October 9, 2007

மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!

மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!
வேலூர்: மகள் முறையாகும் தனது அண்ணன் மகளை, மனைவியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த காமக் கொடூர வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.அரக்கோணத்தை அடுத்துள்ள உரியூரை சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மகள் வேளாங்கண்ணி (18). சூசைராஜின் தம்பி ஆரோக்கியசாமி. இவருக்கு திருமணமாகி மார்கரெட் என்ற மனைவியும் இருக்கிறார். இவர் சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அண்ணன், தம்பி இருவரின் வீடும் அருகருகில் உள்ளது. சூசைராஜின் வீடு சமீபத்தில் பெய்த மழையின் இடிந்து விழுந்து விட்டதால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தனர்.இந் நிலையில் அண்ணன் மகள் வேளாங்கண்ணியின் மீது ஆரோக்கியசாமியின் காமக் கொடூர வக்கிரப் பார்வை விழுந்துள்ளது. இதை மனைவி மார்கரெட்டிடம் சொல்லியுள்ளார். கணவனின் கேடு கெட்ட எண்ணத்தைத் தட்டிக் கேட்கத் தவறிய மார்கரெட், வேளாங்கண்ணியை அடைய ஆரோக்கியசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். வேளாங்கண்ணியிடம், உனது சித்தப்பா நைட் ஷிப்ட் வேலைக்கு போய்விட்டார். அதனால் துணைக்கு எங்கள் வீட்டில் வந்து படுத்து கொள் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். தூங்குவதற்கு முன்பாக வேளாங்கண்ணிக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார் மார்கரெட்.சித்தியின் கொடூர சதியை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணும் பாலை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். நள்ளிரவில் அவருக்கு நினைவு வந்துள்ளது. அந்த சமயத்தில், சித்தப்பா ஆரோக்கியசாமி, மனைவியுடன் துணையுடன் தன்னை கற்பழித்தது தெரிய வந்து குரல் கொடுத்து சத்தம் போட்டுள்ளார்.ஆனால் சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என ஆரோக்கியசாமியும், மார்கரெட்டும் மிரட்டியுள்ளனர். பயந்து போன வேளாங்கண்ணி பேசாமல் இருந்து விட்டார்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆரோக்கியசாமி, பலமுறை தனது அண்ணன் மகளை மிரட்டியே சீரழித்து வந்துள்ளார். இதன் காரணமாக வேளாங்கண்ணி கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.மகள் யார் மூலமோ கர்ப்பமாகி விட்டதாக நினைத்திருந்த சூசைராஜுக்கு, தம்பிதான் இந்தக் கொடுமைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.இதையடுத்து ஆரோக்கியசாமி, மார்கரெட் ஆகியோர் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் மார்கரெட்டைக் கைது செய்தனர். ஆரோக்கியசாமி தப்பி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.மனைவியுடன் துணையுடன், அண்ணன் மகளையே கற்பழித்த அராஜக சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: