October 2, 2007

கருணாநிதிக்கு எந்த கவலையும் இல்லை-சரத்குமார்

கருணாநிதிக்கு எந்த கவலையும் இல்லை-சரத்குமார்
சென்னை:தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் விளம்பரத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததுள்ளார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சேது சமுத்திர திட்டத்திற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பந்த் நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்த பந்த் குறித்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் நான் முதலிலேயே தெரிவித்திருந்தேன்.பந்த் நடத்த தடைகோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாங்கள் முதலில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தடைவிதித்தது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் பொறுமை காத்திருந்தால், தமிழத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அசம்பாவிதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.அதைவிடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் என முதல்வர் நடத்தியிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதை காட்டுகிறது.அவருக்கும், அவரது கூட்டணிக் கட்சிகளுக்கும் எப்படியாவது அரசியல் விளம்பரம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வமும், அவசரமும் மேலோங்கியிருக்கிறது என்பதும் வெளியாகி விட்டது என்று சரத்குமார் கூறியுள்ளார்.

0 comments: