September 28, 2007

நெல்லையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை

நெல்லையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை
வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

வள்ளியூர்:ராதாபுரம் அருகே முன்விரோதத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வட்டவிளையை சேர்ந்தவர் பெருமாள் நாடார். உதயத்தூர் பஞ்சாயத்து 4வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெட்டும்பெருமாள். உதயத்தூர் அருகே உள்ள காற்றாலையில் வாட்சுமேனாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் வெட்டும்பெருமாளை காற்றாலை நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை விட்டு நீக்கியது.தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு பெருமாள் நாடார் தான் காரணம் என நினைத்த வெட்டும்பெருமாள் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.இந் நிலையில் வெட்டும்பெருமாள் மற்றும் அவரது மகன் முத்துகுமார் ஆகியோர் அங்கு சென்றனர் நேற்று முன்தினம் இரவு பெருமாள் நாடாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.பல இடங்களில் வெட்டப்பட்ட பெருமாள் நாடார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

0 comments: