அதிமுக அலுவலகத்திற்கு 'பூட்டு மேல் பூட்டு'!
கரூர்:கரூரில் அதிமுக அலுவலகத்திற்கு இரட்டை பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர், தாந்தோணி நகர அதிமுக அலுவலகம் திண்டுக்கல் செல்லும் சாலையில் மில் கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்திற்கு வழக்கம் போல் நேற்று நிர்வாகிகள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வழக்கமாக போடப்படும் பூட்டுக்கு மேல் ஒரு பூட்டை யாரோ மர்ம ஆசாமிகள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இத்தகவல் தாந்தோணி நகர அதிமுக செயலாளர் பெரியசாமிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் உடனே அலுவலகத்திற்கு வந்து பார்த்து நடந்தது என்ன என விசாரித்தார்.உடனே அவர் இத்தகவலை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தார்.இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி மீது உள்ள கோபத்தில் யாரோ சிலர் இப்படி ஒரு பாதக செயலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.ஆனால் இப்பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
October 2, 2007
அதிமுக அலுவலகத்திற்கு 'பூட்டு மேல் பூட்டு'!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment