October 2, 2007

திமுக-அதிமுக மோதல், போலீஸ் துப்பாக்கி சூடு

மன்னார்குடி:

மன்னார்குடியில் திமுக, அதிமுக தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதல் கடைசியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று திமுக மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத பந்தலில் இருந்த திமுகவினரிடம், அங்குவந்த அதிமுகவினர் தகராறு செய்துள்ளனர்.

இதனால் இரு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட தகராறு பின்பு கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முனைந்தும் முடியவில்லை. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் கலவரக்காரர்கள் நாலாப்புறமும் தலைதெறிக்க ஓடினர். இந்த மோதலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: