This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
October 31, 2007
குஜராத்: 7 பேரை உயிருடன் எரித்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை
மழையால் சுவர் இடிந்து குழந்தை பலி
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்ற விவசாயியின் மகன் மனோ கார்த்திக் (வயது 2).அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மோசமான நிலையில் இருந்த மாடசாமியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மனோ கார்த்திக் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
புதுக்கோட்டை-சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட 120 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.புதுக்கோட்டை அருகே கூழையன்விழுது என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 120 பேருக்கு சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.இதனால் இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட்-ஆர்எஸ்எஸ் மோதல்: கம்யூ பிரமுகர் படுகொலை, பாலக்காட்டில் பந்த்
பாலக்காடு: பாலக்காடு அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் இன்று பாலக்காடு முழுவதும் பந்த் அனுசரிக்கப்படுகிறது.பாலக்காடு அருகேயுள்ள கடுங்காங்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்(45) மற்றும் ரவீந்தர்(34). உறவினர்களான இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.கடந்த சில மாதங்களாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சியினருக்கும் கடுங்காங்குன்னு பகுதியில் கடும் மோதல் நடந்து வருகிறது.மோதலை தவிர்ப்பதற்காக கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு லேசான அமைதி திரும்பியதால் 2 வாரங்களுக்கு முன் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.இந் நிலையில் நேற்றிரவு கோபாலகிருஷ்ணனும், ரவீந்திரனும் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இவர்கள் இருவரையும் வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ரவீந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கம்யூனிஸ்ட் பிரமுகர் கோபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பாலக்காடு மாவட்டம் முழுவதும் பந்த நடத்த அக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இன்று காலை முதல் பாலக்காடு மாவட்டம் முழுவதும் பஸ், லாரி, ஆட்டோ எதுவும் இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.இந்த பந்த்தால் பாலக்காடு முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தமிழகத்திலிருந்து பாலக்காட்டுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
4 மாதத்தில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
மேட்டூர்: தமிழகத்திலும், கர்நாடகத்திலும பெய்து வரும் கன மழையால் காவிரியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதன் மூலம் 4 மாதங்களுக்குள் 7வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பெய்த கன மழையினால் அந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது தமிழகத்தில் பருவமழை பெய்யாவிட்டாலும், கர்நாடகத்தில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் மேட்டூர் அணை நிரம்பியது.இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் ஒரு முறையும், ஆகஸ்ட் மாதத்தில் இரு முறையும், செப்டம்பர் மாதத்தில் 3 முறையும் நிரம்பியது மேட்டூர்.இந் நிலையில் தற்போது தமிழகத்திலும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது.தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 55,087 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 32,620 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வருமான வரி சோதனை!
திருச்சி: முசிறியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் முசிறியில் வருவாய் கோட்டாட்சியராக அருணாச்சலம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பு திருவள்ளூரில் வேலை பார்த்து வந்த இவர் முசிறிக்கு மாற்றலாகி வந்து 9 மாதங்கள் தான் ஆகிறது.அருணாச்சலம் ஏகத்துக்கும் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து முசிறி, திருத்தணியில் உள்ள அருணாச்சலத்தின் வீட்டிலும், சித்தூரில் உள்ள அவருடைய பங்களாவிலும் ஒரே நேரத்தில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.அவர் பணிபுரியும் ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.முசிறியில் உள்ள அருணாசலத்தின் வீட்டில் இருந்து ரூ. 1.25 லட்சம் ரொக்கம் மற்றும் பல சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக தொடர்ந்து அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத வருமானம் ரூ. 13,000 கொண்ட அருணாச்சலத்திடம் ரூ. 60 லட்சத்துக்கும் மேல் சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
October 30, 2007
வெடிவிபத்து...!
கடலூர் அருகே உள்ள ஒரு தனி நபருக்குச்சொந்தமான வெடிக்கடை கிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். கடையின் உரிமையாளர் உட்பட கிடங்கில் பணிபுரிந்த ஒரு சில நபர்கள் அதிக காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கடலூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
மைனாரிட்டியிஸத்தை எதிர்க்கிறேன்- நரேந்திர மோடி
October 28, 2007
‘I Got A Call Saying, What’s This? All Of Gujarat Is Sleeping?
Dave: This is Kandhariapur… Hindus are gradually decreasing here… Muslims are more in number…
TEHELKA: So Harshadbhai sustained 75 percent burns…
Dave: It happened…
குஜராத் மறைக்கப்பட்ட உண்மைகள்...?
உங்கள் பார்வைக்கு: http://www.youtube.com/watch?v=FmwO9wg7QuE&NR=1
October 27, 2007
தெஹல்கா ஆபரேஷன்: டிவி சானல்கள் இருட்டடிப்பு!
அகமதாபாத்: குஜராத் கலவரம் குறித்த தெஹல்கா பத்திரிக்கையின் ஸ்டிங் ஆபரேஷன் குறித்த செய்தியை ஒளிபரப்பிய ஆங்கில-இந்தி சேனல்களை அம் மாநில அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன், டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.செய்திகள் இல்லாத பிற சானல்கள் மட்டும் தெரிந்தன.சர்ச்சைக்குரிய செய்திகள், குறிப்பாக மோடிக்கு எதிரான செய்திகள் வந்தால், உடனடியாக அந்த சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட் செய்து விடுவது குஜராத்தில் வழக்கமாக உள்ளது.சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோதும் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.குஜராத்தில் சிட்டி கேபிள் மற்றும் அந்தரிக்ஷ் என இரு பெரிய கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. இவைதான் குஜராத் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்துகின்றன.சேனல்கள் தெரியாதது குறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக அந்த சேனல்களை காட்ட முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.
October 21, 2007
கப்பலில் வந்த கழிவுகள்
அமெரிக்காவிலிருந்து அங்குள்ள நகராட்சி மற்றும் மருத்துவமனை கழிவுகள் அடங்கிய 3 கன்டெய்னர்கள் கப்பலில் கேரளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ‘இந்தியாவை கழிவுகள் கொட்டுமிடமாக’ மாற்றவேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளார்.
சரக்கு போல அங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் கேரளத்தில் மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. “இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கப்பலில் கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டுள்ளேன். அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்பிரச்னை குறித்து உயர்நிலை அளவில் கொண்டு செல்லப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நியூயார்க் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள், பிளாஸ்டிக், மக்கும் தன்மையுடைய பொருள்கள், மருத்துவமனை கழிவுகள், அறுவைச் சிசிக்சைக்குப் பயன்படுத்தப்படும் கையுறைகள், நாப்கின்கள் ஆகிய தடைசெய்யப்பட்ட பொருள்கள் கண்டெய்னரில் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்று கன்டெய்னர்களையும் வந்த இடத்துக்கே திரும்பி அனுப்புமாறு சுங்க துறையிடம் கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. “தொழில்மயமான நாடுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றும் முயற்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த கப்பலில் 12 கன்டெய்னர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் கேரளத்துக்கு குறிப்பாக கொச்சிக்கு அடிக்கடி கப்பல்களில் வருவதாக வந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காகிதக் கழிவுகள் என்ற பெயரில் வரும் கன்டெய்னர்களில் நோய்களை உண்டாக்கும் கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. அவைகளை மறுசுழற்சி செய்வதற்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காகித கழிவுகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் தன்மையுள்ள உணவுப் பொருள்கள், கண்ணாடி துகள்கள், கம்ப்யூட்டர் உதிரிப் பொருள்கள் ஆகியவை கண்டெய்னரில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக” கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜி.ராஜ்மோகன் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!!
கோவை: கட்டிட விபத்து பலி 12 ஆக உயர்வு
கோவை உக்கடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 3 பேர் பெண்கள். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்கடம் பஸ் நிலையம் அருகே கடந்த 1971ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதில் ஏ பிளாக்கில் மொத்தம் 25 வீடுகள் இருந்தன. நான்கு மாடிக் கட்டடம் இது.
இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிய நிலையில் மிகவும் பாழடைந்து சிதிலமான நிலையில் காணப்பட்டது. எனவே இங்கு குடியிருப்பது ஆபத்தானது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஏற்கனவே இங்கு குடியிருந்தவர்களிடம் எச்சரித்து காலி செய்யும்படி கூறியிருந்தனர்.
ஆனால் குடியிருந்தவர்களில் பலர் காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் கோவையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் உக்கடம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கினர்.
நேற்று காலை முதலே இந்தப் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென நான்கு மாடிக் கட்டடம் அப்படியே பொலபொலவென இடிந்து தரைமட்டமானது.
இதில் வீடுளைக் காலி செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர், போலீஸார், பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை ஜெய்னுலாப்தீன் (25), ரபீக் (24), திணேஷ் (20), அப்துல் கபீர் (30), ரமேஷ் (35), 10 வயது சிறுவன், துளசி, யாஸ்மின், நீலவேணி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டோர் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்னர்.
மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மீட்புப் பணியில் விரைவு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். 6 பொக்லைன் எந்திரங்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த குடியிருப்பில் மொத்தம் 100 பேர் வரை குடியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையிலேயே வீடுகளைக் காலி செய்து விட்டனர். 30 பேர் வரை மட்டும் இருந்தனர். இவர்களில் பலர் டிவி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வீடுகளில் இருந்தபோதுதான் இந்த விபரீதத்தில் சிக்கிக் கொண்டனர்.
இறந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம்:
இதற்கிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
October 14, 2007
போலி பாஸ்போர்ட்: வாலிபர் கைது
திருச்சி:போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்ற நபரை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அது போலியானது என்று தெரிய வந்தது.பால்ராஜும் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார். இதையடுத்து போலீஸாரிடம் பால்ராஜ் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கலைஞரின் புதிய சானல்கள்
October 9, 2007
மக்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால்... ராமதாஸ் எச்சரிக்கை
விழுப்புரம்:மரக்காணம் பகுதியில் அனல்மின் நிலையம் அமைப்பது குறித்து மக்களின் தீர்ப்பை கருணாநிதி மதிக்காவிட்டால், தமிழக அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மரக்காணம் பகுதியில் அனல்மின் நிலையம் அமைய இருப்பது குறித்து ராமதாஸ் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டார். பின்னர் அவர் பேசியதாவது,இங்கு நான் கருத்து கேட்பதற்கு பாமக சார்பில் வரவில்லை. அண்மையில் நான் துவக்கிய தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விவசாய குடும்பங்களை சந்திக்க வந்துள்ளேன். அனல்மின் நிலையம் அமைக்க, விவசாய விளை நிலங்களை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தக் கூடாது.தொழிற்சாலைகளை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த விஷயத்தில் ராமதாசின் கருத்தே எனது கருத்து என்றும் அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.இப்பகுதி விவசாயிகளுக்கு மின்சாரம் வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு வாழ்க்கை தரும் விளை நிலங்களை அழித்துவிட்டு அனல்மின் நிலையம் துவக்கக் கூடாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலங்களைத் தருவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை.பாரம்பரியமாக வாழும் கிராமங்களை அழித்து மக்களின் வாழ்வாதரத்தைக் கெடுத்து அதனால் வரப்போகும் முன்னேற்றம் தேவையில்லை. வெளிநாட்டுக்காரனை கூட்டி வந்து அங்கு அமைக்கும் அனல்மின் நிலைத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு வேலை தருவோம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை.நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை தரவில்லை. மரக்காணம் வட்டாரத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் யாருமில்லை. இங்கு நிலம் தந்தால் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை தருவது நிச்சயமில்லை.அப்படியே வேலை கொடுத்தாலும் அதிகம் படிக்காதவர்களுக்கு என்ன வேலை தரப்போகிறார்கள். வேலை தருவதாகக் கூறுவது பித்தலாட்டம். ஆகவே நிலங்களை அரசு கையகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும், நிலங்களைத் தரமாட்டோம் என்றும் ஒவ்வொரு ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றி அதை அரசுக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்.மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை முதல்வர் கருணாநிதி மதித்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் மதிக்காவிட்டால், விவசாய விளைநிலத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நான் போராட்டம் நடத்துவேன்.கந்தாடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு அனல்மின் நிலையம் அமைக்காமல், விளை நிலங்களை அழிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்பேன் என்று ராமதாஸ் பேசினார்.
பெரியகுளம் அருகே பயங்கர கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு-4 பேர் காயம்
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தலித் வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்கள், அரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுளை வீசியும் கலவரத்தை அடக்கினர்.பெரியகுளம், ஜெயமங்கலம் அருகே நடுப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. தலித் சமூகத்தினர் இந்தக் கோவிலில் வழிபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் பிரபலமான இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் விழா எடுக்கப்பட்டு, சாமி வேடம் பூண்டு ஊர்வலமும் நடைபெறும்.சாமி வேடம் பூண்டு ஊர்வலம் நடத்துவதில் நடுப்பட்டி மற்றும் சிண்டுவம்பட்டி கிராம மக்களுக்கிடையே பிரச்சினை எழுந்ததால், ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. அப்போது சிண்டுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தினர் திடீரென சாமி வேடம் போட்டு ஊர்வலமாக கிளம்பினர்.இதைப் பார்த்த நடுப்பட்டி கிராமத்தினர் ஆத்திரமடைந்து சிண்டுவம்பட்டி கிராமத்தினருடன் மோதலில் இறங்கினர். கல்வீச்சில் தொடங்கிய மோதல் பின்னர் அரிவாள்களுடன் பெரும் மோதலமாக மாறியது.இதையடுத்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இரு கிராமங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கம்பு, அரிவாள்களுடன் துரத்தி துரத்தி மோதிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.கலவரத்தை அடக்க வந்த போலீஸாரையும் கிராமத்தினர் தாக்க முயன்றதால் நிலைமை மோசமானது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் கூட்டம் கலையாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.இந்த மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தை தென் பிராந்திய ஐஜி சஞ்சீவ் குமார் நேரில் வந்து பார்த்தார். டிஐஜி கிருஷ்ணமூர்த்தியும் விரைந்து வந்தார்.வன்முறை தொடர்பாக 7 பேர் கைது செயய்ப்பட்டுள்ளனர். இரு கிராம மக்களிடையேயும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!
வேலூர்: மகள் முறையாகும் தனது அண்ணன் மகளை, மனைவியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த காமக் கொடூர வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.அரக்கோணத்தை அடுத்துள்ள உரியூரை சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மகள் வேளாங்கண்ணி (18). சூசைராஜின் தம்பி ஆரோக்கியசாமி. இவருக்கு திருமணமாகி மார்கரெட் என்ற மனைவியும் இருக்கிறார். இவர் சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அண்ணன், தம்பி இருவரின் வீடும் அருகருகில் உள்ளது. சூசைராஜின் வீடு சமீபத்தில் பெய்த மழையின் இடிந்து விழுந்து விட்டதால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தனர்.இந் நிலையில் அண்ணன் மகள் வேளாங்கண்ணியின் மீது ஆரோக்கியசாமியின் காமக் கொடூர வக்கிரப் பார்வை விழுந்துள்ளது. இதை மனைவி மார்கரெட்டிடம் சொல்லியுள்ளார். கணவனின் கேடு கெட்ட எண்ணத்தைத் தட்டிக் கேட்கத் தவறிய மார்கரெட், வேளாங்கண்ணியை அடைய ஆரோக்கியசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். வேளாங்கண்ணியிடம், உனது சித்தப்பா நைட் ஷிப்ட் வேலைக்கு போய்விட்டார். அதனால் துணைக்கு எங்கள் வீட்டில் வந்து படுத்து கொள் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். தூங்குவதற்கு முன்பாக வேளாங்கண்ணிக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார் மார்கரெட்.சித்தியின் கொடூர சதியை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணும் பாலை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். நள்ளிரவில் அவருக்கு நினைவு வந்துள்ளது. அந்த சமயத்தில், சித்தப்பா ஆரோக்கியசாமி, மனைவியுடன் துணையுடன் தன்னை கற்பழித்தது தெரிய வந்து குரல் கொடுத்து சத்தம் போட்டுள்ளார்.ஆனால் சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என ஆரோக்கியசாமியும், மார்கரெட்டும் மிரட்டியுள்ளனர். பயந்து போன வேளாங்கண்ணி பேசாமல் இருந்து விட்டார்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆரோக்கியசாமி, பலமுறை தனது அண்ணன் மகளை மிரட்டியே சீரழித்து வந்துள்ளார். இதன் காரணமாக வேளாங்கண்ணி கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.மகள் யார் மூலமோ கர்ப்பமாகி விட்டதாக நினைத்திருந்த சூசைராஜுக்கு, தம்பிதான் இந்தக் கொடுமைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.இதையடுத்து ஆரோக்கியசாமி, மார்கரெட் ஆகியோர் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் மார்கரெட்டைக் கைது செய்தனர். ஆரோக்கியசாமி தப்பி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.மனைவியுடன் துணையுடன், அண்ணன் மகளையே கற்பழித்த அராஜக சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மன அழுத்தம் அதிகம்-கே.கே.எஸ்.ஆர்.ஆர்.
சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மன அழுத்தம் அதிகம்-கே.கே.எஸ்.ஆர்.ஆர்.
திருநெல்வேலி:கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்குத்தான் மன அழுத்தமும் பதட்டமும் அதிகம் உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.நெல்லையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான அறுவைச் சிகிச்சை முகாம், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து ெகாண்டு ராமச்சந்திரன் பேசுகையில், ஊனமுற்றோர் வாழ்வில் மறுவாழ்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு அதிகம் உள்ளது.மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. மனிதனாக பிறப்பதே அரிது. அதிலும் ஊனமில்லாமல் பிறப்பது அரிது.மருத்துவம் படிக்க இடம் கிடைத்தவர்கள் கை நிறைய சம்பளம் என்பதால் என்ஜினியரிங் துறைக்கு செல்கின்றனர். மருத்துவ துறையை தேர்ந்தேடுத்தால் எம்பிபிஎஸ் முடித்து எம்டி, எம்எஸ், எம்.சி.எச். படிக்க பல ஆண்டுகள் ஆகி விடுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர்.ஆனால் கம்யூட்டர் எஞ்சினியர்களுக்குதான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பது சுகாதார துறை சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கம்யூட்டர் என்ஜீனியர்கள் மத்தியில் அதிகளவில் விவாகரத்துகள் உள்ளன. கம்யூட்டர் முன் அமர்ந்து கொண்டே இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கிறது.ஆனால் டாக்டர்கள் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடன் பேசுகின்றனர். இதனால் மன உளைச்சல் குறைந்து விடுகிறது. மருத்துவ துறையில் பணியாற்றுபவர் இறக்கும்வரை சம்பாதிக்கலாம். மனிதன் இருக்கும் காலம் வரை மருத்துவ துறை இருந்தாக வேண்டும் என்றார்
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 25 பேருக்கு 7 ஆண்டு சிறை
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 25 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 10 பேருக்கு 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.இன்று 35 பேருக்கு தண்டனை விவரத்தை நீதிபதி உத்தராபதி அறிவித்தார். 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் வரும் 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும் மற்ற 7 பேருக்கான தண்டனை விவரம் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிப்பு
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிப்பு
கடப்பா:ஆந்திரமாநிலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும் 4 வழிப்பாதைக்காக அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிக்கப்பட்டது.ஆந்திரமாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள மானபுலிவெந்தலாவில் அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு உள்ளது. இங்கு அவருடைய தாயார் வசித்து வருகிறார்.நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 4 வழிச்சாலைகள் ஆந்திராவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 4 வழிச்சாலை ராஜசேகர ரெட்டியின் வீட்டிற்கு அருகில் அமையவிருக்கின்றது.சாலையை விரிவு படுத்த வேண்டியிருப்பதால் வீட்டை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனராம். இதற்கு கடப்பா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முதல்வரிடம், இந்த சாலையை வேறு வழியாக மாற்றி விடலாமா என்று கேட்டுள்ளார்கள்.அதற்கு முதல்வர், மக்களின் பயன்பாட்டிற்காக எனது வீட்டை இடித்தால் தவறு கிடையாது. எனது வீட்டை இடிப்பதற்காக இப்பகுதியில் அமையவிருக்கும் சாலை திட்டத்தை வேறு வழியாக மாற்ற தேவையில்லை. நீங்கள் தாராளமாக வீட்டை இடித்துக் கொள்ளலாம் என்று கூறி அனுமதியளித்தார்.இதைக் கேட்ட அதிகாரிகள் முதல்வருக்கு பெரும் நன்றி தெரிவித்தார்கள். தற்போது முதல்வரின் தனது சொந்த செலவிலேயே வீடு இடிக்கப்பட்டு வருகிறது.மக்களுக்காக தனது வீட்டை இடிக்க அனுமதி கொடுத்த ஆந்திர முதல்வரை அம்மாநில மக்கள் பாராட்டி தள்ளுகிறார்கள்.
சென்னையில் ரவுடிகள் வேட்டை ஒரே நாளில் 1000 பேர் வளைப்பு
சென்னையில் ரவுடிகள் வேட்டை ஒரே நாளில் 1000 பேர் வளைப்பு
சென்னை:சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 63 பிரபல ரவுடிகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.சென்னை நகரில் சமீபத்தில் சில என்கவுண்டர்கள் நடந்தது. முக்கியமான பங்க் குமார், வெள்ளை ரவி ஆகிய பிரபல தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் சின்னச் சின்ன ரவுடிகளையும், பழைய குற்றவாளிகளையும் வளைத்துப் பிடித்துப் போடும் நடவடிக்கையை சென்னை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.அதன்படி தற்போது நள்ளிரவு நேரங்களில் நகர் முழுவதும் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி ஆங்காங்கு ரெய்டுகளை நடத்தி ரவுடிகளை வளைத்துப் பிடித்து வருகின்றனர்.2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிரடி வேட்டையில் சில பிரபல ரவுடிகள் உள்பட 1035 பேர் சிக்கினர். இந்த ரவுடி வேட்டையில் மொத்தம் 444 ரோந்துப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முழுவதும் சல்லடை போட்டு ரவுடிகளையும், சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.இவர்களில் 63 பேர் ரவுடிகள் ஆவர். 111 பேர் பழைய குற்றவாளிகள். 39 பேர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள். இதுதவிர மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டியதாக 93 பேர் பிடிபட்டனர்.ஸ்டோர்மிங் ஆபரேஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த நள்ளிரவு வேட்டை தொடரும் எனவும், ரவுடிகளின் கொட்டம் முழுமையாக அடக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.இதுதவிர ஹெல்மட் அணியாமல் சென்றதாக 1379 பேர் பிடிபட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பதவியிலிருந்து விலகுகிறார் குமாரசாமி: ஆளுநர் அறிவுரை எதிரொலி
பெங்களூர்:பதவியிலிருந்து விலகுவது நல்லது என்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து இன்று மாலைக்குள் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகத்தில் அரசியல் சூழ்நிலை உச்ச கட்ட குழப்பத்ைத எட்டியுள்ளது. ஒப்பந்தப்படி ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்காததால், குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இதையடுத்து குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது.இதையடுத்து காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனையில் இறங்கியது. இந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு கோரி ஆளுநர் தாக்கூரிடம் மனு அளித்தது.இந்த நிலையில் குமாரசாமிக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள எதிராக லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர்.இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்தனர். மாநிலத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டசபை காங்கிரஸ் தலைவர் தரம்சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநரை சந்தித்தது.அப்ேபாது குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறி விட்டது. குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தர விரும்பவில்லை. இனியும் குமாரசாமி அரசு பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை வலியுறுத்தினர்.மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான, பொதுச் செயலாளர் பிருத்விராஜ் செளகானும், ஆளுநரை சந்தித்து சுமார் 2 மணி நேரம் விவாதித்தார். அவரும், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு கோரினார்.இந்த நிலையில், பதவியிலிருந்து விலகுமாறு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், முதல்வர் குமாரசாமியைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் கர்நாடகத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆளுநரின் கோரிக்கை குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று மாலைக்குள் எனது நிலையை அறிவிப்பேன் என்றார்.ஆனால் ஆட்சியில் நீடிப்பதற்கான எந்த வழியும் இல்லாததால், முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி விலகி விடுவார் என்று தெரிகிறது. இன்று மாலையில் தனது முடிவை குமாரசாமி அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து கர்நாடகத்தில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
மூளையில் அடைப்பு - ரியாத்தில் அவதிப்படும் புதுக்கோட்டை வாலிபர்
ரியாத்:ரியாத்தில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர், மூளையில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அப்பாஸ் காஜா முஹைதீன்.மூளையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு பக்கம் வாதத்தால் பாதிக்கப்பட்டு ரியாத் சுமேஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,ரியாத்தில் தனது ஸ்பான்சர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார் முஹைதீன். தற்போது மூளையில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அந்த ஸ்பான்சர் உதவ முன்வரவில்லை.இதையடுத்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டி சில நல் உள்ளம் கொண்ட சகோதரர்கள் முயற்சி செய்து இதுவரை 3000 ரியால் நன்கொடையாக சேர்த்துள்ளனர்.அவருக்கு நல்ல உள்ளம் படைத்தோர் உதவ வேண்டும் என தஃபர்ரஜ் (TAFAREG) உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
தொப்புளில் பம்பரம் விட்டவரெல்லாம் ஆட்சி அமைக்க முடியுமா? - சரத் 'நச்'
October 2, 2007
திருடனைப் பிடிக்க முயன்றவர் ரயிலிலிலிருந்து விழுந்து பலி
திருவனந்தபுரம்: ஓடும் ரயிலில் பிக்பாக்கெட் அடித்த திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து இறந்தார். கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் தாசன். இவர் தனது மகளுக்கு திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்வதற்காக மகளோடு புறப்பட்டு சென்றார். அதற்காக ஆலப்புழையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு ரயிலில் புறப்பட்டு சென்றார். தனது மகளுடன் அவர் தனது மகளுடன் சாதாரண பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகிலிருந்தவன் அவருடைய பையிலிருந்து பர்ஸை எடுத்துக் கொண்டு ஓடினான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தாசன், பிக்பாக்கெட் திருடனை விரட்டி சென்றார். ஓடும் ரயிலில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ரயில் அதிகாலையில் வர்க்கலை என்னும் சந்திப்புக்கு அருகில் மெதுவாக சென்றது. இதைப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாக்கெட் திருடன், தாசனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடினான். தாசன் ரயிலுக்கும், வர்க்கலை சந்திப்பு பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும், போலீசாரும் திருடனை விரட்டிப் பிடித்தனர்.
தமிழகத்தில் 48 மணி நேரம் மழை நீடிக்கும்
சென்னை:தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.அதிகபட்சமாக நேற்று செஞ்சியில் 190 மி.மீ மழையும், ஆலங்காயம் மற்றும் போளூர் பகுதிகளில் 80 மி.மீ மழையும் பெய்துள்ளது.இது தவிர செங்கல்பட்டு, கண்ணூர், மதுராந்தகம், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கோட்டை, சீர்காழி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.மேலும் சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதே போன்று புதுவையிலும் அடுத்த 48 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு 'பூட்டு மேல் பூட்டு'!
கரூர்:கரூரில் அதிமுக அலுவலகத்திற்கு இரட்டை பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர், தாந்தோணி நகர அதிமுக அலுவலகம் திண்டுக்கல் செல்லும் சாலையில் மில் கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்திற்கு வழக்கம் போல் நேற்று நிர்வாகிகள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வழக்கமாக போடப்படும் பூட்டுக்கு மேல் ஒரு பூட்டை யாரோ மர்ம ஆசாமிகள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இத்தகவல் தாந்தோணி நகர அதிமுக செயலாளர் பெரியசாமிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் உடனே அலுவலகத்திற்கு வந்து பார்த்து நடந்தது என்ன என விசாரித்தார்.உடனே அவர் இத்தகவலை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தார்.இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி மீது உள்ள கோபத்தில் யாரோ சிலர் இப்படி ஒரு பாதக செயலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.ஆனால் இப்பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல டாக்டர் மீது கற்பழிப்பு புகார்!
திருச்சியில் உள்ள பிரபல டாக்டர் மீது கொடுக்கப்பட்ட கற்பழிப்பு புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக இருப்பவர் ரமேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மணப்பாறை கிளினிக்கில் அதே பகுதியை சேர்ந்த போதும்பொண்ணு என்ற பெண் இவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராகவும், மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து வைத்தியம் பார்த்து வரும் டாக்டர் ரமேஷ் கிளினிக்கில் அவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன்.என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டார். தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அவரிடம் நான் கேட்டபோது அவர் என்னை திட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறார்.எனவே டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளார். இம்மனு மீது விசாரணை நடத்திய திருச்சி எஸ்பி ராஜசேகர் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் இல்லை என அவர் மனுவை நிராகரித்து விட்டார்.இதனால் போதும் பொண்ணு தனக்கு நியாம் வேண்டி தமிழக முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.சிறுவன் செய்த சிசேரியனுக்கு அடுத்த படியாக, மேலும் ஒரு டாக்டர் பிரச்சனை மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதிக்கு எந்த கவலையும் இல்லை-சரத்குமார்
சென்னை:தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் விளம்பரத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததுள்ளார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சேது சமுத்திர திட்டத்திற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பந்த் நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்த பந்த் குறித்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் நான் முதலிலேயே தெரிவித்திருந்தேன்.பந்த் நடத்த தடைகோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாங்கள் முதலில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தடைவிதித்தது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் பொறுமை காத்திருந்தால், தமிழத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அசம்பாவிதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.அதைவிடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் என முதல்வர் நடத்தியிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதை காட்டுகிறது.அவருக்கும், அவரது கூட்டணிக் கட்சிகளுக்கும் எப்படியாவது அரசியல் விளம்பரம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வமும், அவசரமும் மேலோங்கியிருக்கிறது என்பதும் வெளியாகி விட்டது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
புதுவை அரசை டிஸ்மிஸ் செய்க - அதிமுக
புதுச்சேரி:சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி புதுச்சேரியில் முழு அடைப்பை நடத்திய புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உண்ணாவிரதம் என்ற போர்வையில் புதுவையிலும் பந்த் நடத்தியுள்ளனர்.இன்று காலை கடைகள் அனைத்தையும் திமுக கூட்டணியினர் கட்டாயப்படுத்தி மூடச் செய்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுவை காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் சாயா சர்மாவிடம் நாங்கள் புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையிலானது. புதுச்சேரிக்கென தனியாக உத்தரவு தேவையில்லை. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தப்பட்டதைத் தடுக்கத் தவறி விட்டார் புதுவை முதல்வர் ரங்கசாமி என்றார் அவர்.
திமுக அரசை கலைக்க பா.ஜ வலியுறுத்தல்
உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் எதிரொலியாக, தமிழகத்தில் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இன்றைய நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளது. இதன் பிறகும், திமுக அரசு ஆட்சியில் நீடிக்கக்கூடாது.
அதேபோல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவையும் உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இதை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக செய்யாவிட்டால், நீதித்துறையை அவமதித்த பழி திமுக மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஏற்பட்டு விடும். அதன் விளைவுகளை பிரதமர் மன்மோகன் சிங்தான் சந்திக்க வேண்டிவரும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முடிவு செய்தால் அதை பாரதிய ஜனதா முழுமையாக ஆதரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
தயாரிப்பாளராகும் அனீஸ் ஜீவா
மறைந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அனீஸ், விரைவில் தயாரிப்பாளராகிறார். ஜீவா விட்டுச் சென்ற நல்ல சினிமாவை தான் தொடர்ந்து தயாரித்து தமிழ் ரசிகர்களுக்குக் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
Click here for more images |
ஒளிப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, ரசிகர்களை கவர்ந்த ஜீவா, இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். 12பி அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கொடுத்தார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வந்த தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக ரஷ்யா சென்றிருந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் ஜீவா.
தற்போது தாம் தூம் படத்தின் மிச்சப் பகுதிகளை ஜீவாவின் மனைவி அனீஸே இயக்கி முடிக்கவுள்ளார். ஆனால் படத்தின் 95 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் இது நிச்சயமாக ஜீவா படமாகவே இருக்கும். மீதக் காட்சிகளையும் கூட அவர் நினைத்தது போலவே படமாக்குவேன் என்று அனீஸ் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை முடித்து விட்டு சினிமாவில் தீவிரமாக இறங்கவுள்ளார் அனீஸ். அதாவது தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கப் போகிறார் அனீஸ். தனது நிறுவனத்துக்கு விஷன் திவா ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்கப் போவதாக கூறியுள்ளார். ஜீவாவின் கனவுகள் அனைத்தையும் இந்த நிறுவனத்தின் படங்கள் மூலம் நனவாக்கப் போவதாகவும் அனீஸ் கூறியுள்ளார்.
கையில் தற்போது சில கதைகளையும் அனீஸ் வைத்துள்ளாராம். இந்தக் கதைகளை ஜீவா உயிருடன் இருந்தபோது அவருடன் விவாதித்தவையாம். இவற்றை அனீஸே இயக்கவுள்ளாராம்.
ஆல் தி பெஸ்ட் அனீஸ்!
மதுரையில் ஹலோ எப்.எம். ரேடியோ தொடக்கம்
மதுரை:
மாலை மலர் நிறுவனத்தின் சார்பில் மதுரையில் ஹலோ எப்.எம். என்ற ரேடியோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் ஹலோ எப்.எம் காலடி எடுத்து வைத்துள்ளது.
தினத்தந்தி குழுமத்தின் கீழ் வரும் இந்த ரேடியோ சேவை இன்று காலை தொடங்கியது.
இதில் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த எப்.எப். சேவையை 106.4 அலைவரிசையில் கேட்கலாம்.
இந்த ரேடியோவின் அறிமுக நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது.
இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மருதமுத்து, மதுரை சரக டிஐஜி ஜெயந்த் முரளி, மாலை மலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமும் திருக்குறள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த சேவை தொடங்கும் என பாலசுப்பிரமணிய ஆதித்தன் தெரிவித்தார்.
இந்த ஹலோ எப்.எம் சேவையை மதுரையை சுற்றி 70 கி.மீ சுற்றளவுக்கு கேட்க முடியும்.
விரைவில் திருச்சி, கோவை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த எப்.எம். சேவை தொடங்கவுள்ளது.
ஷார்ஜா - கோவை புதிய விமான சேவை
ஷார்ஜா - கோவை புதிய விமான சேவை
மத்திய கிழக்கு நாடுகளின் முதலாவது குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் ஷார்ஜா மற்றும் கோவை இடையே அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தனது விமான சேவையைத் துவக்கியுள்ளது. இவ்விமானசேவை வாரந்தோறும் இரண்டு முறை இருக்கும். நவம்பர் மாதம் முதல் இச்சேவை வாரத்திற்கு மூன்று முறையாக அதிகரிக்கப்படும்.
ராமரை ஏன் கெட்ட விஷயங்களுக்கே பயன்படுத்துகிறீர்கள்? - கருணாநிதி கேள்வி
சென்னை:
பாபர் மசூதியை இடிக்க ராமர், சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த ராமர் என ஏன் ராமர் பெயரை கெட்ட விஷயங்களுக்கே இழுக்கிறீர்கள், நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி நேற்று சென்னையில் திமுக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இத்திட்டம் 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு, உருப்படியாக உருவாக்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981ல் இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி கொடுத்தது.
இருப்பினும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு திட்டத்திற்கான உரிய கவனத்தை முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை.
பாஜக - திமுக அரசின் பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வந்தபோது சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் நடந்தது என்னவென்றால், ஏற்கனவே பலமுறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றனரே தவிர இந்த்த திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்,நமது நாடு மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோர பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும் பயனடைவார்கள். வர்த்தகம் பெருகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்.
ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை விடாது வலியுறுத்துவோம்.
இதை நான் சொல்லவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா சொல்லியது இது. அவர்கள்தான் இன்று இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கட்சியின் அவைத் தலைவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி நடத்த இருந்த அறப் போராட்டத்தை, கடையடைப்புப் போராட்டத்தை தடுத்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நீதிமன்றத் தடையில்லை, தோழமைக் கட்சிகள் நடத்தலாம் என்று கூறியிருந்தால் மகிழ்ச்சி. நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தால் மகிழ்ச்சி. நடத்தலாம் என்று கூறியிருந்தால் சட்டம் ஒழுங்கை மீறக் கூடாது என்று அரசை எச்சரித்திருப்பார்கள்.
தடை இல்லாமல் நடத்திக் கொள்லளாம் என்று கூறியிருந்தால், நாம் வெற்றிகரமாக அமைதியாக நடத்தியிருந்தாலும், ஒரு நான்கு பேர் இவ்வளவு நடந்தது என்று டெல்லிக்குப் போவார்கள். இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக.
சேது கால்வாயில் மூன்றில் இரண்டு பங்கு தோண்டி முடிக்கப்பட்டு, 2462 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலே பெரும்பகுதி பணம் செலவழிக்கப்பட்டு திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சிகள் உறுதியுடன் ஒடுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை பெருமக்களாகிய நீங்கள்தான் சிந்தித்துப் பார்த்து உள்ளத்திற்குள் பதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
பாபர் மசூதியை இடிக்கவும் ராமர் பெயர், சேது திட்டத்தை எதிர்க்கவும் ராமர் பெயர்தானா. ராமரை ஏன் இந்த பாடுபடுத்துகிறீர்கள். ஏன் இப்படி ராமரை பலிகடாவுக்குகிறீர்கள். கெட்ட காரியத்துக்குப் பயன்படுத்தும் பெயரை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தக் கூடாதா.
இந்த மதவெறியை மாய்ப்பதுதான் இங்கே இருக்கிற கட்சித் தலைவர்களின் நோக்கம், குறிக்கோள். அதை முடிக்கும் வரை ஓய மாட்டோம். உறங்க மாட்டோம் என்றார் கருணாநிதி.
என்ன வந்து விடப் போகிறது?- தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், இந்தத் திட்டம் கனவாகிப் போய் விடாது. இந்த்த திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நாளை (இன்று) ஒரு வாகனமும் ஓடப் போவதில்லை. ஒரு காக்கா கூட இயங்காமல் நிறுத்திக் காட்டுவோம். அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெறும்.
கடலில் எடுக்கப்படும் மணலை கடலிலேயே கொட்டி விடுவோம் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. நிபுணர்கள் கூறிய 6 தடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் தற்போதைய திட்டம். அதை மாற்றுவது கடினம்.
3000 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் 300 அடியை இடித்தால் போதும். இதில் என்ன வந்து விடப் போகிறது என்று கோபமாக கேட்டார் தா.பாண்டியன்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்தியாவில் மீண்டும் சித்தாந்தப் போர் தெடாங்கியுள்ளது. ராமர் பாலம் என்று கூறப்படும் பாலத்தை தேவைப்பட்டால் குண்டு வைத்துத் தகர்ப்போம். முதுபெரும் வயதில் உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலைஞர் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
இதேபோல கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கருணாநிதியை, உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினர்.
மனைவி தலையை வெட்டிய கணவன்!
விருதுநகர்:
தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வராத மனைவியின் தலையை வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் சேர்ந்த மேலப்புதூரை சேர்ந்தவர் காசிராஜன். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கூலி வேலை செய்துவரும் காசிராஜனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதனால் தனபாக்கியம் கோபித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு காசிராஜன் தனபாக்கியத்தை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தனபாக்கியம் மறுத்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட காசிராஜன் சம்வத்தன்று தனபாக்கியம் வேலை செய்யுமிடத்திற்கு சென்று அவரது தலையை வெட்டி எடுத்தார். தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்த போது காசிராஜன் தப்பி ஒடிவிட்டார்.
தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய காசிராஜனை வலை வீசி தேடி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற எச்சரிக்கை-உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்திய கருணாநிதி
சென்னை:
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து முதல்வர் கருணாநிதி இன்று காலை தொடங்கிய உண்ணாவிரத்தை திடீரென உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். அவருக்குப் பின்னால் டாக்டர் ராமதாஸும் கிளம்பிச் சென்றார். ஆனால் மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு தலையிட்டு கருணாநிதியின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டன. உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடப்பதாக இன்று அதிமுக தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
திமுக அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அது அறிவுறுத்தியது.
இந் நிலையில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த முதல்வர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 11 மணியளவில் திடீரென உண்ணாவிரத மேடையில் இருந்து கிளம்பிச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதி கிளம்பிச் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பற்காக மத்திய அரசோ அல்லது சோனியா காந்தியோ தலையிட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கருணாநிதி, ராமதாஸ் சென்று விட்டாலும் கூட திமுக கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. மற்ற தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலகம் திரும்பினர்.
முன்னதாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த கருணாநிதி, உச்சநீதிமன்றம் பந்த் நடத்த தடை விதித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் பந்த் நடத்தவில்லை என்று பதிலளித்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் முதல்வரை சந்தித்தபோது, உண்ணாவிரதம் இருக்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அப்படி எந்த உத்தரவையும் நேற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்ததாக தெரியவில்லை.
உண்ணாவிரதப் போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
தமிழகத்தில் அரசியல் சட்ட சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம் என்றார்.
தலைமைச் செயலாளர் பேட்டி:
அதே போல பஸ்கள் ஓடாததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பஸ்கைள உடனடியாக இயக்குமாறு தலைமை செயலாளர் திரிபாதி காலை 11 மணிளவில் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடத் தொடங்கின. நிருபர்களிடம் திரிபாதி கூறுகையில்,
உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் முழுமையாக கடைப்பிடிக்கிறோம்.
தமிழகத்தில் இன்று பேருந்துகள் ஓடத் தயாராகவே இருக்கின்றன. ஊழியர்கள் வராததால் பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் 51 பேருந்துகள் மட்டுமே ஓடியுள்ளன. நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் படிப்படியாக சீரடையும்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. வன்முறை ஏதும் இல்லை.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்
கேள்வி: போக்குவரத்து ஊழியர்கள் ஏன் பணிக்கு வரவில்லை?
பதில்: ஏன் வரவில்லை என விசாாித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தலைமை செயலகத்தில் ஊழியர்கள் பணிக்கு வந்தனரா?
பதில்: சில ஊழியர்கள் பணிக்கு வரவில்லையே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வந்துள்ளனர். தலைமை செயலகம் வழக்கம் போல் செயல்படுகிறது என்றார்.
கேள்வி: பஸ்கள் ஓடாதது நீதிமன்ற அவமதிப்பாகாதா?
பதில்: பொது மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. அப்படி இருக்கும்போது இது நீதிமன்ற அவமதிப்பாகாது என்றார்.
முன்னதாக, உண்ணாவிரதம் நடந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை திறந்திருந்த ஒரு ஹோட்டல் மீது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். சரமாரியாக கற்களை வீசி அந்த ஹோட்டலை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து அந்த ஹோட்டல் உடனடியாக மூடப்பட்டது.
திமுக-அதிமுக மோதல், போலீஸ் துப்பாக்கி சூடு
மன்னார்குடியில் திமுக, அதிமுக தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதல் கடைசியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று திமுக மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத பந்தலில் இருந்த திமுகவினரிடம், அங்குவந்த அதிமுகவினர் தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட தகராறு பின்பு கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முனைந்தும் முடியவில்லை. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் கலவரக்காரர்கள் நாலாப்புறமும் தலைதெறிக்க ஓடினர். இந்த மோதலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி: இரட்டை டம்பளர் முறைக்கு எதிராக தலித் மக்கள் போராட்டம்!
தேனி மாவட்டத்தில் தீண்டாமை தலைவிரித்தாடும் பகுதிகளில், இரட்டை டம்பளர் முறை கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்து தலித் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. பல கிராமங்களில் உள்ள டீக்கடைகளில், தலித் மக்களுக்கு ஒரு டம்பளர், மற்றவர்களுக்கு ஒரு டம்பளர் என இரட்டை டம்பளர் முறை நடைமுறையில் உள்ளது.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்பாலான கிராம புற டீ கடைகளில் உயர் ஜாதியினர்க்கு ஒரு கிளாஸிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வேறு கிளாஸிலும் டீ வழங்கப்படுவதாக தலித் மக்கள் புகார் கூறுகின்றனர்.
வீரபாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம டீக் கடைகளில் இந்தத் தீண்டாமைக் கொடுமை அதிக அளவில் உள்ளது. இது குறித்து பல்வேறு சேவை அமைப்புகளும், தலித் அமைப்புகளும் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.
இதையடுத்து இந்த ஊர்களில் உள்ள டீக் கடைகளில் புகுந்த தலித் அமைப்பினர் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிளாஸ்களை உடைத்து எறிந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் தலித் அமைப்பினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.