October 2, 2007

மதுரையில் ஹலோ எப்.எம். ரேடியோ தொடக்கம்

மதுரையில் ஹலோ எப்.எம். ரேடியோ தொடக்கம்

மதுரை:

மாலை மலர் நிறுவனத்தின் சார்பில் மதுரையில் ஹலோ எப்.எம். என்ற ரேடியோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் ஹலோ எப்.எம் காலடி எடுத்து வைத்துள்ளது.

தினத்தந்தி குழுமத்தின் கீழ் வரும் இந்த ரேடியோ சேவை இன்று காலை தொடங்கியது.

இதில் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த எப்.எப். சேவையை 106.4 அலைவரிசையில் கேட்கலாம்.

இந்த ரேடியோவின் அறிமுக நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது.

இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மருதமுத்து, மதுரை சரக டிஐஜி ஜெயந்த் முரளி, மாலை மலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமும் திருக்குறள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த சேவை தொடங்கும் என பாலசுப்பிரமணிய ஆதித்தன் தெரிவித்தார்.

இந்த ஹலோ எப்.எம் சேவையை மதுரையை சுற்றி 70 கி.மீ சுற்றளவுக்கு கேட்க முடியும்.

விரைவில் திருச்சி, கோவை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த எப்.எம். சேவை தொடங்கவுள்ளது.

0 comments: