பிரபல டாக்டர் மீது கற்பழிப்பு புகார்!
திருச்சியில் உள்ள பிரபல டாக்டர் மீது கொடுக்கப்பட்ட கற்பழிப்பு புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக இருப்பவர் ரமேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மணப்பாறை கிளினிக்கில் அதே பகுதியை சேர்ந்த போதும்பொண்ணு என்ற பெண் இவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராகவும், மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து வைத்தியம் பார்த்து வரும் டாக்டர் ரமேஷ் கிளினிக்கில் அவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன்.என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டார். தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அவரிடம் நான் கேட்டபோது அவர் என்னை திட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறார்.எனவே டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளார். இம்மனு மீது விசாரணை நடத்திய திருச்சி எஸ்பி ராஜசேகர் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் இல்லை என அவர் மனுவை நிராகரித்து விட்டார்.இதனால் போதும் பொண்ணு தனக்கு நியாம் வேண்டி தமிழக முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.சிறுவன் செய்த சிசேரியனுக்கு அடுத்த படியாக, மேலும் ஒரு டாக்டர் பிரச்சனை மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 2, 2007
பிரபல டாக்டர் மீது கற்பழிப்பு புகார்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment