December 21, 2008

விரைவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல்?

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குளோபல் இன்டலிஜென்ஸ் சர்வீஸ் ஸ்ட்ராட்பார் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள நிலைகளைக் குறி வைத்து தாக்க இந்திய விமானப்படையும், ராணுவமும் தயார் நிலையில் உள்ளன.

பச்சைக் கொடி கிடைத்ததும் அவை களத்தில் இறங்கும். பாகிஸ்தான் தரப்பிலிருந்து தீவிரவாதிகளையும் தீவிரவாத முகாம்களையும் ஒழிக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி அனுப்பியிருந்த செய்தியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படாவிட்டால் அதற்கு எதிரான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என்று எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

0 comments: