத்துடன் வெளியிட்டுவிட்டனர்.
துணை நடிகையின் தாயார் கொலை செய்யப்பட்ட அன்று நயனதாரா ஹைதராபாத்தில் இல்லை. சத்யம் பட ஷூட்டிங்குக்காக சென்னையில் இருந்தார்.
இந்த செய்தியை அறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் நயனாராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எஸ்.எம்.எஸ். மூலமும் துக்கம் விசாரித்துள்ளனர். அதன் பிறகுதான் நயனதாராவுக்கு மேட்டர் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ள நயனதாரா கூறுகையில், பலமுறை பத்திரிக்கைகள் பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடுவதாக நான் கூறியுள்ளேன். என்னைப் பற்றிய பல தவறான செய்திகள் வந்துள்ளன. இப்போது இப்படி ஒரு அபாண்டமான அபத்தமான செய்தியை அந்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த நாளிதழ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து நான் வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.
September 26, 2007
நயனதாரா தாயார் கொலையானதாக புரளி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment