புதுவை அரசை டிஸ்மிஸ் செய்க - அதிமுக
புதுச்சேரி:சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி புதுச்சேரியில் முழு அடைப்பை நடத்திய புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உண்ணாவிரதம் என்ற போர்வையில் புதுவையிலும் பந்த் நடத்தியுள்ளனர்.இன்று காலை கடைகள் அனைத்தையும் திமுக கூட்டணியினர் கட்டாயப்படுத்தி மூடச் செய்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுவை காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் சாயா சர்மாவிடம் நாங்கள் புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையிலானது. புதுச்சேரிக்கென தனியாக உத்தரவு தேவையில்லை. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தப்பட்டதைத் தடுக்கத் தவறி விட்டார் புதுவை முதல்வர் ரங்கசாமி என்றார் அவர்.
October 2, 2007
புதுவை அரசை டிஸ்மிஸ் செய்க - அதிமுக
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment