October 30, 2007

மைனாரிட்டியிஸத்தை எதிர்க்கிறேன்- நரேந்திர மோடி

டெல்லி:

அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து, முஸ்லீம்கள் பலியாகக் காரணமாக இருந்த குஜராத் கலவரத்தில் மோடிக்கும் நேரடி பங்கிருப்பதாக வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் சஹாரா சமய் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியாரும் மைனாரிட்டிகளை விரும்புவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன். இதனால் தான் எதிலும் மைனாரிட்டிகளுக்கு முன்னுரிமை என்ற பிரதமரின் நிலையை எதிர்க்கிறேன். இது குறித்த என் எதிர்ப்பை தெரிவித்த பின்னர் தான் பிரதமரே தனது தவறை உணர்ந்தார்.நான் ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை தான். இந்துத்துவத்தை முழுவதுமாய் உணர்ந்தவர்கள் தான் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.குஜராத்தில் மீண்டும் மதக் கலவரம் வராது என்ற உறுதிமொழியைத் தருவீர்களா என்ற கேள்விக்கு மோடி நேரடியாக பதில் தரவில்லை. அவர் கூறுகையில், எங்களது மண்ணில் உயிர் பறிக்கும் வியாபாரிகளுக்கு இடமில்லை. தீவிரவாதிகளுக்கு குஜராத்தில் தக்க பதிலடி கிடைக்கும் என்றார்.யார் அந்த உயிர் பறிக்கும் வியாபாரிகள் என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, அவர்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும் என்றார்.குஜராத்தின் 5.5 கோடி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், எனக்கு கவலையில்லை. நான் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவன் என்றார்.உங்கள் கட்சியினரே குஜராத் கொலைகள் குறித்து பெருமையாக பேசி அது தெஹல்கா வீடியோவில் பதிவாகியுள்ளதே என்று கேட்டதற்கு, நேரடியாக பதிலளிக்க மறுத்த மோடி, குஜராத் மக்கள் அம் மாநில வளர்ச்சியில் பெருமை கொள்கிறார்கள் என்றார்.ராகுலை முன் நிறுத்தி குஜராத் தேர்தல் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது குறித்து கேட்டபோது, குஜராத்தை ராகுல் காந்தி தனக்கு ஒரு பரிசோதனைக் கூடமாக பயன்படுத்தலாம். தனது திறமையை எல்லாம் அங்கு வந்து காட்டலாம். ராகுலுக்கு கூட்டம் கூடுமா இல்லையா என்ற கவலையெல்லாம் எனக்கில்லை. இந்தத் தேர்தலில் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதை யாராலும் மாற்ற முடியாது என்றார்.உங்கள் அரசியல் வாழ்வில் தேசிய அளவில் ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா என்று கேட்டபோது, எனக்கு அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை, ஆனால், 5.5 கோடி குஜராத்திகளுக்காக உழைக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள் என்றார் மோடி.

0 comments: