October 31, 2007

4 மாதத்தில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

4 மாதத்தில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:

மேட்டூர்: தமிழகத்திலும், கர்நாடகத்திலும பெய்து வரும் கன மழையால் காவிரியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதன் மூலம் 4 மாதங்களுக்குள் 7வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பெய்த கன மழையினால் அந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது தமிழகத்தில் பருவமழை பெய்யாவிட்டாலும், கர்நாடகத்தில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் மேட்டூர் அணை நிரம்பியது.இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் ஒரு முறையும், ஆகஸ்ட் மாதத்தில் இரு முறையும், செப்டம்பர் மாதத்தில் 3 முறையும் நிரம்பியது மேட்டூர்.இந் நிலையில் தற்போது தமிழகத்திலும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது.தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 55,087 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 32,620 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

0 comments: