December 21, 2008

கடலுக்கடியில் கேபிள்கள் துண்டிப்பு-இன்டர்நெட் சேவை பாதிப்பு

கடலுக்கடியில் கேபிள்கள் துண்டிப்பு-இன்டர்நெட் சேவை பாதிப்பு
சனிக்கிழமை, டிசம்பர் 20, 2008, 13:13 [IST]

Cable under Water
டெல்லி: சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலில் போடப்பட்டுள்ள கடலுக்கடி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தொலைத் தொடர்பு சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மொத்தம் நான்கு கேபிள்கள் சேதமடைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீத அளவுக்கு இன்டர்நெட் மற்றும் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நேற்று பிற்பகலுக்கு மேல் பல பிபிஓ நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு விட்டது.


அதேபோல சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கேபிள்கள் சேதமடைந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் கேபிள்கள் சேதமடைந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மால்டா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கேபிள்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

0 comments: