September 22, 2007

நடிகர் விஜயன் மரணம்.


கிழக்கே போகும் ரயில் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஜயன். அடுத்து வந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.


வில்லனாகவும், ஹீரோவாகவும் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தவர் விஜயன். தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, பசி, பாலைவன ரோஜாக்கள் உள்பட பல படங்களில் நடித்தார்.
சிறிது காலம் நடிப்பில் தொய்வு ஏற்ப்பட்டு வறுமையில் வாடினார்.
அவருக்கு ரன் படம் மூலம் மறுவாழ்வு கிடைத்தது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் வெளிவந்த வரலாறு படத்திலும் அஜித்துடன் நடித்தார்.
ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனது சொந்த ஊரான கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று விட்டார். விஜயனும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவரது மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.
இந் நிலையில் சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தில் நடிக்க கடந்த வாரம் சென்னை வந்தார்.
நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு. வாந்தி எடுத்தார். இதையடுத்து வடபழனியில் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

0 comments: