October 9, 2007

சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மன அழுத்தம் அதிகம்-கே.கே.எஸ்.ஆர்.ஆர்.

சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மன அழுத்தம் அதிகம்-கே.கே.எஸ்.ஆர்.ஆர்.

திருநெல்வேலி:கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்குத்தான் மன அழுத்தமும் பதட்டமும் அதிகம் உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.நெல்லையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான அறுவைச் சிகிச்சை முகாம், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து ெகாண்டு ராமச்சந்திரன் பேசுகையில், ஊனமுற்றோர் வாழ்வில் மறுவாழ்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு அதிகம் உள்ளது.மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. மனிதனாக பிறப்பதே அரிது. அதிலும் ஊனமில்லாமல் பிறப்பது அரிது.மருத்துவம் படிக்க இடம் கிடைத்தவர்கள் கை நிறைய சம்பளம் என்பதால் என்ஜினியரிங் துறைக்கு செல்கின்றனர். மருத்துவ துறையை தேர்ந்தேடுத்தால் எம்பிபிஎஸ் முடித்து எம்டி, எம்எஸ், எம்.சி.எச். படிக்க பல ஆண்டுகள் ஆகி விடுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர்.ஆனால் கம்யூட்டர் எஞ்சினியர்களுக்குதான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பது சுகாதார துறை சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கம்யூட்டர் என்ஜீனியர்கள் மத்தியில் அதிகளவில் விவாகரத்துகள் உள்ளன. கம்யூட்டர் முன் அமர்ந்து கொண்டே இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கிறது.ஆனால் டாக்டர்கள் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடன் பேசுகின்றனர். இதனால் மன உளைச்சல் குறைந்து விடுகிறது. மருத்துவ துறையில் பணியாற்றுபவர் இறக்கும்வரை சம்பாதிக்கலாம். மனிதன் இருக்கும் காலம் வரை மருத்துவ துறை இருந்தாக வேண்டும் என்றார்

0 comments: