நூற்றுக்கணக்கான பெண்களை கல்யாணம் செய்து கொள்வதாக மோசடி செய்த லியாகத் அலிகானுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பற்றி லியாகத் அலிகான் வேண்டும் என்றே அவதூறாகக் கூறியுள்ளார்
என நடிகை நமீதா கூறியுள்ளார்.உலகம் உங்கள் விரல் அசைவில்...!
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
என நடிகை நமீதா கூறியுள்ளார்.

பெங்களூர்: 20-20 உலகக் கோப்பையை வென்றதை பெரிதாக நினைக்கும் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியா நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பியது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.பெங்களூரில் முதல் போட்டி நடக்கிறது. கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை அதே உத்வேகத்துடன் சந்திக்கத் தயாராக உள்ளனர்.மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், ஜாகீர்கான், சச்சின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு மேலும் பலத்தை அளித்துள்ளது.ஆனால் நேற்று ஆஸ்திரேலிய கேப்ட
ன் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகக் கோப்பையை வென்றது நடந்து முடிந்து போன விஷயம். இந்திய வீரர்களின் பலவீனம் எங்களுக்கு தெரியும். குறிப்பாக கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோரை அவுட்டாக்குவது எளிது.இந்திய வீரர்களுக்குத்தான் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. எனவே இந்தியாவுடனான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார். இதற்கு ராபின் உத்தப்பா சரியான பதில் அளித்திருந்தார். ஆஸ்திரேலியாவை வெல்வோம் என்று அவர் கூறியிருந்தார்.இந்தப் பின்னணியில், நாளை பெங்களூரில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.டோணி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் ஒரு நாள் போட்டித் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தம் 7 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.இந்திய அணி வீரர்கள்: டோணி (கேப்டன்), டிராவிட், சச்சின், கங்குலி, காம்பிர், யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, ஜாகீர்கான், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங், ரோகித் சர்மா, ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், ரமேஷ் பவார்.

நடிகை நயன்தாராவின் தாயார் கொலையாகிவிட்டதாக இன்று காலை ஹைதராபாத்தில் செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007
20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதன் மூலம் இந்திய கேப்டன் டோணி புதிய பெருமை ஒன்றையும் அடைந்துள்ளார்.உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரியவராக கபில்தேவ் மட்டுமே இருந்து வந்தார். 1983ம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பின்னர் நமக்கு அது கனவாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில் 20-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று கபிலின் சாதனையை சமன் செய்துள்ளார் டோணி.டெண்டுல்கர், டிராவிட், கங்குலி என ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், இளையவர்களை வைத்துக் கொண்டு அசத்திய டோணி சாம்பியன் பட்டத்தையும் வென்று இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை நாம், பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை இன்றும் நிரூபித்து சரித்திர சாதனை படைத்து விட்டது இந்தியா.பிரதமர் வாழ்த்து:20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்தியர்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ளது.இந்த வெற்றி தொடரட்டும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இந்த ஆட்டத்தில் மட்டுமல்லாது, தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடியது என்று கூறியுள்ளார்.இன்றைய இறுதிப் போட்டியை மன்மோகன் சிங் தொடக்கம் முதல் ரசித்துப் பார்த்ததாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.




