This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

December 21, 2008

கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.

மோடி தலைமையிலான சங்பரிவாரங்கள் மும்பையில் நடத்திய கொலை வெறி தாக்குதலில் உயிர் நீத்த நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே அவர்கள் கொல்லப்பட்ட சதியில் இருக்கும் சந்தேகத்தை அந்துலே அவர்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியக் காரணத்தினால் சங்பரிவார எம்.பிக்கள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தால் தனது மந்திரிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மந்திரியாக இருந்தும் தனது கருத்தை மக்கள் மன்றத்தில் (பாராளுமன்றத்தில்) சுதந்திரமாக எடுத்துச்சொல்ல முடிய வில்லையே என்ற ஆதங்கத்தால் விரக்தி அடைந்த அந்துலே அவர்கள் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முக்கியமாக அவர் எடுத்து வைத்த சந்தேகம்:

தாஜ், ஓபராய் ஹோட்டல்களின் வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலின் போது அதற்கருகில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருப் போலீஸ் வேனை மட்டும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் ஒன்றினால் கடத்தி செல்லபட்டது ஏன் ?

அவ்வாறு கடத்தி செல்லப்பட்ட அந்த வேனுக்குள் தான் கார்கரே அவர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டு;ள்ளார் என்ற தனது வலுவான சந்தேகத்தை துணிச்சலுடன் பாராளுமன்றத்தில் பதிந்திருக்கின்றார் அந்துலே அவரகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இது பாகிஸ்தானிகளுடைய தாக்குதல் அல்ல என்பதை தெளிவுப படுத்துகிறது.

ஆஸ்திரேலிய விமானங்கள் மோதல்-இந்திய பெண், பயிற்சியாளர் பலி

Chandrika Gaur and Joanne Ethell
மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகளின் 18 வயது மகள் சந்திரிகா கெளர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகே விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இன்னொரு விமானத்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் சந்திரிகா கெளர். இவரது பெற்றோர் டாக்டர்கள். இந்தியாவில் வசிக்கின்றனர். சந்திரிகா விமான பைலட் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.

விமானத்தில் பறக்கும் பயிற்சியில் சந்திரிகா ஈடுபட்டிருந்தார். அவருடன் பயிற்சியாளர் ஜோயனா எத்தல் உடன் இருந்தார்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, நடு வானில், இன்னொரு பயிற்சி விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தை 89 வயதாகும் கென் ஆன்ட்ரூஸ் என்பவர் செலுத்தினார்.

கென் ஆன்ட்ரூஸ் 2ம் உலகப் போரின்போது பைலட்டாகப் பணியாற்றியவர் ஆவார்.

இந்த விபத்தில் பயிற்சியாளர் ஜோயனா, சந்திரிகா இருவரும் பலியாயினர்.

சந்திரிகா கடந்த சில நாட்களாகவே அதிகம் பறந்து பயிற்சி பெற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாக அவர் பயிற்சி பெற்று வந்த விமான நிலைய காபி விடுதி உரிமையாளர் எட்டி ஓமெசயா கூறினார்.

அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே தன்னால் அதிகம் பறக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் சந்திரிகா. 

காலையில் காபி சாப்பிட அவர் வந்தபோது, நான் கூட, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செட்டிலாகி விடு என கேலி செய்து கொண்டிருந்தேன்.

சந்திரிகா மிகவும் அருமையான பெண். நல்ல பழக்க வழக்கம் கொண்டவர். நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.

அவருடைய பெற்றோர்கள் டாக்டர்கள். இந்தியாவில் உள்ளனர். சந்திரிகா மிகவும் அமைதியான, மென்மையான பெண். அழகான முகத்துடன் காணப்படுவார். கோபமே வராதவர். 

விமானங்கள் குறைவாக இருந்ததால் அவர் இன்று பறப்பாரா, மாட்டாரா என்பதில் சந்தேகம் இருந்தது. அதிக அளவில் பறக்க முடியவில்லையே என்ற வருத்தமும் சந்திரிகாவிடம் இருந்தது. ஆனால் கடைசியில் விதி விளையாடி விட்டது என்றார் அவர்.

சந்திரிகா பயணித்த செஸ்னா விமானம், காசுலா என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடும் முற்றிலும் சேதமடைந்து விட்டது.

அந்த வீடு ஸ்டீபன் கான்டினா என்பவருக்குச் சொந்தமானது. விபத்து நடந்த நேரத்தில் கான்டினா அலுவலகம் போயிருந்தார். அவருடைய மனைவி பியான்கா வெலரியோவும், பிறந்து ஒரு வாரமே ஆன அவர்களது மகன் எய்டனும், சான்டா கிளாஸுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக வெஸ்ட்பீல்ட் லிவர்பூலுக்குப் போயிருந்தனர். அதனால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோல கடந்த செப்டம்பர் மாதம் சிட்னி விமானப் பயிற்சி மையத்தில் பயி்ற்சி பெற்று வந்த இந்திய மாணவரான ராகுல் சர்மா என்பவரும் பயிற்சியின்போது உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அவர் ஓட்டிச் சென்ற விமானம் சிட்னியின் தென் மேற்கில் உள்ள லூத்தன்ஹாம் என்ற இடத்தில் வயலில் விழுந்து நொறுங்கியது.

விரைவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல்?

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குளோபல் இன்டலிஜென்ஸ் சர்வீஸ் ஸ்ட்ராட்பார் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள நிலைகளைக் குறி வைத்து தாக்க இந்திய விமானப்படையும், ராணுவமும் தயார் நிலையில் உள்ளன.

பச்சைக் கொடி கிடைத்ததும் அவை களத்தில் இறங்கும். பாகிஸ்தான் தரப்பிலிருந்து தீவிரவாதிகளையும் தீவிரவாத முகாம்களையும் ஒழிக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி அனுப்பியிருந்த செய்தியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படாவிட்டால் அதற்கு எதிரான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என்று எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

கடலுக்கடியில் கேபிள்கள் துண்டிப்பு-இன்டர்நெட் சேவை பாதிப்பு

கடலுக்கடியில் கேபிள்கள் துண்டிப்பு-இன்டர்நெட் சேவை பாதிப்பு
சனிக்கிழமை, டிசம்பர் 20, 2008, 13:13 [IST]

Cable under Water
டெல்லி: சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலில் போடப்பட்டுள்ள கடலுக்கடி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தொலைத் தொடர்பு சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மொத்தம் நான்கு கேபிள்கள் சேதமடைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீத அளவுக்கு இன்டர்நெட் மற்றும் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நேற்று பிற்பகலுக்கு மேல் பல பிபிஓ நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு விட்டது.


அதேபோல சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கேபிள்கள் சேதமடைந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் கேபிள்கள் சேதமடைந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மால்டா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கேபிள்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

December 18, 2008

புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி விலை!

புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி விலை!
புதன்கிழமை, டிசம்பர் 17, 2008, 17:13 [IST]

Saudi Millionaire to award 1 million to TV reporters Shoe
பாக்தாத்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது நிருபரால் வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். 

ஈராக்கில் செய்தியாளர்களுக்கு அதிபர் புஷ் பேட்டி அளித்தபோது அவர் மீது ஒரு தொலைக்காட்சி நிருபர் தனது ஷூவை கழற்றி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூ வீசிய அந்த நிருபர் முந்தாஸர் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். 

அவர் செய்தது சரிதான் என்று பொதுமக்கள் கூறி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடக்கிறது. 

ஆளுக்கு ஒரு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு பேரணியாக சென்று ஆங்காங்கே தூணில் ஷூவை தொங்க விடுகிறார்கள். அந்த நிருபருக்கு வீரன் என பட்டம் 














சூட்டியுள்ளனர். அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் அறிவித்து விட்டது.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவை இப்போது விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளார்.

'புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக உள்ளேன்' என்று அவர் கூறியதாக சவூதி அரேபிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஷூ வீசிய அந்த வாலிபருக்கு மாவீரன் பட்டம் சூட்டி விருது வழங்கப்போவதாக கூறியிருக்கிறார் லிபியா அதிபர் முகமது கடாபியின் மகள்.

இதற்கிடையே ஷூ வீசிய முந்தாசரை போலீசார் தாக்கியதில் கை உடைந்து பாக்தாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

லெபனான் டி.வி. நிறுவனம் ஒன்று அவருக்கு புதிய வேலை தரவும் முன் வந்துள்ளது.

இதற்கிடையே, ஷூ வீசப்பட்ட வீடியோ படங்கள் ஹிட் ஆகியுள்ளன. இணைய தளங்கள் அனைத்திலுமே கிட்டத்தட்ட இந்த ஷூ வீச்சு விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.

யு ட்யூப் இணைய தளத்தில் ஏராளமான வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தது 5 லட்சம் ஹிட்டுகளைப் பெற்றுள்ளனவாம்.

ஈ பே நிறுவனம் இந்த ஷூக்களை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நீரிழி நோயாளிகள் சங்கத்துக்கு அளிக்க முன் வந்துள்ளது.