பதவியிலிருந்து விலகுகிறார் குமாரசாமி: ஆளுநர் அறிவுரை எதிரொலி
பெங்களூர்:பதவியிலிருந்து விலகுவது நல்லது என்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து இன்று மாலைக்குள் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகத்தில் அரசியல் சூழ்நிலை உச்ச கட்ட குழப்பத்ைத எட்டியுள்ளது. ஒப்பந்தப்படி ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்காததால், குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இதையடுத்து குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது.இதையடுத்து காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனையில் இறங்கியது. இந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு கோரி ஆளுநர் தாக்கூரிடம் மனு அளித்தது.இந்த நிலையில் குமாரசாமிக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள எதிராக லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர்.இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்தனர். மாநிலத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டசபை காங்கிரஸ் தலைவர் தரம்சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநரை சந்தித்தது.அப்ேபாது குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறி விட்டது. குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தர விரும்பவில்லை. இனியும் குமாரசாமி அரசு பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை வலியுறுத்தினர்.மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான, பொதுச் செயலாளர் பிருத்விராஜ் செளகானும், ஆளுநரை சந்தித்து சுமார் 2 மணி நேரம் விவாதித்தார். அவரும், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு கோரினார்.இந்த நிலையில், பதவியிலிருந்து விலகுமாறு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், முதல்வர் குமாரசாமியைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் கர்நாடகத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆளுநரின் கோரிக்கை குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று மாலைக்குள் எனது நிலையை அறிவிப்பேன் என்றார்.ஆனால் ஆட்சியில் நீடிப்பதற்கான எந்த வழியும் இல்லாததால், முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி விலகி விடுவார் என்று தெரிகிறது. இன்று மாலையில் தனது முடிவை குமாரசாமி அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து கர்நாடகத்தில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
October 9, 2007
பதவியிலிருந்து விலகுகிறார் குமாரசாமி: ஆளுநர் அறிவுரை எதிரொலி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment