September 26, 2007

விஜயகாந்தின் இப்தார் விருந்தின் பின்னணி

தேமுதிக மாநில தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தற்போது தனது அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடாவில் இருக்கிறார். அவர் கனடா செல்ல விமான நிலையத்துக்கு போவதற்குள், இப்தார் விருந்தை முடித்துவிட்டு சென்றார். திடீர் இப்தார் விருந்தை அவர் ஏற்பாடு செய்தது பலருக்கு ஆச்சரியம். ராமரைப் பற்றி முதல்வர் கருணாநிதி பேசிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த், இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கும் கருணாநிதி மற்ற மதங்களையும் விமர்சிப்பாரா என்று காட்டமாக கேட்டார். இதனால், அவரது கட்சியில் இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமுதாயத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக அந்த சமுகத்தை சமாதானப்படுத்த அவசர அவசரமாக இப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்களாம். கொசுறு: கனடாவில் 12ம் தேதி வரையில் தங்கியிருக்கும் விஜயகாந்தை சந்திக்க மாறன் சகோதரர்கள் விருப்பம் தெரிவித்து தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார்களாம். தமிழகத்தில் எங்கு சந்தித்தாலும், உளவுத்துறை மோப்பம் பிடித்துவிடும் என்பதால் அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ சந்திக்க விரும்புவதாக தெரிகிறது.

0 comments: