September 29, 2007

முஷாரப் போட்டியிட தடை நீங்கியது; எதிர்க்கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி!

முஷாரப் போட்டியிட தடை நீங்கியது; எதிர்க்கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி!

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதன் மூலம் முஷாரப் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது. இதில் முஷாரப் போட்டியிடுகிறார். ராணுவத் தளபதி பதவியில் இருந்தபடி முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த பெஞ்சுக்கு நீதிபதி ரானா பகவான்தாஸ் தலைமை தாங்கினார் (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இப்திகார் செளத்ரியை நீக்கி விட்டு, இவரைத்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக முஷாரப் நியமித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்)இன்று நீதிபதி பகவான்தாஸ் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதன்படி, முஷாரப் போட்டியிடுவதை எதிர்ப்பதற்காக கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.9 நீதிபதிகளில் 6 பேர் முஷாரப்புக்கு எதிரான வாதங்களை நிராகரித்ததால், மெஜாரிட்டி அடிப்படையில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி ராணா பகவான்தாஸ் அறிவித்தார்.

0 comments: