September 28, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கு- நாளை முதல் தண்டனை விவரம் அறிவிப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கு- நாளை முதல் தண்டனை விவரம் அறிவிப்பு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாளை முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.இதுதொடர்பான வழக்கு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பளித்தார். அதன்படி அல் உம்மா பாஷா உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களிடம் நீதிபதி தனித் தனியாக அழைத்துக் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கட்த 18ம் தேதியுடன் இது முடிந்தது.இதையடுத்து நாளை முதல் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதையடுத்து கோவை முழுவதும் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 comments: