October 9, 2007

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிப்பு

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிப்பு

கடப்பா:ஆந்திரமாநிலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும் 4 வழிப்பாதைக்காக அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிக்கப்பட்டது.ஆந்திரமாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள மானபுலிவெந்தலாவில் அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு உள்ளது. இங்கு அவருடைய தாயார் வசித்து வருகிறார்.நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 4 வழிச்சாலைகள் ஆந்திராவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 4 வழிச்சாலை ராஜசேகர ரெட்டியின் வீட்டிற்கு அருகில் அமையவிருக்கின்றது.சாலையை விரிவு படுத்த வேண்டியிருப்பதால் வீட்டை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனராம். இதற்கு கடப்பா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முதல்வரிடம், இந்த சாலையை வேறு வழியாக மாற்றி விடலாமா என்று கேட்டுள்ளார்கள்.அதற்கு முதல்வர், மக்களின் பயன்பாட்டிற்காக எனது வீட்டை இடித்தால் தவறு கிடையாது. எனது வீட்டை இடிப்பதற்காக இப்பகுதியில் அமையவிருக்கும் சாலை திட்டத்தை வேறு வழியாக மாற்ற தேவையில்லை. நீங்கள் தாராளமாக வீட்டை இடித்துக் கொள்ளலாம் என்று கூறி அனுமதியளித்தார்.இதைக் கேட்ட அதிகாரிகள் முதல்வருக்கு பெரும் நன்றி தெரிவித்தார்கள். தற்போது முதல்வரின் தனது சொந்த செலவிலேயே வீடு இடிக்கப்பட்டு வருகிறது.மக்களுக்காக தனது வீட்டை இடிக்க அனுமதி கொடுத்த ஆந்திர முதல்வரை அம்மாநில மக்கள் பாராட்டி தள்ளுகிறார்கள்.

0 comments: