குஜராத்: 7 பேரை உயிருடன் எரித்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை:
கோத்ரா (குஜராத்): குஜராத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. முஸ்லீம்கள் குறி வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.அப்போது பஞ்சமஹால் மாவட்டம் ஈரோல் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரோடு தீவைத்து எரித்துப் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக பஞ்ச்மஹால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
0 comments:
Post a Comment