This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

November 5, 2007

பாக். - பரபரப்பு நிகழ்வுகள் ..

பாகிஸ்தானில் மீண்டும் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிப் போடும் முஷாரப்பின் முயற்சியாக இது கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் குழப்பமான நிலைதான் நிலவுகிறது. அதன் முத்தாய்ப்பாக நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் பாகிஸ்தானில் நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ..2007, மார்ச் 9 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை முஷாரப் சஸ்பெண்ட் செய்தார். முஷாரப்புக்கு எதிராக வக்கீல்கள் கொந்தளித்தனர்.

முஷாரப்பின் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது.ஜூலை 10 - இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதியில் தீவிரவாதிகள் புகுந்து கொண்னர். ஒரு வாரமாக நடந்த முற்றுகைக்குப் பின்னர் ராணுவம் உள்ளே புகுந்து கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தனஜூலை 20 - இப்திகார் செளத்ரியை சஸ்பெண்ட் செய்தது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை அப்பொறுப்பில் நியமித்தது. முஷாரப்புக்கு இது பலத்த அடியாக அமைந்தது.

ஜூலை 27 - அபுதாபியில் பெனாசிர் பூட்டோவை சந்தித்தார் முஷாரப். ராணுவத் தளபதி பதவியிலிருந்து முஷாரப் விலக வேண்டும் என நிபந்தனை விதித்தார் பூட்டோ. அதை முஷாரப் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

செப்டம்பர் 10 - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட அவர் மீண்டும் சவூதி அரேபியாவுக்கே நாடு கடத்தப்பட்டார்.

அக்டோபர் 2 - பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது.அக்டோபர் 6 - பாகிஸ்தான் அதிபர் தேர்தல் நடந்தது. முஷாரப் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதாக தகவல் வெளியானது.அக்டோபர் 18 - பெனாசிர் பூட்டோ நாடு திரும்பினார்.

அவரது கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. 139 பேர் கொல்லப்பட்டனர்.அக்டோபர் 31 - முஷாரப் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டார் பெனாசிர். அடுத்த நாளே துபாய் புறப்பட்டுச் சென்றார்.

நவம்பர் 1 - அவசர நிலை பிரகடனம் என்ற மிரட்டலால் தங்களை பணிய வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.நவம்பர் 3 - அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ராமர் குறித்த பேச்சு: கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்!

மும்பை: ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் மும்பை, பொரிவலி பெருநகர நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமர் குறித்து அவதூறான கருத்துக்களை முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனுவை விசரித்த நீதிமன்றம், டிசம்பர் 11ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு உத்தரவிட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

November 3, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்திலும் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களிலும் துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் அதிபராக அண்மையில் முஷரப் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டது சட்டப்படி சரியா என்பது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக முஷாரப் காத்திருக்கிறார். இந்த தீர்ப்பு முஷாரப்புக்கு எதிராக செல்லலாம் என்று அவரது அரசாங்கத்தில் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர நிலை பிரகடனத்தை அடுத்து துபாயில் உள்ள நாட்டின் எதிர்கட்சித் தலைவர் பேனசிர் பூட்டோ நாடு திரும்புவது குறித்து முரண்பட்ட தகவல்கள் வருகின்றன.

சிவாஜி கணேசன் மனைவி மரணம்

சிவாஜி கணேசன் மனைவி மரணம்

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் சென்னையில் இன்று மரணமடைந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள். சிவாஜி கணேசன் இறந்தது முதலே அவருடைய நினைவாக சோகத்துடன் இருந்து வந்தார். வெளி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்பதில்லை.

சென்னை கடற்கரையில் நடந்த சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழா மற்றும் சந்திரமுகி படத்தின் வெற்றி விழா ஆகியவற்றில் மட்டுமே அவர் பங்கு கொண்டார்.

வீட்டோடு இருந்து வந்த கமலா அம்மாளுக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.

கமலா அம்மாளுக்கு வயது 68. அவருக்கு நடிகர் பிரபு, தயாரிப்பாளரான ராம்குமார் என இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

காலை 10.50 மணிக்கு கமலா அம்மாள் உயிர் பிரிந்தபோது குடும்பத்தினர் அனைவரும் அருகிலேயே இருந்தனர்.

அவரது உடல் தி.நகர் போக் சாலையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கமலா அம்மாள் மறைவுச் செய்தியைக் கேட்டதும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

சிவாஜி கணேசன் வீட்டில் திரையுலகினர் பலரும் திரண்டுள்ளனர். கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை இறுதிச் சடங்கு:

சிவாஜி - கமலா அம்மாள் தம்பதியின் இரு மகள்களான சாந்தியும், தேன்மொழியும் தற்போது வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களுக்கு தாயின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் வந்தவுடன் நாளை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை கமலா அம்மாளின் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இங்குதான் சிவாஜி கணேசனின் உடலும் தகனம் செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

கண்ணீர் அஞ்சலி:

கமலா அம்மாளின் உடலுக்கு முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பல்துறை பிரமுகர்கள் என சகல தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகமே திரண்டு வந்து கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தியது.

சிவாஜி கணேசனுக்கும், கமலா அம்மாளுக்கும் 1952ம் ஆண்டு மே 1ம் தேதி தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் திருமணம் நடந்தது. முதல்வர் கருணாநிதிதான் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 120 கோடியில் தென் தமிழகத்தில் சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனை

சேலம்: மதுரை அல்லது திருச்சி அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை அல்லது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் மேம்படுத்தி, சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக மாற்ற மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.சேலம் அரசு மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். 12 அல்லது 14 மாதங்களில் இது முடிவடையும்.

இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை புறநகரில் 700 படுக்கைகளைக் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்படும். ரூ. 300 கோடியில் இது அமையவுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் பிரான்ஸ் புற்றுநோய் ஆய்வு கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.

November 1, 2007

சவூதியில் 1.2 லட்சம் பாக். 'உம்ரா யாத்ரீகர்கள்' மாயம்!

சவூதியில் 1.2 லட்சம் பாக். 'உம்ரா யாத்ரீகர்கள்' மாயம்!:

இஸ்லாமாபாத்: சவூதிக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

உம்ரா என்பது, வருடத்தின் எந்த நாளிலும் முஸ்லீம்கள் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும்.இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டு மத விவகாரத்துறை செயலாளர் வக்கீல் அகமது கான் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு உம்ரா புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இன்னும் நாடு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து சவூதி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம்.இவ்வளவு பேர் காணாமல் போனதற்கு சவூதி நிர்வாகம்தான் பொறுப்பேற் வேண்டும். உம்ரா விசாக்களை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி சவூதி சென்றார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

சவூதி நிர்வாகம் அங்கீகரித்த ஏஜென்டுகள் மூலம்தான் விசாக்களை வழங்கி வருகிறது. எனவே இதில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை.இத்தனை பேர் காணாமல் போனதற்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பாக முடியாது.

சவூதி அரேபியாவில் காணாமல் போன பாகிஸ்தானியர்கள், சவூதி நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் உம்ரா விசா பெற்று அங்கு சென்றவர்கள் ஆவர்.

ஹஜ் யாத்திரை குறித்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரடியாக மேற்கொள்கிறது. ஹஜ் யாத்திரை சென்ற அனைத்துப் பாகிஸ்தானியர்களும் நாடு திரும்பி விட்டனர். உம்ரா சென்றவர்களில்தான் இத்தனை பேர் மொத்தமாக காணாமல் போயுள்ளனர் என்றார் அவர்.

காணாமல் போன லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களில் பெரும்பாலானவர்கள் சவூதியிலேயே தங்கி சிறு சிறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக உள்ளூர் ஏஜென்டுகளுக்கு அவர்கள் பெரும் பணத்தைக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது உம்ரா விசாவைப் பயன்படுத்தி, சவூதியில் வேலை பார்க்க இவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீப காலமாக சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் நாட்டவரை சவூதி அரசு கண்டுபிடித்து நாடு கடத்தியுள்ளது.

இந்த நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களைக் காணவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!

இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!:
பாக்தாத்: இராக்கில் உள்ள மிகப் பெரிய அணை ஒன்று உடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் மற்றும் அமெரிக்க அரசின் பிற அதிகாரிகள் இணைந்து மதிப்பிட்டு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இராக்கின் மோசூல் பகுதியில் உள்ள அணை உடையக் கூடிய பேராபத்தில் உள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இராக்கின் 2வது பெரிய நகரம்தான் மோசூல்.

பாக்தாத் நகருக்கு அருகே இந்த நகரம் உள்ளது. மோசூல் அணை உடைந்தால், மோசூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி விடும். நகரில் 20 மீட்டர் ஆழத்திற்குத் தண்ணீர் மிதக்கும். அருகில் உள்ள தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளிலும் கூட நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்த அணையின் நிர்வாகியான தனூன் அயூப் கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அணையைப் பலப்படுத்தும் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும், அதனால்தான் அணை இந்த ஆபத்தை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க பொறியாளர்கள் குழு கூறியுள்ளது.இந்தப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அமெரிக்க மற்றும் இராக் அதிகாரிகள் தீவிரமாக விவாதித்துக் கொண்டுள்ளனர்.

அணை உடையும் ஆபத்தைத் தடுக்க வேண்டுமானால், டைக்ரீஸ் நதியின் குறுக்கே 2வது அணை உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க பொறியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு அதிக செலவாகும், மேலும் இது தேவையற்றது என்று இராக் அதிகாரிகள் கூறுகின்றனராம்.

கடந்த மே மாதம் அமெரிக்க உயர் அதிகாரிகள் அணை உடைந்தால் ஏற்படும் அபாயம் குறித்து இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு கடிதம் எழுதி எச்சரித்துள்ளனர்.

மோசூல் அணை மோசூல் நகரைக் காப்பாற்றுவது இயலாத காரியம். அணை நிரம்பும் நிலை ஏற்பட்டால், மோசூல் நகரில் 20 மீட்டர் ஆழத்திற்கு மிகப் பெரும் தண்ணீர் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடும் என அமெரிக்க பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பேராபத்தை சந்தித்துள்ள மோசூல் அணை கடந்த 1980ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை அமைந்துள்ள இடமே பெரும் சர்ச்சைக்குரியதாகும். அணை அமைந்துள்ள இடம் சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த இடம். தண்ணீர் இங்கு அதிகம் சேர்ந்தால் கரைந்து போய் விடக் கூடியது.

இந்த இடத்தில் எப்படி அணையைக் கட்டினார்கள் என்று அமெரிக்க பொறியாளர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.அணை உடையும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அணையின் சுவர் பல்லாயிரக்கணக்கான தடுப்புப் பொருட்களைப் போட்டு முட்டுக் கொடுத்து வருகின்றனராம்.

இருந்தாலும் கூட, விரைவான மாற்று நடவடிக்கையை எடுக்காவிட்டால் அணை உடையும் ஆபத்தை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க குழு எச்சரித்துள்ளது.

ஜப்பான்-கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

ஜப்பான்-கலிபோர்னியாவில் நிலநடுக்கம்:

டோக்கியோ & ஆக்லாண்ட்: கலிபோர்னியா மாநிலத்தின் சான்ஜோஸ் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்ஜோஸ் நகருக்கு 15 கிலோமீட்டர் வட கிழக்கில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. இதன் அளவு 5.6 ரிக்டராக இருந்தது.

இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கலிபோர்னியா மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் சான்ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கலிபோர்னியா மாநிலம் காட்டுத் தீயால் பெரும் பொருட் சேதத்தை சந்தித்து திணறி வருகிறது. இந்த நிலையில் பூகம்பம் வேறு தாக்கியதால் அம்மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்:அதே போல ஜப்பானிலும் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக ஆடியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

ஜப்பானில் உள்ள மரியானா தீவுப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடின. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. தீவுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் ஜப்பான் நாட்டு அரசு விடுக்கவில்லை.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனே தெரியவில்லை.

கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்

கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்:

லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு அருகே காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் நாசமானதற்கும், அந்தத் தீ கலிபோர்னியாவுக்குப் பரவியதற்கும் ஒரு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அந்த சிறுவனக்கு 13 வயதுக்குள்தான் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த 22ம் தேதி லாஸ் ஏஞ்செலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிடா பகுதியில் காட்டுத் தீயினால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாசமாகின. 63க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.

இதற்கு இந்த சிறுவன்தான் காரணமாம்.இந்த சிறுவன் காட்டுப் பகுதியில் தீக்குச்சிகளை வைத்து விளையாடியுள்ளான். அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில்தான் இத்தனை நாசம் ஏற்பட்டு விட்டதாக லாஸ் ஏஞ்சலெஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் விட்மோர் கூறியுள்ளார்.முதலில் மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இதற்கு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த சிறுவனை தற்போது போலீஸார் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பி விட்டனர். அவன் மீது வழக்கு தொடருவதா, வேண்டாமா என்று சட்ட நிபுணர்களின் கருத்தை போலீஸார் கேட்டுள்ளனராம்.

இங்கு பிடித்த தீதான், கடந்த வாரம் கலிபோர்னியா காட்டுப் பகுதிக்குப் பரவி 2300க்கும் மேற்பட்ட கட்டடங்களை சேதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர்.

இலவச டிவி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்

இலவச டிவி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்:

திருநெல்வேலி: நெல்லையில் ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் இதுவரை அரசின் இலவச கலர் டிவி கிடைக்காத பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, மேலப்பாளையம் சேவை பாரதி அமைப்பாளர் ஆர்.கணேசன் தலைமையில் ஏராளமான பெண்கள் ஆட்சியாளர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்,

தமிழக அரசு ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கி வருகிறது. நெல்லை மாநகராட்சி 30வது வார்டில் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தாமல் இஷ்டப்படி கலர் டிவி வழங்கியுள்ளனர்.

இதில் வசதி படைத்தவர்கள் பலருக்கு கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை.போலியான முகவரியில் வசிப்பவர்களுக்கு எல்லாம் இந்த பயனை பெற்ற நிலையில் நேர்மையான முகவரியில் குடியிருப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச கலர் டிவி வழங்கப்படாத ஏழைகளுக்கு உடனடியாக டிவி வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிவராஜ் பாட்டீல் சரியில்லை - லாலு

சிவராஜ் பாட்டீல் சரியில்லை - லாலு:

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலால் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவே முடியாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டில் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை அப்படியே விட்டு விடக் கூடாது. இதற்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

தீவிரவாதம், கலவரங்களை ஒடுக்கும் முக்கிய பொறுப்பு உள்துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் உண்டு. ஆரம்பத்தில் இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றுக்கு நான் அமைச்சராக விரும்பினேன்.

தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் பலவீனமானவர். அவரால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அது அவரால் இயலாத காரியம் என்று பாட்டீலை தாக்கியுள்ளார் லாலு.