October 9, 2007

தொப்புளில் பம்பரம் விட்டவரெல்லாம் ஆட்சி அமைக்க முடியுமா? - சரத் 'நச்'

தொப்புளில் பம்பரம் விட்டவரெல்லாம் ஆட்சி அமைக்க முடியுமா? - சரத் 'நச்'


சென்னை:தொப்புளில் பம்பரம் விட்டவெரல்லாம் ஆட்சி அமைக்க முடியுமா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தாக்கியுள்ளார்.சென்னையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சரத்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொப்புளில் பம்பரம் விட்டவர் ஆட்சி அமைக்கப் போவதாக கூறிக் கொள்கிறார் என்று சிலர் சொன்னார்கள். சிறுவர்கள் தான் பம்பரம் விடுவார்கள். அதைப்பற்றி வேறெதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. இன்று தமிழகத்தில் ஒரு கட்சித்தலைவர், என் கட்சியை அழிக்க முடியாது என்கிறார். இன்னொரு கட்சித் தலைவியோ என் கட்சியை அழிக்க முடியாது என்கிறார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மக்களை அழிக்கிறார்களா என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்த நிலை மாற வேண்டும். ஒரு பண்பான அரசியல் நிலவ வேண்டும். இளைஞர்களை வழிநடத்தும் சக்தியாக எங்கள் கட்சி திகழும். நாம் அனைவரும் ஒன்று பட்டால், வரும் 2011ல் தமிழகத்தில் நிச்சயம் நமது கட்சி ஆட்சி அமையும்.காமராஜர் ஆட்சிக்கு கடந்த 40 ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் நடப்பது குடும்ப அரசியல் தான். சுயநல அரசியல் நடக்கிறது. அரசியல் பண்பாட்டை எவரும் கடைபிடித்ததாக தெரியவில்லை.மதக்கலவரத்தை தூண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். முதல்வரே ராமரைப் பற்றி இழிவாக பேசியுள்ளார். முதல்வர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். நான் உண்மையைத் தான் சொல்வேன். ஓட்டு வாங்குவதற்காக எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன். இனவெறி, மதவெறியாக மாறிவிடாமல் காக்கும் பொறுப்பு நமக்கு இருக்க வேண்டும். எங்கள் கட்சி ஜனநாயக கட்சி. அனைவருக்கும் எல்லாவற்றிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதே கொள்கை. எங்கள் கட்சியின் கொள்கைகளை விரைவில் நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்பேன் என்றார் சரத்குமார்.

0 comments: