November 3, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்திலும் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களிலும் துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் அதிபராக அண்மையில் முஷரப் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டது சட்டப்படி சரியா என்பது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக முஷாரப் காத்திருக்கிறார். இந்த தீர்ப்பு முஷாரப்புக்கு எதிராக செல்லலாம் என்று அவரது அரசாங்கத்தில் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர நிலை பிரகடனத்தை அடுத்து துபாயில் உள்ள நாட்டின் எதிர்கட்சித் தலைவர் பேனசிர் பூட்டோ நாடு திரும்புவது குறித்து முரண்பட்ட தகவல்கள் வருகின்றன.

0 comments: