September 28, 2007

3வது அணியில் அதிமுக நீடிக்கிறது; ஜெ.வுடன் கருத்து வேறுபாடு உள்ளது- நாயுடு

3வது அணியில் அதிமுக நீடிக்கிறது; ஜெ.வுடன் கருத்து வேறுபாடு உள்ளது- நாயுடு
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

டெல்லி:3வது அணியில்தான் அதிமுக நீடிக்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அவர்களுடன் (ஜெயலலிதா) சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதை பேரி சரி செய்து விடுவோம் என்று தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.டெல்லியில் நேற்று 3வது அணியான ஐக்கிய தேசிய முற்ேபாக்குக் கூட்டணியின் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஜெயலலிதா வராத நிலையில் முதலில் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.இந்த நிலையில் நேற்று டெல்லியில், சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் யாதவை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், 3வது அணியின் கூட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறும்.அதிமுக 3வது அணியில்தான் நீடிக்கிறது. அதில் எந்த சந்ேதகமும் வேண்டாம். ஆனால் வெளியில் கூறப்படுவதைப் போல சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதை தலைவர்கள் கூடிப் பேசி சரி செய்து விடுவோம்.இந்த அணி உருவாக முக்கியப் பங்கு வகித்தவர் ஜெயலலிதா. எனவே அவருடன் பேசி பிரச்சினைகளை சரி செய்து கூட்டணியை வலுவானதாக மாற்றுவோம்.சேது சமுத்திரத் திட்டம் முக்கியமானது. அதேசமயம், மக்களின் மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.

0 comments: