October 2, 2007

மனைவி தலையை வெட்டிய கணவன்!

மனைவி தலையை வெட்டிய கணவன்!

விருதுநகர்:

தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வராத மனைவியின் தலையை வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் சேர்ந்த மேலப்புதூரை சேர்ந்தவர் காசிராஜன். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கூலி வேலை செய்துவரும் காசிராஜனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதனால் தனபாக்கியம் கோபித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு காசிராஜன் தனபாக்கியத்தை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தனபாக்கியம் மறுத்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட காசிராஜன் சம்வத்தன்று தனபாக்கியம் வேலை செய்யுமிடத்திற்கு சென்று அவரது தலையை வெட்டி எடுத்தார். தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்த போது காசிராஜன் தப்பி ஒடிவிட்டார்.

தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய காசிராஜனை வலை வீசி தேடி வருகின்றனர்.

0 comments: